கோடித் தொகையினராவரென்று வியாசபாரதம் கூறும். இப் பெயர் நன்றாகச்சபதஞ்செய்பவ ரென்று பொருள்படும். இவர்கள் இவ்வாறே பன்னிரண்டு பதின்மூன்றாநாட்போர்களில் அருச்சுனனை அறைகூவித் தனியே அழைத்துக்கொண்டுபோய் வெகுவாகப் பெரும்போர் செய்வர் . சில- குறிப்புப்பெயரெச்சம். உகம் - யுகமென்னும் வடசொல்லின் விகாரம்; அது - காலத்தின் ஒருபேரெல்லைக்குப்பெயர்: அது- இலக்கணையாய். பலயுகங்கள் கூடிய கற்பத்தையுணர்த்தும்; கற்பம்- பிரமனது தினம். ஒவ்வொருபிரமகற்பத்தின் பகல்முடிவிலும் தீ எழுந்து உலகங்களை எரித்தழிக்கு மென்பது, புராணக்கொள்கை; அது பிரளயகாலாக்கினியெனப்படும். ஒருவர்க்கு - நான்காம்வேற்றுமை, எல்லைப்பொருளில்வந்தது. ஜகத்,மகம், சநி- வடசொற்கள். மகத்துச்சனி பெருந்தீங்குதருதற்கு உவமையாதலை "மகத்திற்புக்கதோர்சனியெனக்கானாய் மைந்தனே மணியே மணவாளா, வகத்திற்பெண்டுகள் நானென்று சொன்னா லழையேற்போ குருடா வெனத்திரியேன், முகத்திற்கண்ணிழந் தெங்ஙனம்வாழ்கேன் முக்கணா முறையோ மறையோ தீ, யுகைக்குந் தண்கடலோ தம்வந் துலவுமொற்றியூரெனுமூருறைவானே" என்ற சுந்தரமூர்த்திநாயனார் தேவாரத்திலும், "அடையார்தமக்கு, மகத்திற்சனியன்னசந்திரவாணன்" என்ற தஞ்சைவாணன் கோவையிலும் காண்க. மக நட்சத்திரத்திற் பிறந்தவனுக்குச் சனிதிசையில் மரணந்தப்பாதென்று 'நஷத்ரபலம்' என்னுஞ்சோதிடநூலால் தெரிகிறது. அன்றியும், சனி மகத்திற்சஞ்சரிக்கும்பலன் சிலதேசங்களுக்கும் சிலமனிதர்களுக்கும் யானைகளுக்கும் பீடை யென்று நூல்கள் கூறும். மகம்- இருபத்தேழு நட்சத்திரங்களுள், பத்தாவது நட்சத்திரம். இது- இலக்கணையாய், சிங்கராசியையுங் குறிக்கும்: எங்ஙன மெனின்,- இரண்டேகால்நட்சத்திரம் ஒருராசி யென்னும் வரையறைப்படி மகமும் பூரமும் உத்தரத்தில் முதற்பாதமும் சிங்கராசியாதல் காண்க. சிங்கம் சனிக்குப் பகைவீடாதலால், மகத்திற் சனி வருத்துதற்கு உவமை கூறப்பட்ட தென்றலும் ஒன்று; சிங்கம் சனிக்குப் பகைவீடாதலைச் சோதிடநூலால் அறிக. மேலும், சிங்க லக்கினத்துக்குச் சனி பாபகிருகமுமாவன். இன்னும் மகச்சனியன் கொடுமைகளைச் சோதிடம்வல்லார்வாய்க் கேட்டுணர்க. சனி - நவகக்கிரகங்களுள் ஏழாமவன்; சூரியனது மகன். இனி, உத்தர நட்சத்திரத்திற் பிறந்தவன், அருச்சுனன்; அது அவனது பற்குண னென்ற பெயராலும், "பங்குனிநிறைந்ததிங்களாதபன்பயின்ற நாளில், வெங்குனிவரிவில்வாகைவிசயனும் பிறந்தான் வென்றிப், பங்குனனென்னுநாமம் பகுதியாற்படைத்திட்டானே" என்ற சம்பவச்சருக்கத்துச் செய்யுளாலும், வடநூலாலும் தெரிகிறது. அவனை அந்நட்சத்திரத்து முதற்பாதத்தில் [சிங்கராசியில்] பிறந்தவனெனக்கொண்டால் அவனுக்குமகத்துச்சனி ஜந்மச்சனியும், மற்றைய பாதங்களில் [கன்னியாராசியில்] பிறந்தவனெனக் கொண்டால் பன்னிரண்டாமிடத்துச் சனியுமாகும்: இரண்டும் பெருந்தீங்குவிளைப்பன. பன்னிரண்டாமிடம் ஜந்மஸ்தாநம் இரண்டாமிடம் இம்மூன்றிலும் சனிநிற்றல், ஏழரைநாட்சனியென்று கொடு |