பக்கம் எண் :

280பாரதம்துரோண பருவம்

ஒப்பில்லாதபடி செலுத்துபவன்,- உவர் ஓதம் நிறத்தோன் - உப்புச்சுவையையுடைய
கருங்கடல் போலுந் திருநிறமுடையனான திருமால்; (ஆதலால்), இனி - இப்பொழுது,
அவரோடு அமர் வெல்லுதல் - அவ்விருவருடன் போரிற் சயித்தல், ஆர் ஆயின்
உம் அரிது - யாவர்க்காயினும் அருமையானதே; (எ - று.) பி - ம்:
அவனுயர்தேர்நனி.                                              (460)

64.-அதிகம்பகைதமரோடுறலாகாதெனவரசர்க்
கெதிரன்றவையிடையேவசையேதேதுபுகன்றாய்
விதுரன்றனதுளநொந்தடல்வில்லுந்துணிசெய்தான்
மதியின்றிறனறிவோர்மொழிவழிவந்திலைமன்னோ.

     (இ-ள்.) 'தமரோடு - நெருங்கிய உறவினருடன், அதிகம் பகை உறல் ஆகாது
- மிகுதியாகப் பகைமைகொள்ளுத லாகாது,' என - என்று (விதுரன் நீதி) போதிக்க,
அன்று - அச்சமயத்தில், அவையிடையே - சபைநடுவிலே, அரசர்க்கு எதிர் - பல
அரசர்கள் முன்னிலையில், (அவனைக்குறித்து), எது ஏது வசை புகன்றாய் -
என்னஎன்ன நிந்தைமொழி கூறினாய்? [மிகப்பழித்தா யென்றபடி]: (அதனால்),
விதுரன் - அவ்விதுரன், தனது உளம் நொந்து - தன்னுடைய மனம் வருந்தி,
அடல்வில்உம் துணி செய்தான் - வலிமையுயைடைய (தன்) வில்லையுந்
துணித்துப்போகட்டான்;  மதியின் திறன் அறிவோர் மொழிவழி வந்திலை -
நல்லறிவின்வகைகளை யறிந்த பெரியோர் சொன்ன நல்வழியிலே (நீ)
நடந்தாயில்லை;( எ -று.)- மன், ஓ - ஈற்றசை. பி - ம்:  மன்னா.

     கண்ணன் பாண்டவர்க்குத் தூதாய்வந்தமைபற்றி அவனையும், அவனுக்குத்
தன் வீட்டில் இடங்கொடுத்து விருந்துசெய்து உபசரித்தமைபற்றியும் பாண்டவர்க்கு
இராச்சியங்கொடுக்கும்படி  பலவாறு நீதிபோதித்து வற்புறுத்தியமைபற்றியும்
விதுரனையும் துரியோதனன் பலவாறு இராசசபையில் தூஷிக்க, விதுரன்
கடுங்கோபங்கொண்டு 'பாதகனாகிய உன்பொருட்டுப் போர்செய்யேன்;
இத்தனைநாளாய் உன்சோற்றையுண்டமைபற்றி, உனக்கு எதிராகப் பாண்டவரோடு
சேர்ந்தும் பொரேன்' என்ற சொல்லித் தனது வில்லை இரண்டு துண்டாக முறித்துப்
போகட்டுவிட்டானென்க. விதுரன் - யமதருமராசனது அம்சமென்றும்,
பரமபாகவதர்களி லொருவ னென்றும் நூல்கள் கூறும்.இவன், அருச்சுனனையும்
வீமனையும் ஒருங்கேயெதிர்க்கும் வல்லமையுடையானென்று மதிக்கப்படுவன். பாரத
யுத்தம் நடந்த சமயத்தில் இவன். பலராமனுடன் தீர்த்தயாத்திரை சென்றிட்டன
னெனஅறிக. எட்டாம்போர் நாளில் வீடுமனும் இக்கருத்துப்படக்கூறியமை
கருதத்தக்கது."மதியின் திறனறிவோர் மொழிவழிவந்திலை' என்றது, பீஷ்மன்
துரோணன் கிருபன்உலூகன் கண்ணன் முதலான நுண்ணறிவுடையோர் பலர்
கூறிய நல்லறிவைச் சிறிதும்கைப்பற்றி நடந்தில னாதலால்.             (461)

65.மன்னாகவ மதியாவிறல் வயவன்றனை விசயன்
றன்னாலொரு பகலேயுயிர் தபுவித்திட லாமோ