பக்கம் எண் :

பதினான்காம் போர்ச்சருக்கம்285

72.- அருச்சுனன் அவ்வீரர் பலரை அழித்தல்.

கன்றுசிந்தையன்கோபவெங்கனல்பொழிகண்ணினன்காலாளாய்
நின்றுதேரினுங்களிற்றினும்பரியினுநிரைநிரைதரங்கம்போற்
சென்றவீரரைத்தனித்தனிசரத்தினாற்சிதையுடற்குன்றாகக்
கொன்றுகொன்றுசூழ்வரக்குவித்தனன்மணிக்குன்றுதானெனநின்றான்.

     (இ-ள்.) (என்றுசொல்லிப் பின்பு அருச்சுனன்), கன்று சிந்தையன் -
கொதித்தமனமுடையவனும், கோபம் வெம் கனல் பொழி கண்ணினன் -
வெவ்வியகோபாக்கினியைச் சொரிகிள கண்களையுடையவனுமாய், காலாள் ஆய்
நின்று - (தேரிலேறாமலே) பதாதியாகக் கீழே நின்றுகொண்டு,- தேரின்உம்-
தேர்களின்மேலும், களிற்றின்உம் - யானைகளின்மேலும், பரியின்உம் - குதிரைகளின்
மேலும், நிரை நிரை - வரிசைவரிசையாக, தரங்கம்போல் - அலைகள்போல, சென்ற
- (மேன்மேல்) வந்த, வீரரை - வீரர்களை, தனி தனி -தனியே தனியே, சரத்தினால்
- (அவர்கள்மேலெய்த) அம்புகளினால், கொன்று கொன்று - மிகுதியாகக்கொன்று,
சிதை உடல் குன்று ஆக - நொருங்கின (அவர்களுடைய) உடம்புகள் மலைகள்
போலத் திரளும்படி, சூழ்வர குவித்தனன் - சுற்றிலும் குவித்து, மணி குன்று தான்
என நின்றான் - நீலரத்தின மலையொன்றுபோலத் தான் (இடையிலே) நின்றிட்டான்;
(எ-று.)

     அலையுமை - ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ச்சியாய் அணியணியாக
மேன்மேல் வருதற்கு. அருச்சுனனுக்கு நீலமலை நிறவுவமை. பி -ம்: சென்று
சென்றடுவீரரைத் தனித்தனிசரத்தினாற் சிரஞ்சிந்திக்.                  (469)

73.- கிருபன் முதலியோர் அருச்சுனனோடு பொருதல்.

தலைவனாமுனிகிருபனுங்கிருதனுந்துரகதத்தாமாவு
மலைவுறாமனத்தரசருஞ்சேனையுமுனைந்தணியணியாகச்
சிலைவலானெதிர்மிசைபடத்தேர்மிசைவிசையுறச்சிலைவாங்கி
வலையவாகுவின்வலியெலாங்காட்டினார்வரங்கொள்வாளிகள்வல்லார்.

     (இ-ள்.) (பின்பு), வரம் கொள் - மேன்மையைக்கொண்ட' வாளிகள் -
அம்புகளைத் தொடுத்தலில், வல்லார் - வல்லவர்களாகிய, தலைவன் ஆம் முனி
கிருபன்உம் - சிறந்த அந்தணனாகிய கிருபாசாரியனும், கிருபதன்உம்- கிருதர்மாவும்,
துரகதத்தாமாஉம்- அசுவத்தாமனும், அலைவு உறா மனத்து அரசர்உம் -
கலக்கமடையாத மனத்தையுடைய பல அரசர்களும், சேனைஉம் -
அவர்கள்சேனைவீரர்களும், முனைந்து - ஊக்கங்கொண்டு, அணி அணி ஆக -
வரிசை வரிசையாக, சிலைவலான் எதிர் - வில்லின்வல்லவனான
அருச்சுனனனுடையஎதிரிலே, தேர்மிசை - தேர்களின்மேல் (வந்துநின்று),
மிசைபட - அவன்மேலே(அம்புகள்) படும்படி, விசைஉற- வேகமாக, சிலைவாங்கி -
(தம்தம்) வில்லைவளைத்து, வலையம் வாகுவின் - வளையையணிந்த (தங்கள்)
தோள்களின், வலிஎலாம் - வலிமை முழுவதையும், காட்டினார்-; ( எ -று.)