பக்கம் எண் :

பதினான்காம் போர்ச்சருக்கம்287

மின்னல்களை [இடிகளை], போன்ற - ஒத்தன;- பாரில் நின்றவன் - தரையில்
நின்றவனான அருச்சுனன், தேரில் நின்றவர் மிசை - தேர்களில் நின்ற
அவ்வெதிரிகளின்மேல், விடு - பிரயோகித்த, கணை - அம்புகள்,- உருமைஉம்
விழுங்குவம் என - இடியையும் விழுங்கி விடுவோமென்று, உரகம் - அந்நாகங்கள்,
பாதாலத்து ஊரினின்று - அந்தப்பாதாளலோகத்திலிருந்து, ஏறுவ - மேலேறு
வனவற்றை, போன்ற - ஒத்தன; ( எ -று.)

     தேர்மீதுள்ள பகைவரால் எய்யப்பட்ட அம்புகள் காளமேகங்களினின்று
மின்னல்கள் கீழுள்ளநாகசாதிமேல் உக்கிரமாக இடிவடிவமாய் விழுவனபோலக்
கீழ்நின்ற அருச்சுனன்கணைகள் மேல் விழுந்திட, தேர்மேல்நின்ற அப்பகைவரது
அம்புகளைத் தடுக்க அவர்கள்மீது உக்கிரமாய் விரைந்தெழுந்து மேற்சென்ற
அருச்சுனனேய்த கொடிய அம்புகள் தம்மேல் விழும்இடிகளை விழுங்கி
யழித்திடக்கருதி அந்நாகங்கள் பாதாளத்தினின்று மேலெழும்பிச்
சென்றார்போலுமென்றார்; தற்குறிப்பேற்றவணி. பி - ம்:உரகர்.        (472)

வேறு.

76.- பகைவரையழித்தபின், கண்ணன் சித்தஞ்செய்த
தேரில் அருச்சுனன் ஏறுதல்.

சேணி லத்தின்மிசை நின்றமர்தொ டங்கினவர் தேர்க
                    ளிற்றனதறிந்தனநெ டுந்துவச,
நாணி யற்றனவொ டிந்தனத டஞ்சிலையு நாக முற்றவரொ
                          ழிந்தனரி ரிந்தனர்க,
ணீணி லத்தினிடை நின்றுசமர் வென்றவனு நேமி வச்ரமகு
                     டம்புனை கொ டிஞ்சியுடை,
யேணி லத்திவுளி முந்தமுனை யுந்திரத மேறி
               யிட்டனன்மு குந்தனுட னின்புறவே.

     (இ-ள்.) சேண் நிலத்தின்மிசை நின்று -உயர்ந்த இடத்தின் மேல்
[தேரின்மேல்]நின்று, அமர் தொடங்கினவர் - போர்தொடங்கின பகைவர்களுடைய,
தேர்கள்-, இற்றன - முறிந்தன; நெடுந்துவசம் - நீண்ட கொடிகள், தறிந்தன -
ஒடிந்தன; நாணி - வில்நாணிகள், அற்றன - அறுபட்டன; தட சிலை உம் -
பெரியவிற்களும், ஒடிந்தன - துண்டுபட்டன; நாகம் உற்றவர் ஒழிந்தனர் -
(அப்பகைவர்களில் இறந்து) வீரசுவர்க்கஞ் சேர்ந்தவர்கள் நீங்கலானவர்கள்,
இரிந்தனர்கள் - அஞ்சிஓடிப்போனார்கள்; நீள் நிலத்தினிடைநின்று - நீண்ட
தரையிடத்திலே நின்று, சமர் வென்றவன்உம் - போரில் வெற்றிகொண்டவனான
அருச்சுனன்,- நேமி - சக்கரங்களையும் வச்ரமகுடம் புனை கொடிஞ்சி -
வச்சிரரத்தினமயமான கலசத்தைக் கொண்ட சிகரத்தையும், உடை - உடையதும்,
ஏண் நிலத்து இவுளி முந்த மனை உந்து - வலிய போர்க்களத்தினிடத்திலே
குதிரைகள் முற்படஉக்கிரமாகச் செலுத்துகின்றதுமான, இரதம் - (தனது)
தேரின்மேல்,முகுந்தனுடன் - கண்ணபிரானுடனே, இன்பு உற - இனிமையாக,
ஏறியிட்டனன் -ஏறினான்; (எ- று.)

     இதுமுதற் பதினாறு கவிகள் - பெரும்பாலும் முதற்சீரும் ஐந்தாஞ்சீரும்
தேமாச்சீர்களும், மற்றையாறும் கூவிளங்காய்ச்