பக்கம் எண் :

290பாரதம்துரோண பருவம்

தனனுக்கு, அருளினன் - (இப்பொழுது) கொடுத்தான்; (அக்கவசம்), ஆசுகத்தினில் -
அம்புகளினாலும், ஒழிந்த பல துங்கம் முனை ஆயுதத்தினில் - மற்றும்
பலவகையான சிறந்த கூரிய படைக்கலங்களினாலும், அழிந்திடுவது அன்று -
அழிவதன்று; அதனை - அக்கவசத்தை, நீ -, செகுத்திடுதி - அழித்திடுவாய்,'
என்று- என்றுசொல்லி, துரகங்களைஉம் - (தேர்க்) குதிரைகளையும், நேர்பட -
துரியோதனனெதிரிலே செல்லும்படி, கதி விதம் பட - (பலவகை) நடைவிகற்பம்
பொருந்த, கடவினன் - செலுத்தினான்;

80.- அருச்சுனன் பகைவர்களின்மேல் அம்புமழைபொழிதல்.

கானகத்தினிடைமண்டியெரியங்கிதருகார்முகத்தின்கொண்டு
                              முனைவெஞ்சமரின்,
மேனடக்குமவர்தங்கண்மகுடங்களினுமேருவொத்துயர்புயங்
                               களினு முந்தியினு,
மானனத்தினுநுழைந்துருவவெம்பரிதியாயிரக்கிரணமும்புடை
                                   பரந்ததென,
வானகத்துவெளியின்றியணிபந்தரிடவாளிவிட்டனன்மனஞ
                           செய்துதனஞ்செயனே.

     (இ-ள்.)(அப்பொழுது), தனஞ்செயன் - அருச்சுனன்,- மனம் செய்து -
(கண்ணபிரான்கூறியதை) மனத்திலேகொண்டு,- கானகத்தினிடை மண்டி ஏரி
அங்கிதரு கார்முகத்தின் வலி கொண்டு- (காண்டவ) வனத்திற் பற்றியெரியும்
அக்கினிபகவான் (தனக்குக்) கொடுத்த (காண்டீவ) வில்லின்வலிமையால்,- முனை
வெம் சமரில் மேல் நடக்குமவர்தங்கள் மகுடங்களின்உம் - ஊக்கத்தோடுசெய்கிற
கொடிய போரில் தன்மேல் எதிர்த்துவருகிற பகைவீரர்களுடைய கிரீடங்களிலும்,
மேரு ஒத்து உயர் புயங்களின்உம்- மேருமலையைப்போன்று உயர்ந்துள்ள
தோள்களிலும், உந்தியின் உம் - நாபியிலும், ஆனனத்தின் உம் - முகத்திலும்,
நுழைந்து உருவதைத்து உட்புகுந்து அப்பாற்செல்லுமாறும்,- வெம் பரிதி ஆயிரம்
கிரணம்உம் புடைபரந்து என - உஷ்ணமான சூரியனது ஆயிரங்கிரணங்களும்
எப்புறத்தும் பரவுவதுபோல, வானகத்து வெளி இன்றி அணி பந்தர் இட -
ஆகாயத்திலே வெற்றிடமில்லாமல் நெருங்கியபந்தலிட்டாற்போல
இடைவிடாதுசென்றுபரவும்படியும், வாளிவிட்டனன்- பாணங்களைப் பிரயோகித்தான்;

81.- அருச்சுனனம்புகளினாற் பகைவர்சேனை சின்னபின்னப்படுதல்.

நாதெறித்தனதுரங்கமநெடுஞ்சிலைகணாணியற்றனவுடைந்தன
                                      தடந்திகிரி,
பாதமற்றனமதங்கயவிதங்கள்பொருபாகர்பட்டனர்மறிந்தன
                                     நெடுந்துவச,
மோதுதற்கெதிர்முனைந்தவர்சிரங்கள்பொழிமூளையிற்கள
                             மடங்கலுநெகிழ்ந்தரச,
ராதபத்திரமழிந்தனவிவன்றனுட்னார்தரத்தொடுசரந்தொட
                                  வியைந்தவரே.

     (இ-ள்.) (அருச்சுனனெய்த அம்புகளினால்),- துரங்கமம்- குதிரைகள், நா
தெறித்தன - நாக்குத் தெறித்துவிழப்பெற்றன; நெடுஞ் சிலைகள் - நீண்ட விற்கள்,
நாணி அற்றன - நாணறுபட்டன; தட திகிரி - பெரியதேர்ச் சக்கரங்கள்,
உடைந்தன- உடைப்பட்டன; மதங்கயம் விதங்கள் - யானை வருக்கங்கள்,
பாதம் அற்றன -கால்கள் அறுபட்டன; பொரு - போர்க்கு உரிய, பாகர் -
யானைதேர்குதிரை