அநேகபாணங்களை, நிலைஒன்றில் - ஒரேசமயத்திலே, முனை சேர - எதிர்சென்றுசேரும்படி, விட்டனன் - செலுத்தினான்; விடும்பொழுதின் - அங்ஙனஞ்செலுத்தியபொழுதில், அவை - அவ்வம்புகள், அந்த விறல் மாமணி கவசம் எங்கும் உடன் ஒன்றி - வலிமையுள்ளதும் சிறந்ததும்இரத்தினம்பதித்ததுமான (அந்தத்துரியோதனனது) கவசம்முழுவதிலும் ஒருசேரச் சென்று தாக்கி, ஒரு மால்வரை புயலின் நுண் துளி விழுந்த பரிசு ஆம் என - ஒரு பெரிய மலையின்மேல் மேகத்தின் சிறிய நீர்த்துளிகள் விழுந்தவிதம்போல, தலைமழுங்கி - நுனி கூரழிந்து, ஒன்றுஉம் அவன் ஆகம் உற்றில - ஒன்றேனும் அவனுடம்பிற் படவில்லை; (ஆகவே), அசஞ்சலன் - (எதற்குஞ்) சலியாத இயல்புடையவனான துரியோதனன், அசைந்திலன் - சிறிதுஞ் சலித்தானில்லை; (எ-று.) மலை காளமேகத்தின் சோனைமாரிக்குச்சிறிதுஞ்சலியாதவாறு போலவே, துரியோதனன் அருச்சுனனது பாணவர்ஷத்துக்குச் சிறிதுஞ்சலித்திலனென்க. விலங்கி = விலக்கி: சந்தம்நோக்கிய விகாரம். தன்வினை பிறவினையில் வந்ததுமாம்: இதனை, அந்தர் பாவிதணிச்' என்ப. (481) 85.- பின்பு அருச்சுனனெறிந்தவேற்படையை அசுவத்தாமன் துணித்தல். வீரன்விட்டனசரங்களவனொண்கவசமேலுறப்படுதலின்றி விழுகின்றநிலை, யோரிமைப்பினிலறிந்துகுமரன்கையயிலோடுரைக்கவுவமம் பெறுவிடங்கொளயி, றேரினிற்பொலியநின்றிருகைகொண்டுநனிசீறிமெய்ப்பட வெறிந்தனனெறிந்தளவில், வார்சிலைக்குருவின்மைந்தனதுகண்டதனைவாளியிற்றுணிபடும் படிமலைந்தனனே. |
(இ-ள்.) வீரன் - சிறந்தவீரனான அருச்சுனன்,- விட்டன சரங்கள்- (தான்) தொடுத்தவையான அம்புகள், அவன் ஒள்கவசம் மேல் உற படுதல் இன்றி - அத்துரியோதனனது ஒளியுள்ள கவசத்தின்மேல் உட்செல்லும்படி படுதலில்லலாமல், விழுகின்ற- தாக்கிக்கீழ்விழுந்திடுகின்ற, நிலை - தன்மையை, ஓர் இமைப்பினில் - ஒருநொடிப்பொழுதிலே, அறிந்து-,- குமரன் கை அயிலோடு உவமம் உரைக்க பெறு - முருகக்கடவுளின் கையிலுள்ள வேலாயுதத்தோடு (உன்னை) உவமைசொல்லும்படி (சிறப்புப்) பெற்ற, விடம்கொள் அயில் - விஷத்தையொதத [கொடிய] வேலாயுதத்தை, தேரினில் பொலிய நின்று - (தனது) தேலிலே விளங்க நின்றுகொண்டு, இருகைகொண்டு - இரண்டுகைகளாலும்எடுத்து நனி சீறி - (துரியோதனன்மேல்) மிகக்கோபித்து, மெய்பட - அவனுடம்பிலே படும்படி, எறிந்தனன் - வீசினான்; எறிந்த அளவில் - (அங்ஙனம்) வீசியவளவிலே,- வார் சிலை குருவின் மைந்தன் - நீண்டவில்லுக்கு ஆசிரியனான துரோணனது புத்திரனாகிய அசுவத்தாமன், அது கண்டு - அங்ஙனம் எறிந்ததைப் பார்த்து, அதனை - அவ்வேலை, வாளியின் - (தனது) அம்புகளினால், துணி படும்படி - துண்டாகும்படி, மலைந்தனன் - எதிர்த்துப்போர்செய்தான்; (எ -று.) |