பக்கம் எண் :

294பாரதம்துரோண பருவம்

     சுப்பிரமணியன்கைவேல், சூரபதுமனைக் கொல்லுதற்கென்று சிவபெருமான்
நிருமித்துக்கொடுத்தது. எறிந்தளவில் - தொகுத்தல்.                   (482)

86.- பிறகு அருச்சுனன் சோர்ந்து மயங்குதல்.

வாகைநெட்டயிறுணிந்திடலும்வன்பினுடன் மானிரைத்திரத
                               முங்கடவிவந்துமுத,
லாகவத்தினுலுடைந்தவரடங்கமுனையாயெதிர்த்தொருமுகம்
                                படநெருங்கி மிக,
மோகரித்துவருகின்றசெயல்கண்டமரர்மூவருக்கரியவன்கழல்
                                    பணிந்துபரி,
தாகமுற்றமர்தொடங்கவுமறந்துகமழ்தாரருச்சுனனுயங்கினன
                                      நந்தரமே.

இதுவும், அடுத்த கவியும் - குளகம்.

     (இ-ள்.) வாகை - வெற்றியைத் தரவல்ல, நெடு - நீண்ட, அயில் -
வேலாயுதம்,துணிந்திடலும்- (இவ்வாறு) துண்டுபட்டவுடனே, முதல் ஆகவத்தினில்
உடைந்தவர்அடங்க - முன்பு (தனக்குமுன்) போரில் தோற்றவரெல்லாரும்,
வன்பினுடன் மான்நிரைத்து இரதம்உம் கடவிவந்து - வலிமையுடன்  குதிரைகளை
ஒழுங்குபடுத்தித்தேரையுஞ் செலுத்திக்கொண்டுவந்து, முனை ஆய் எதிர்த்து -
துணிவுகொண்டு(தன்னை) எதிர்த்து, ஒரு முகம் பட நெருங்கி -(தன்னைநோக்கி)
ஒரேமுகமாகத்திரண்டு அடர்ந்து, மிக மோகரித்து வருகின்ற - மிகவும்
உக்கிரங்கொண்டு வருகிற,செயல்- செய்கையை, கண்டு - பார்த்து,--கமழ் தார்
அருச்சுனன் - மணம்வீசுகிறபோர்மாலையையுடைய அருச்சுனன்,- பரிதாகம்
உற்று - மிக்கவருத்தத்தை யடைந்து,அமர் தொடங்கஉம் மறந்து - போர்
செய்தற்கும் மறந்து, அமரர் மூவருக்குஅரியவன் கழல் பணிந்து -
மூன்றுமூர்த்திகட்கும் அருமையான ஸ்ரீமந்நாராயணனதுதிருவவதாரமாகிய
கண்ணபிரானது திருவடிகளை நமஸ்கரித்து, உயங்கினன் -சோர்ந்துநின்றான்;
அநந்தரம் - பின்பு,- ( எ -று,)-" கண்ணன் வலம்புரி வாயில்வைத்தனன்" என
வருங்கவியோடு முடியும்.

     அருச்சுனன் சோர்ந்தது நின்றமைக்குக் காரணம்- தனது ஆயுதங்கள்பலவும்
பயன்படாமையைக் கண்டமனவெழுச்சிக்குறைவு. திருப்பாற்கடலிலெழுந்தருளியுள்ள
திருமாலின் வியூகமூர்த்திகளாகிய வாசுதேவன் சங்கர்ஷணன் பிரத்யும்நன்
அநிருத்தன் என்ற நால்வருள் பிரதானமூர்த்தியான வாசுதேவன், பிரமவிஷ்ணு
ருத்திரரூபிகளாய் படைத்தல் காத்தல் அழித்தல் தொழில்களைச் செய்யும் மற்றை
மூவர்க்குங் காரணனாகி அவர்கட்கும் அரியவனாய்ச் சிறத்தல் பற்றியும்,
அவ்வாசுதேவனே இங்குக்கண்ணனாக அவதரித்தமைபற்றியும், 'மூவருக்கு
அரியவன்' என்றார். மூவர்- தொகைக்குறிப்பு. முற்றும்மை விகாரத்தால் தொக்கது.
'பரிதாபம்' என்றார்போல, 'பரிதாகம்' என்றார்; வடசொல்: இதில் பரி - மிகுதியை
விளக்குவதோர் உபசர்க்கம். அமர்தொடங்கவும் என்ற சிறப்பும்மை -
அமர்தொடங்குதலின் இன்றியமையாமையைக் காட்டும். பி-ம்;-மைந்தினுடன். (483)