பக்கம் எண் :

பதினான்காம் போர்ச்சருக்கம்297

உடனே அந்தவிருட்சத்தை வேரொடுபெயர்த்துப் பெரியதிருவடியின்
திருத்தோளின்மேல் வைத்தருளி, அப்பொழுது இந்திராணி தூண்டிவிட்டதனால்
வந்துமறித்துப்போர்செய்து இந்திரனைச் சகலதேவசைனியங்களுடன்
சங்கநாதத்தினாலேபங்கப்படுத்தி, பின்பு வணங்கின அவனது பிரார்த்தனைப்படியே
பாரிஜாதமரத்தைத்துவாரகைக்குக் கொண்டுவந்து சத்தியபாமை வீட்டுப்
புறங்கடைத்தோட்டத்தில்நாட்டியருளின னென்பதாம்.                  (485)

89.-அப்பொழுது கண்ணன் அருச்சுனனுக்குச்சிறந்தவேல் தருதல்.

பானிறப்புரவியுந்திரதங்கடவுபாகன்மற்றவர்மயங்கியதுணர்ந்த
                                          தருளி,
மேனிலத்துநரகன்றனுயிர்கொண்டதொருவேல்கொடுத்திதனில்
                             வென்றிடுதியென்றளவில்,
வானவச்சிரன்மகன்கடிதுவந்துபெருவாழ்வுபெற்றனனெனும்
                                    பரிவினன்றனது,
ஞானபத்தியொடெழுந்துவலம்வந்துதிருநாண்மலர்ப்பதம்
                          வணங்கியதுகொண்டனனே.

     (இ-ள்.) பால் நிறம் - பால்போல வெளுத்தநிறத்தையுடைய, புரவி -
குதிரைகளை, உந்தி - தூண்டி, இரதம் - (அருச்சுனனது) தேரை, கடவி -
செலுத்துகின்ற, பாகன் - சாரதியான கண்ணன், அவர் மயங்கியது உணர்ந்தருளி -
அப்பகைவர்கள் மோகித்த தன்மையை அறிந்தருளி, மற்று- பின்பு, மேல் நிலத்து
நரகன்தன் உயிர் கொண்டது ஒரு வேல் கொடுத்து - முன்னொருகாலத்திலே
பூமிதேவிபுத்திரனான நரகாசுரனது உயிரைக்கொணடதாகிய ஒரு வேலாயுதத்தை
(அருச்சுனனுக்கு)க் கொடுத்து, இதனில் வென்றிடுதி என்ற அளவில் - (இதனால்
துரியோதனனைச்) சயித்திடுவா யென்று அருளிச்செய்தவளவிலே,- வானம் வச்சிரன்
மரகைன் - தேவலோகத்திலுள்ள வச்சிராயுதப்பாணியான இந்திரனது புத்திரனாகிய
அருச்சுனன், கடிது - விரைவாக, உவந்து - சந்தோஷித்து, பெரு வாழ்வு பெற்றனன்
எனும் பரிவினன் - பெரிய செல்வவாழ்க்கையைக் பெற்றிட்டேனென்ற
அன்பையுடையவனாய், தனது ஞான பத்தியொடு - தன்னுடைய
தத்துவஞானத்தோடும் பக்தியோடும், எழுந்து-, வலம் வந்து- (கண்ணபிரானைப்)
பிரதட்சிணஞ்செய்துவந்து, திரு நாள் மலர் பதம்வணங்கி - அழகிய அன்று
மலர்ந்தாமரைமலர்போன்ற (அப்பெருமானது) திருவடிகளை நமஸ்கரித்து, அது
கொண்டனன் - அந்த வேற்படையைப் பெற்றுக்கொண்டான்; ( எ -று.)

     நரகனைக்கொன்றகதை:-திருமால் வராகாவதாரஞ்செய்து பூமியைக்
கோட்டாற்குத்தியெடுத்தபொழுது அத்திருமாலின் பரிசத்தாற் பூமிதேவிக்குக்
குமாரனாய்ப் பிறந்தவனும், அசமயத்திற் சேர்ந்து பெறப்பட்டவனாதலால்
அசுரத்தன்மைபூண்டவனுமான நரகனென்பவன், பிராகஜ்
யோதிஷமென்னும்பட்டணத்திலிருந்து கொண்டு, சகலபிராணிகளையும்
மிகஉபத்திரவித்து, தேவர் சித்தர் கந்தருவர் முதலானவர்களுடைய
கன்னிகைகளையும் ராஜாக்களுடைய கன்னிகைகளையும் பலரைப் பலாத்காரமாய்
அபகரித்துக் கொண்டுபோய்த் தான் மணம்புணர்வதாகக்கருதித் தன்மாளி