வைத்திருந்தன ளென்பதுபற்றி யென்க. இனி, தேவகிமைந்தன் கண்ணன் எனவேகொண்டு, சாத்தகிஎன எழுவாய் வருவிப்பினுமாம். (497) 101.-சாத்தகி கிருதவன்மனைத் தோற்பித்தல். விருதொடுமுந்தவிளங்கியகொற்றக் கிருதனையாதிக்கேழலொடாப்பான் ஒருதனுவுங்கொண்டூர்பரிமாவு மிரதமும்வில்லுமிமைப்பிலழித்தான். |
(இ-ள்.) ஆதி கேழலொடு ஒப்பான் - ஆதிவராகமூர்த்தியோடு ஒப்பவனான சாத்தகி,-விருதொடு-பிருதாவளிகளுடனே, முந்த விளங்கிய-முற்பட [எதிரிலே] சிறப்பாகக்காணப்பட்ட, கொற்றம்-வெற்றியையுடைய கிருதனை-கிருதவன்மாவை,- ஒருதனுஉம் கொண்டு-தனது ஒருவில்மாத்திரத்தைக் கொண்டு,-ஊர் பரிமாஉம் இரதம்உம் வில்லுஉம் இமைப்பில் அழித்தான்-தேரை நடத்திக்கொண்டு விரைந்துசெல்லுகிற குதிரைகளும் தேரும் வில்லும் கண்ணிமைப்பொழுதிலே அழியச்செய்தான்; 'ஆதிக்கேழல்'-விஷ்ணுவின் அம்சமான வராகமூர்த்தி: அப்பெருமான் சிறிதும்சிரமமில்லாமற் பெரியஉலகமுழுவதையும் எளிதில் தாங்கும் வல்லமையுடையனா யிருப்பதுபோல எப்படிப்பட்ட பெரும்போரையும் அலட்சியமாகத் தாங்கும் ஆற்றலுடையவன் என்பார், 'ஆதிக்கேழலொடொப்பான்' என்றார். (498) 102.-பலரையும் அழித்துவந்த சாத்தகியைச் சலசந்தன் எதிர்த்தல். பன்மகநூறாயிரவர்பரித்தே ரன்மிகநூறாயிரவரழிந்தார் மன்மதவெங்கைமலைமிசைவீரன் றன்முன்மலைந்தான்றார்ச்சலசந்தன். |
(இ-ள்.) பரிதேரன்-குதிரைகள்பூண்ட தேரையுடைய சாத்தகி, மிக- மேலிட்டுவருதலால்,-நூறு-பகையழிக்குந்தன்மையுள்ள, மக பல் ஆயிரவர்-பல ஆயிரக்கணக்கான கண்ணன்மக்களும், நூறாயிரவர்-லக்ஷக்கணக்கான மற்றைவீரர்களும், அழிந்தார்-சிதைந்தார்கள்; (இங்ஙனம் சிதைகையில்), தார் சலசந்தன்-போர்மாலையையுடைய சலசந்தனென்னும் அரசன், மன் மதம் வெம் கைமலைமிசை-மிகுதியானமதத்தையும் கொடியதுதிக்கையையு முடைய மலைபோன்றயானையின்மேலே (வந்து), வீரன்தன் முன்மலைந்தான் - வீரனான அச்சாத்தகி முன்னே பொருதான்; (எ - று.) கண்ணன்மக்களையே சாத்தகியின் மக்கள்போலக் கூறியது, தமையன் பிள்ளைகளிடம் அவனுக்கு உள்ள உரிமையினா லென்க. மன்மதவெங்கைமலை - பிறகுறிப்பு. பி-ம்: பன்முக நூறாயிரவர். 103.-சலசந்தன் சாத்தகியின்முன் ஒடுங்குதல். தார்ச்சல சந்தன் சாத்தகி யென்னுங் கார்ச்செல வாய கணைமழை யாலே |
|