பின்பெயர் - இங்கு, ஆயுதமென்றமாத்திரமாய் நின்றது; சிறப்புப் பெயர், பொதுப்பொருளின்மேலது. (513) 117.-அவர்களில் விந்தனும் விந்தரனும் இறத்தல். விந்தன்விந்தரனிருவருமேலிடுமுனையிற் றந்தம்வாசியும்தேர்விடுபாகருந்தாமு மந்தரந்தனிற்றலைகள்போய்முகில்களையலைப்பச் சிந்துசோரியம்பெருங்கடலலைத்திடச்சிதைந்தார். |
(இ-ள்.) விந்தன் விந்தரன் இருவர்உம் - (அத்துரியோதனன் தம்பிமாருள்) விந்தன் விந்தரன் என்ற இரண்டுபேரும்,- மேலிடு முனையில் - மிக்குச் செய்த போரில்,-தம் தம் வாசிஉம் தேர் விடு பாகர்உம் தாம்உம் - தம்தம்முடைய தேர்க்குதிரைகளும் தேர்செலுத்துஞ் சாரதிகளும் தேர்வீரர்களான தாமுமாக,- தலைகள் அந்தரந்தனில் போய் முகில்களை அலைப்ப- தலைகள் (துணிபட்டு மேலெழும்பிச் சிதறி) ஆகாயத்திற் சென்று மேகங்களைச் சிதறடிக்கவும், சிந்து சோரிஅம் பெருங் கடல்அலைத்திட-(உடம்பினின்று) விழுகின்ற இரத்தம் அழகிய பெரியகடலை(ச் சென்று) கலக்கவும், சிதைந்தார் - அழிந்தார்கள்; (எ - று.) விந்தன் விந்தரன் என்பவர்கள் செய்த போரில் வீமனால் தம்குதிரைகளும் பாகரும் அழியத் தாமும் அழிந்தன ரென்பதாம். 'இருவரும், வாசியும் பாகருந் தாமும் சிதைந்தார்' - மிகுதியினால் உயர்திணைமுடிபுகொண்ட திணைவழுவமைதி. இவர்கள்கொடுமை தோன்ற, தலைவேறு உடல்வேறான பின்பும் வானத்திற் சென்று மேகங்களை யலைத்தலையும் நெடுந்தூரஞ்சென்று கடலையலைத்தலையும் கூறினரென்க. பி-ம்: சோரிபோய். (514) 118.- அவர்களில் குண்டலபோசி முதலிய மூவர் இறத்தல். போர்க்குமுந்துறுதேரினான்குண்டலபோசி தீர்க்கலோசனன்றிண்டிறற்சித்திரசேனன் மார்க்கநேர்படவிலங்கிமாமறலிநேர்வரினுந் தோற்கலாதவர்மூவருந்தம்முயிர்தோற்றார். |
(இ-ள்.) போர்க்கு முந்துறு தேரினான்-சண்டைக்குமுற்பட்டு வருகிற தேரையுடையவனான, குண்டலபோசி - குண்டலபோசியென்பவனும், தீர்க்கலோசனன்- தீர்க்கலோசனனென்பவனும் திண் திறல்-மிக்கவலிமையையுடைய, சித்திரசேனன்-சித்திரசேனனென்பவனும், (ஆகிய), மா மறலி நேர் வரின்உம் தோற்கலாதவர்-சிறந்தயமன் எதிர்த்து முன்வந்தாலும் தோல்வியடையாதவர்களான, மூவர்உம்-(துரியோதனன் தம்பிமார்) மூன்றுபேரும்,- மார்க்கம் நேர்பட விலங்கி- (வீமன்செல்லும்)வழியிலே எதிராகத் தடுத்து, தம் உயிர் தோற்றார்-தமதுஉயிரை யிழந்தார்கள்;(எ -று.) தீர்க்கலோசநன் - நீண்ட கண்களையுடையவன்; சித்திரஸேநன்-வியக்கத்தக்க சேனையையுடையவன்: காரணப்பெயர். (515) |