பக்கம் எண் :

314பாரதம்துரோண பருவம்

வணங்கஉம் - நமஸ்கரிக்கவும்,-வேதியன் - பிராமணன், கைமிகுந்து -
(மாறுபாடொழியாமல்) வரம்பு கடந்து,  எதிர் புகுந்து மோதி - எதிரில்வந்து தடுத்து,
அம்பு தெரிந்தனன் - (சிறந்த) பாணங்களை (எடுத்துவிடுதற்கு) ஆராய்வானாயினான்;
(அப்பொழுது), வல் திறல் மூரி வெம்சிலைஉம் - மிக்க வலிமையையுடைய பழைய
கொடிய (அவன்) கைவில்லும், குனிகொண்டது - வளைந்தது; (எ - று.)

     வீமசேனன் பணிமொழிகூறி வணங்கவும், துரோணன் கைமிஞ்சி
அம்புகளைத்தேர்ந்தெடுத்தலும், வில்வளைத்தலுஞ் செய்தனனென்பதாம்.
ஆநிலன் -அநிலன்மகன்; வடமொழித்தத்திதாந்தநாமம். ஆதியந்தணன் -
நால்வகைவருணத்துள்ளும் முதலதானபிராமணவருணத்தானெனினுமாம். 'சமர்செய்
திடல்' என்றபாடம் சந்தத்துக்கொவ்வாது. பி-ம்: அம்புதெரிந்தன.        (519)

123.- துரோணன்தேரை வீமன் எடுத்தெறிதல்.

வீரனொன்றுமொழிந்திலன்வந்துமுன்வீழ்சரங்கள்விலங்கிவயம்புனை
தேரினின்றுமிழிந்துநடந்தெதிர்சேரவந்துசெழுஞ்சிலையின்குரு
வூருகின்றவயங்கிரதந்தனையோரிரண்டுகரங்கொடுவன்புடன்
வாரியுந்தவெறிந்தனன்வண்புயல்வானினின்றவரஞ்சியொதுங்கவே.

     (இ-ள்.) வீரன் - வீரனாகிய வீமன்,-ஒன்றுஉம் மொழிந்திலன்-(வாயினால்)
ஒன்றுஞ் சொல்லாமல்,-வந்து முன் வீழ்சரங்கள் விலங்கி-எதிரிலே வந்து
மேல்விழுகிற (துரோணனது) அம்புகளுக்கு(த் தந்திரமாக) விலகி, வயம் புனை
தேரினின்றும் இழிந்து-வெற்றியைக்கொண்ட (தனது) தேரினின்று இறங்கி, நடந்து
எதிர் சேர வந்து -  நடந்துகொண்டு எதிரிலே நெருங்கி வந்து,-செழுஞ் சிலையின்
குரு ஊருகின்ற வயங்கு இரதந்தனை -  சிறந்த வில்லாசிரியனான துரோணன்
ஏறிநடத்துகிற விளங்குகின்ற தேரை, ஓர் இரண்டு கரங்கொடு-(தனது)
ஒப்பற்றஇரண்டுகைகளாலும், வன்புடன் வாரி - வலிமையோடு ஒருசேர எடுத்து,
வள்புயல் வானில் நின்றவர் அஞ்சி ஒதுங்க - செழிப்பான மேகங்கள் சஞ்சரிக்கிற,
வானத்திலே நிற்கின்ற தேவர்கள் அஞ்சி விலகும்படி, உந்த எறிந்தனன் -
மேல்நோக்க வீசினான்; (எ - று.)

     கீழ்த் தான்கூறிய விநயவார்த்தை துரோணனால் அங்கீகரிக்கப்படாமல்
அலட்சியஞ்செய்யப்பட்டதனால் மீளவும் ஒன்றுங்கூறத்தொடங்கினானில்லை
யென்பதும், தொழில்செய்து திறங்காட்டுவதே தகுதியென்று கருதினானென்பதுந்
தோன்ற, 'ஒன்று மொழிந்திலன்' என்றார்.

124.-தேரும் துரோணனும் சிதைதல்.

நாகவிந்தம்வளர்ந்துகிளர்ந்ததுநாகமொன்றியதென்றுநடுங்கிட
மேகபந்திகலங்கவெழுந்ததுமீளவும்புவியின்கண்விழுந்தது
பாகனங்கநெரிந்ததுநொந்ததுபார்முகந்துளைவிண்டனமண்டுருள்
வேகவெம்பரியுந்தலைசிந்தினவேதியன்றனதென்புமொடிந்ததே.