பக்கம் எண் :

பதினான்காம் போர்ச்சருக்கம்315

     (இ-ள்.) 'விந்தம் நாகம்-விந்தியமலை, வளர்ந்து கிளர்ந்தது- வளர்ச்சிபெற்று
மேலெழுந்ததாய், நாகம் ஒன்றியது - தேவலோகத்தைச் சார்ந்திட்டது,' என்று -
என்று எண்ணி, நடுங்கிட - (தேவர்கள்) மிக அஞ்சும்படியாகவும், மேக பந்தி
கலங்க- மேகவரிசை இடையிலே நிலைகுலையும்படியாகவும், அது-
அந்தத்துரோணன்தேர்எழுந்து - மேற்சென்று, மீளஉம் - பின்பு, புவியின் கண்
விழுந்தது - தரையிலேவிழுந்திட்டது; (அப்பொழுது), பாகன் அங்கம் - 
சாரதியினுடைய உடம்பு, நெரிந்தது- நொருங்கிற்று; பார்முகம் - பாரினிடம்,
நொந்தது -  வலிமைகுலைந்தது; மண்டுஉருள் - வலிமைமிக்க தேர்ச்சக்கரங்கள்,
துளை விண்டன-துளைபிளந்தன; வேகம்வெம் பரிஉம்-வேகத்தையுடைய கொடிய
குதிரைகளும், தலைசிந்தின-தலைசிதறின;வேதியன் தனது என்பு உம் -
துரோணாசாரியனது எலும்பும், ஒடிந்தது - முறிந்தது;(எ - று.)-பி-ம்:
வளர்ந்துவளர்ந்தகல். பாரமுந்துளை.

     முன்னொருகாலத்தில் நாரதமாமுனிவன் விந்தியகிரியினிடஞ் சென்று
'மகாமேருமலை, மிகவுயர்ந்திருப்பதனாலும், சூரியன் முதலியகிரகங்கள் தன்னை
வலம்வரப் பெறுதலாலும், தன்னிடந்தேவர்கள் பலர் வசிப்பதனாலும், மற்றும்பல
காரணங்களினாலும், மிக்கசெருக்குக்கொண்டிருக்கின்றது' என்று கலகஞ்செய்ய,
உடனே விந்தியமலை மேருமலையோடு மாறுபட்டு அதனினும் பெரியதாக வளர்ந்து
வானத்தையளாவி அங்குச் சஞ்சரிக்கிற சூரியசந்திராதிகளுடைய கதியையுந் தடுத்து
அப்பாற்செல்லவுந்தொடங்க, அதுகண்டு அஞ்சிய தேவர்கள்
அகஸ்தியமகாமுனிவனைச்சரணமடைந்து அவனைக் கொண்டு, அம்மலையை
அடக்கினார்களென்ற சரித்திரத்தைக் கருத்திற்கொண்டு, தேர் மேல்வருதலை
நோக்கித் தேவர்கள் அவ்விந்தியமலை மீண்டும் வளர்ந்தெழுந்து வருகின்றதெனக்
கருதி அஞ்சுகின்றன ரென்றார், தேரைக்கண்டு விந்தியமலையென்று
மாறுபாடாகவுணர்ந்ததாகக் கூறினது - மயக்கவணி. பார் - தேரின் பரப்புப்பலகை;
"தேரின்பரப்பும் புவியும் பாரெனல்."                                (521)

125.-பலவீரர்கள் வீமனை வளைதல்.

வீழவிங்குமவன்றனைவென்றிவன் மேனடந்துழியெண்டிசையும்படை
சூழவந்துவளைந்தனரந்தக தூதர்தங்களினும்பெருவஞ்சகர்
ஏழுமண்டலமும்புதையும்பரி சேறுகின்றதரங்கநெடுங்கட
லூழியும்பெயர்கின்றதெனும்படி யோதைவிஞ்சவுடன்றுசினங்கொடே,

     (இ-ள்.) இங்கு - இவ்வாறு, வீழ - கீழ்விழும்படி, அவன்தனைஉம்
வென்று -அந்தத்துரோணனையும் சயித்து, இவன் - வீமன், மேல் நடந்த உழி -
அப்பாற்சென்றபொழுது,- அந்தக தூதர் தங்களின்உம் பெரு வஞ்சகர் -
யமதூதர்களைக்காட்டிலும் வலிமைமிக்க வஞ்சனையுடையவரான (அநேக) வீரர்கள்,-
ஏழு மண்டலம்உம் - ஏழுதீவாகவுள்ள உலகமுழுவதும், புதையும் பரிசு-
அழுந்தும்படி, ஏறுகின்ற - பொங்கிமேலெழுகிற, தரங்கம்-அலை