பக்கம் எண் :

பதினான்காம் போர்ச்சருக்கம்317

யுடைய சூரியனது குமாரனான கர்ணன், சமர் முந்தஏ-போரில் எதிர்த்தவளவிலே,-
பூசலின்கண் உடன்று கழன்றவர் - போரில் (வீமனோடு) எதிர்த்துத் தப்பியோடிப்
போனவர்கள், போர் தொடங்க  நினைந்து புகுந்தனர் - (வீமனுடன் மீண்டும்)
போர் செய்ய எண்ணி வந்துசேர்ந்தார்கள்; (அவர்களின் அதிபாரத்தால்),
மாசுணம் - (பூமியைத் தாங்குகிற ஆதிசேஷள் முதலிய)  பெரும்பாம்புகள், தலை
நொந்து சுழன்றன - தலைவருந்திச் சுழலலாயின; மாதிரங்கள் - திகுக்கள், மருண்டு
கலங்கின - (இது என்னோ என்று) திகைத்துக் கலக்கமடைந்தன; வீசு தெள் திரை
அம்பு-வீசுகின்ற தெளிவான அலைகளையுடைய கடல்கள், வெதும்பின -
(இவர்களது உக்கிரத்தன்மையை நோக்கித்தாம்) தாபங்கொண்டன; மேலை
அண்டம்உம்- - அண்டகோளத்தின் மேலிடங்களும், விண்டு பகிர்ந்தன -
(இவர்களது ஆரவாரத்தாலாகிய அதிர்ச்சியால்) வெடிபட்டுப் பிளவுற்றன;
(எ - று.)-ஒருங்கு பலதொழில்களின் நிகழ்ச்சி கூறியது, கூட்டவணி யென்னும்
ஸமுச்சயாலங்காரம்                                            (524)

128.- வீமனும் கர்ணனும் பொருதல்.

கோபம்விஞ்சினர்விஞ்சைவரம்பெறுகூர்சரங்கடெரிந்தனர்கொண்டனர்
சாபமுங்குனிதந்தெதிருந்தினர் தாரைவெம்பரிதங்கிரதங்களும்
தீபமெங்குகமலர்ந்தெனமண்டுசெந் நீர்பரந்திடநின்றுமுனைந்தெழு
பூபர்தங்களுடம்புசிவந்தனர்பூரமெங்குமலைந்துபுரண்டவே.

     (இ-ள்.) (அவ்விருவரும்)- கோபம் விஞ்சினர் - கோபம் மிக்கவர்களாய்,-
விஞ்சை வரம் பெறு - மந்திரபலத்துடனே வரமாகப்பெற்ற, கூர்சரங்கள் - கூரிய
அம்புகளை, தெரிந்தனர் கொண்டனர் - ஆராய்ந்து எடுத்துக்கொண்டு, சாபம்உம்
குனிதந்து - விற்களையும் வளைத்து, தாரை வெம் பரி தங்கு இரதங்கள் உம் -
(பலவகை) நடைகளையுடைய கொடிய குதிரைகள் பூட்டிய (தங்கள்) தேர்களையும்,
எதிர் உந்தினர்-(ஒருவர்க்கொருவர்) எதிரிலே செலுத்தினார்கள்; நீபம் எங்கும்
மலர்ந்து என-செங்கடப்ப மரங்கள் எவ்விடமும் மலர்ந்தாற்போல, மண்டு செம்
நீர்பரந்திட-மிக்க இரத்தம் எங்கும்பரவ, நின்று முனைந்து எழு - நிலைநின்று
போர்செய்து விளங்குகிற, பூபர்-(அவ்விரண்டு) அரசரும், தங்கள் உடம்பு
சிவந்தனர்-(அவ்விரத்தப் பெருக்கினால்) தங்கள் உடம்பு செந்நிறமடையப்
பெற்றார்கள்;(அவர்களுடம்பினின்று), பூரம்-(இரத்தப்)பெருக்குக்கள், எங்குஉம்-
எவ்விடங்களிலும்,அலைந்து- அலைவீசிக்கொண்டு, புரண்ட-வழிந்தோடின;
(எ - று.)

     தாரையெனினும், கதியெனும் ஒக்கும்.                         (525)

129.-வீமனாற் கர்ணன் தேருடன் சிதைதல்.

மாரு தன்புதல் வன்றொடு மம்பினின் மாவி ரண்டுமி
                           ரண்டும்வி ழுந்தன
சோரும் வன்றுவ சந்தறி யுண்டது சூத னுந்தலை சிந்தினன்
                                   முந்திய
தேரு முந்துரு ளுந்துகள் கொண்டன சேம வெங்கவ சந்துளை
                                   விஞ்சிய
தார வெண்குடை யம்புலி யும்பிறை யானதஞ்சலி னெஞ்சும
                                   ழிந்ததே.