பக்கம் எண் :

32பாரதம்துரோண பருவம்

ஒவ்வா - உலகத்தில் ஒருத்தரும் (தனக்கு) ஒப்பாகப்பெறாத, அரசன்- ராஜராஜனும்,
விபுதர்க்கு ஒப்பான்- (இன்பவாழ்க்கையில்)தேவர்களுக்கும் உவமையாகுபவனும்
ஆகிய துரியோதனன், - இ ஆறு உரைத்த - இங்ஙனம் (தனித்தனி) கூறின,
வேந்தர்தமக்கு - அரசர்களுக்கு. எய்தும் (செய்தற்குப் ) பொருந்திய, சிறப்பு செய்து
- நல்ல சன்மானங்களைச் செய்து, அகற்றி - (அவர்களை) அனுப்பிவிட்டு,- கை
வார் சாபம் - கையில் நீண்ட வில்லையுடைய, முனிவரன்தன் பிராமண
சிரேஷ்டனான துரோணனது, கழல் கால் - வீரக்கழலணிந்த திருவடிகளை, வணங்கி
- நமஸ்கரித்து, ஏகுக என செவ்வாய் மலர்ந்து - (நீ) செல்வாயாக என்று சிவந்த
(தன்) வாயைத் திறந்து கூறிவிட்டு, தன் கோயில் அடைந்தான் - தனது
சிறந்தவிடத்தைச் சேர்ந்தான் ; ( எ -று.)

     "இடையிருவகையோரல்லது நாடிற், படைவகைபெறா அரென்மனார் புலவர்"
என்ற தொல்காப்பியச்சூத்திரத்து, 'நாடின் என்பதனால், ஒருசார் அந்தணரும்
படைக்கு உரிய ரென்பது கொள்க; அவர் இயமதங்கியாரும், துரோணனும், கிருபனும்
முதலாயினாரெனக் கொள்க' என்றும், படைப்பகுதி யென்பன- வேலும் வாளும்
வில்லும் முதலாயின,  என்றுங் கூறியதனால,் 'முனிவரன்தன் கழற் கால்' என்றது
பொருந்தும். அன்றியும், துரோணனை வீடுமன் கௌரவபாண்டவர்க்கு
வில்லாசிரியனாக்கியபொழுது, அவனுக்கு அரசர்க்குஉரிய அங்கங்களையெல்லாம்
கொடுத்ததாக ஆதிபருவத்திற்கூறியுள்ளது. செவ்வாய்மலர்ந்து - காரியம்
காரணத்தாற்கூறப்பட்டது ; உபசாரவழக்கு பி -ம்: வெவ்வேறுரைத்த வேந்தர்க்கு
வேண்டுஞ்சிறப்பு.                                                (44)

45.- மறுநாட் சூரியோதய வருணனை.

கங்குற் சிலைநூன் முனிவனுடன் கழற்காலரசன் பணித்தமைகேட்,
டங்குத் தரியா திவன்கரத்தே யருள்கூர் நெஞ்ச னகப்படுமென்,
றிங்குத்துயில்வார் யாவரையு மிருபா ளையத்தி னிடந்தோறுஞ்,
சங்கக் குரலாற்றுயிலெழப்பித் தபனன் குணபாற் றான் சேர்ந்தான்.

     (இ -ள்.) சிலை நூல் முனிவனுடன் - வில்வித்தையில்வல்ல துரோணனுடனே,
கழல் கால் அரசன் - வீரக்கழலையணிந்த பாதத்தையுடைய துரியோதனன்,
பணித்தமை-(தருமனைப் பிடித்துத் தரும்படி) சொன்ன கடுஞ்சொல்லை, கேட்டு-,
கங்குல்-இராத்திரி. 'இவன் கரத்து ஏ-இத்துரோணன் கையிலே, அருள்கூர் நெஞ்சன்.
கருணைமிகுந்த மனத்தையுடைய தருமன், அகப்படும் - அகப்பட்டுக் கொள்வானே,'
என்று - என்று எண்ணி இரங்கி, அங்கு தரியாது- அவ்விடத்தில் நில்லாமல்
நீங்கிச்சென்றது; (அதுசெல்ல), இங்கு- இப்பால், தபணன்-சூரியன், -இரு
பாளையத்தின் இடம் தோறும் - இருதிறத்துப் படைவீடுகளி னிடங்களிலெல்லாம்,
துயில்வார் யாவரைஉம் - தூங்குகிறவர்களெல்லோரையும், சங்கம் குரலால் துயில்
எழுப்பி - சங்கவாத்தியத்தின் தொனியால் தூக்கம்விழிக்கச்செய்து கொண்டு, தான் -,
குண பால் சேர்ந்தான் - கிழக்குத்திக்கில் அடைந்தான் [உதித்தான்]; (எ-று.)