வனாகிய சூரியனது புத்திரனான கர்ணன், வேலினால் அடர்த்து எறிதலும்- வேலாயுதத்தால் வலிமைகொண்டு வீசியடித்த வளவிலே,-அவன்-வீமன், எறிந்த செவ்வேல் இரு துணி ஆக-(தன்மேல்) எறியப்பட்ட(அந்தச்) செவ்விய வேலாயுதம் இரண்டு துண்டாகப் பிளவுபடும்படி, கோலினால் துணித்து-(தானெய்த) அம்புகளினால் துண்டித்து, மீளஉம்-பின்பு, நாலின் நால் முழம் உடையது அழல் கொளுத்தியது ஒருதண்டு-பதினாறு முழமுள்ளதும் தீப்பற்றினாற்போல அழிப்பதுமாகிய ஒரு பெரிய கதாயுதத்தை, கன்னன்மேல் எறிந்தனன் - கர்ணன்மேற்பிரயோகித்து,நகைசெய்தான் சிரித்தான்; (எ - று.)-'காலினால்வருங் காலின் மைந்தன்'என்றவிடத்துச் சொல்நயங் காண்க. பி-ம்: எறிந்த வேல்வேறிரு. கொளுத்தியென்றொரு தண்டு. (535) 139.- வீமன் கர்ணனை வென்றதைத் துரியோதனன் கண்டமை. தேரவன்றிருமைந்தனேறியதடந்தேரும்வாசியுஞ்சிந்தி யூரவந்தவெம்பாகனுந்தலைபிளந்தோடலுற்றனன்பின்னும் வீரனும்பெருவலியுடன்வருகெனவேறொர்தேர்மேற்கொள்ளத் தூரநின்றவரிருவருமுடன்றமைசுயோதனன்கண்ணுற்றான். |
(இ-ள்.) தேரவன் திரு மைந்தன்-சிறந்ததேரையுடையவனான சூரியனது சிறந்தமகனாகிய கர்ணன், (வீமனெறிந்த கதையினால்), ஏறிய தடதேர்உம் வாசிஉம் சிந்தி-தானேறியுள்ள பெரியதேரும் அதன்குதிரைகளும் அழியப்பெற்று, ஊர வந்த வெம் பாகன்உம் தலை பிளந்து-(அத்தேரைச்) செலுத்துதற்கு அமைந்த கொடிய சாரதியும் தலைபிளக்கப்பெற்று, பின்உம் ஓடல் உற்றனன் - மீண்டும் ஓடத்தொடங்கினான்; (அப்பொழுது), வீரன்உம் - அவனை வென்றவனான வீமனும், பெரு வலியுடன் - மிக்கவலிமையுடனே, வருக என வேறு ஒர் தேர் மேற்கொள்ள - 'வருவதாக' என்று சொல்லி (உடனேவருவித்து) வேறோரு தேரின்மேல் ஏறிக்கொள்ள,-சுயோதனன்-, துரியோதனன் தூரம் நின்றவர் இருவர்உம் உடன்றமை- தூரத்திலுள்ளவர்களான (அந்த வீமன்கர்ணன் என்ற) இரண்டு பேரும் போர்செய்து அடைந்த நிலையை, கண்ணுற்றான்-(அங்கிருந்து) பார்த்தான்;(எ - று.) 'தேரவன் திருமைந்தன்' என்பதற்கு - (திருதராட்டிரனது) தேர்ப்பாகனான அதிரதனென்பவன் எடுத்துவளர்த்த மகனாகிய கர்ண னென்றுமாம். (536) 140.-துன்முகன் வீமனால் இறத்தல். கண்டுதுன்முகனெனுந்தனியினவலைக்கடிதினேவலுங்கங்குல் வண்டுசெஞ்சுடர்வளையவந்திறந்தெனவலியவார்சிலைவாங்கிக் கொண்டுதிண்டிறல்வாளியான்மலைமிசைக்கொண்டல்பெய்வதுபோல மண்டுபோர்புரிந்தண்ணல்கைப்பகழியால்வானிமைப்பினிலுற்றான். |
(இ-ள்.) கண்டு-(அங்ஙனம்) பார்த்து, (துரியோதனன்), துன்முகன் எனும் தனி இளவலை-துர்முகனென்ற ஒப்பற்ற தனது |