பக்கம் எண் :

பதினான்காம் போர்ச்சருக்கம்325

தம்பியை, கடிதின் ஏவலும்-விரைவாக (வீமன்மேற்) செலுத்திய வளவிலே, (அவன்),
கங்குல் வண்டு செம் சுடர் வளைய வந்து இறந்து என - இராக்காலத்திற்
பறப்பதொரு பூச்சி (வீட்டில்) சிவந்தவிளக்கொளியைச் சூழவந்து அதிற்பட்டு
இறந்தாற்போல, வலிய வார் சிலை வாங்கி கொண்டு-வலிமையுள்ள நீண்ட வில்லை
வளைத்தெடுத்துக்கொண்டு (வந்து), மலைமிசை கொண்டல் பெய்வதுபோல -
மலையின்மேற் காளமேகம் மழைபொழிவதுபோல, திண் திறல் வாளியால் மண்டு
போர் புரிந்து-மிகவலிய அம்புகளினால் (வீமன்மேல்) மிக்கபோரைச்செய்து,
அண்ணல் கை பகழியால்-சிறந்தவீரனான அவ்வீமனது கையாலெய்யப்பட்ட
அம்புகளினால், இமைப்பினில்-கண்ணிமைப்பொழுதிலே, வான் உற்றான்-(இறந்து)
வீரசுவர்க்கஞ்சேர்ந்தான்; (எ - று.)

     துர்முகன் வீமனைவெற்றிகொள்ளவந்து அவனம்புக்கு இலக்காகித் தான்
எளிதில் அழிந்தன னென்க. மலரில் வண்டுமொய்த்தல்போல, தீயில் விட்டில்
மொய்த்தலால், அது 'வண்டு' எனப்பட்டது.                       (537)

141.-கர்ணன்எறிந்த தோமரம் வீமனால் துணிக்கப்படுதல்.

தாளினோடியகன்னன்மன்னவன்விடுதம்பிவீழ்தலும்வீமன்
றோளினோடிமண்மிசைபுதைதரவொருதோமரந்தனையேவ
வேளினோடிசைவீமன்மேலதுசெலும்வேலையின்விடவெவ்வாய்க்
கோளினோடியகுரிசில்கைக்கணையினாற்கோளழிந்ததுதுமன்னோ.

     (இ-ள்.) தாளின் ஓடிய கன்னன் - (முன்பு) கால்களினால் விரைந்து ஓடிய
கர்ணன், மன்னவன் விடு தம்பி வீழ்தலும் - துரியோதனனேவின அவன் தம்பியான
துர்முகன் இறந்துவிழுந்தவளவிலே, (மீண்டும்வந்து), வீமன் தோளின் ஓடி மண்மிசை
புதைதர-வீமனது தோளில் விரைந்து பாய்ந்து (பின்பு) தரையிற் புதைந்திடும்படி, ஒரு
தோமரந்தனை ஏவ-ஒரு தோமராயுதத்தைப் பிரயோகிக்க,-அது-,வேளினோடு இசை
வீமன்மேல் - முருகக் கடவுளோடு (உவமை) சொல்லப்படுகிற வீமசேனன்மேல்,
செலும் வேலையின்-செல்லும் பொழுது, விடம் வெம் வாய் கோளின் ஓடிய குரிசில்
கை கணையினால் - விஷமுள்ள கொடிய வாயையுடைய (இராகுவென்னுங்)
கிரகம்போல (ப் பயங்கரமாய்) விரைந்துவந்த வீமன்கையம்பினால், கோள்
அழிந்தது-வலிமை சிதைந்திட்டது; (எ - று.)-மன் ஓ-ஈற்றசை. 

     தோமரமென்று இருப்புலக்கைக்கும், கைவேலுக்கும், பேரீட்டிக்கும் நூல்களிற்
பெயர் வழங்குகின்றது - பல பராக்கிரமங்கட்கு முருகக்கடவுளை உவமைகூறினார்.
                                                            (538)

142.-துரியோதனன்தம்பியர் அறுவரை வீமன் தொலைத்தல்.

மன்னர் மன்னவன் றம்பிய ரிருவரை மாருதி மிசையேவ
முன்னர் வந்தவ ரிருவரும் படப்பட, முனைந்துபோர்
                                     மதியாமன்