மின்னி ருங்கணை விகருணன் முதலியோர் வீமன்மே லோரைவர் பின்ன ருஞ்செல நால்வரைப் பிறைமுகக் கணையினாற் பிளந்திட்டான். |
(இ-ள்.) (அதுகண்டு), மன்னர் மன்னவன்-ராஜராஜனான துரியோதனன், (மீண்டும்), தம்பியர் இருவரை-(தனது) தம்பிமார் இரண்டுபேரை, மாருதிமிசை ஏவ -வாயுபுத்திரனான வீமன்மேற் செலுத்த,-முன்னர் வந்தவர் இருவர்உம்- (ஒருவர்முன்ஒருவராக விரைவாக) எதிர்த்துவந்த அவ்விரண்டுபேரும், பட பட-உடனுக்குடனேஇறக்க,-முனைந்து-கோபங்கொண்டு, போர் மதியாமல்-(வீமனோடு) பொருதலை(அரிதென்று)கருதாமல், மின் இருங்கணை விகருணன் முதலியோர் ஓர் ஐவர்-மின்னல்போல விளங்குகின்ற பெரிய அம்புகளையுடைய விகர்ணன் முதலிய (துரியோதனன் தம்பிமார்)ஐந்துபேர்,பின்னர்உம்-பின்பும், வீமன்மேல் செல- (துரியோதனனாலேவப்பட்டு) வீமன்மேல் எதிர்த்துச்செல்ல, (வீமன் உடனே), நால்வரை-(அவர்களில் விகர்ணனொழிந்த) நான்குபேரை, பிறை முகம் கணையினால்பிளந்திட்டான் - அர்த்தசந்திரபாணங்களினாற் பிளந்தழித்தான்; (எ - று.) (539) வேறு. 143.-வீமன் விகர்ணனைநோக்கி'உன்னுடன்போர்செய்யேன்' எனல். பகரு நால்வரும் பட்டபின் பைங்கழல் விகரு ணன்பொர வெஞ்சிலை வாங்கலும் புகலும் வஞ்சினம் பொய்க்கினு தின்னுட னிகல்செய் யேனெம்பி யேகுகென் றானரோ. |
(இ-ள்.) பகரும் - (கீழ்ச்) சொல்லப்பட்ட, நால்வர்உம்-(துரியோதனன் தம்பிமார்)நான்குபேரும், பட்டபின்-இறந்தபின்பு, பைங்கழல் விகருணன்- பசுமையான(பசும்பொன்மயமான) வீரக்கழலையுடைய விகர்ணனென்பவன், பொர- போர்செய்தற்பொருட்டு, வெம்சிலை-கொடிய வில்லை,வாங்கலும்-வளைத்த வளவிலே,-(வீமன்அவனை நோக்கி), 'எம்பி - எனது தம்பியே! புகலும் வஞ்சினம் பொய்க்கின்உம்-(நான்) சொன்ன சபதம் தவறுவதானாலும், நின்னுடன் இகல் செய்யேன் - உன்னோடு போர்செய்யமாட்டேன்; ஏகுக-(நீ) செல்வாயாக,' என்றான் -என்று சொன்னான்; (எ - று.) வஞ்சினம் பொய்க்கினும்-"பாஞ்சாலிக்குஅரசவையிற் பழுதுரைத்தோனுடல்***,***துணைவரொடுகுலமாளப்பொருவேன்யானே" என்று திரௌபதியைத் துகிலுரிந்தகாலத்திற்கூறின பிரதிஜ்ஞை தவறுவதானாலும் என்றபடி, துரியோதனன் தம்பியை வீமன் தன் தம்பியாக 'எம்பி' எனவிளித்தது, யோக்கியனான அவனிடத்தில் தனக்குஉள்ள அன்புமிகுதி பற்றியஉபசாரவழக்காம்; அன்றியும், துரியோதனன் வீமன்பிறந்ததினத்துக்கு முந்தின தினத்தின் இரவிலும், மற்றைத்தொண்ணூற்றொன்பதின்மரும் அதற்கு அடுத்த தினம் முதலாக ஒவ்வொருதினத்திலும் பிறந்தன ரென்பது சரித்திரமாதலால், வீமன் தனதுபெரிய தந்தையின் மக்களுள் இளையவனான விகர்ணனை எம்பியென்னத் தட்டில்லை. அரோ - ஈற்றசை. |