148.-வீமன் போர்தொடங்குதல். மிகநகைத்தும்வெறுத்துந்திரிபுர தகனனொத்தசமீரணன்மாமகன் முகனுறச்சென்றுமூரிவில்வாங்கிமே லிகனிறக்கணையேவினனென்பவே. |
(இ-ள்.) திரிபுரதகனன் ஒத்த- திரிபுரமெரித்தவனான உருத்திரமூர்த்தியைப்போன்ற (பலபராக்கிரமங்களிற்சிறந்த), சமீரணன் மா மகன் - வாயுவின் சிறந்த புத்திரனாகிய வீமன், (அதுகேட்டு), மிக நகைத்துஉம் - மிகுதியாகச்சிரித்தும், வெறுத்துஉம் - வெறுப்புக்கொண்டும், முகன் உறசென்று- அவனெதிராகப்போய், மூரி வில் வாங்கி - வலியவில்லை வளைத்து, மேல் - அவன்மேல், இகல் நிறம் கணை - வலிமையையும் ஒளியையுமுடைய அம்புகளை, ஏவினன் - எய்தான்; (எ - று.)-நச்சினார்க்கினியர் 'என்ப' என்ற அசையைப் புறனடையாற் கொண்டுள்ளார். (545) 149.- இருவரும் பொருதல். ஏவினாலில்வரும்வெஞ்சம மேவினார்மெய்ப்படாமல்விலக்கினார் கூவினாறைகூவிப்பொருதிளைத் தோவினார்தமையேநிகரொத்துளார். |
(இ-ள்.) தமைஏ நிகர் ஓத்து உளார்- (வேறுஉவமையில்லாமல்) தங்களையே தாங்கள் உவமையாகப் பொருந்தியுள்ளவரான, இ இருவர்உம்-(வீமன் விகர்ணன் என்ற) இந்த இரண்டு பேரும்-ஏவினால்- அம்புகளைக்கொண்டு, வெம் சமம் மேவினார் - கொடிய போர்செய்தற்குப் பொருந்தினார்கள்; மெய் படாமல் விலக்கினார்-(தங்களுள் எதிரி எய்யும் அம்புகளைத்) தம்மேற்படாதபடி (எதிரம்புகளால்) தடுத்தார்கள்; கூவினார் - (வீராவேசத்தால்) ஆரவாரஞ் செய்தார்கள்;அறை கூவி-வீரவாதங்கூறி, பொருது-போர்செய்து, இளைத்து - இளைப்படைந்து,ஓவினார் - (சிறிது பொழுது) போரொழிந்துநின்றார்கள்; (எ - று.) (546) 150.-விகர்ணன் வீமனைக் கவசமுதலியன அழித்தல். விகனன்விட்டகணைகளின்வீமன்மெய் இகன்மணிக்கவசம்பிளந்தேறுதேர் அகலரிக்கொடியற்றுக்கொடிஞ்சியுஞ் சகலமுற்றுத்தனுவுமுரிந்ததே. |
(இ-ள்.) விகனன் விட்ட கணைகளின் - விகர்ணன் எய்த அம்புகளினால், வீமன் மெய் - வீமனது உடம்பில் தரித்த, இகல் மணி கவசம் - வலியதும் இரத்தினம்பதித்ததுமான கவசம், பிளந்து-பிளந்திட,-ஏறு தேர் அகல் அரி கொடி அற்று-(அவ்வீமன்)ஏறியுள்ள தேரிற்கட்டிய பரந்த சிங்கவடிவமெழுதிய கொடியுந் துணிபட,- கொடிஞ்சிஉம் சகலம் உற்று- |