பக்கம் எண் :

பன்னிரண்டாம் போர்ச்சருக்கம்33

     இயல்பாக இரவுகழிந்ததைத் துரியோதனன்வார்த்தைகேட்டு அங்கு நிற்க
மனம்பொறாமற் சென்றதாகவும், சூரிய னுதிக்கையில் சங்கநாதத்தால் யாவருந்
துயிலொழிதலைச் சூரியன் துயிலெழுப்பி வந்ததாகவும் வருணித்தவை,
தற்குறிப்பேற்றவணி. 'அருள்கூர்நெஞ் சனகப்படுமென்ற' என்பதை
மத்திமதீபமாகமேல்வாக்கியத்துக்குங் கூட்டலாம். முதலடியில், முனிவன்
அரசனுடன்பணித்தமையென உருபுமாற்றி, துரோணன் துரியோதனனுடன் (நாளை
அகப்படுத்திதருவதாகக்) கூறினமை என்றும் உரைக்கலாம். நெஞ்சன்அகப்படும்-
செய்யுமென்முற்று ஆண்பாலுக்கு வந்தது. சூரியோதயகாலத்தில் எங்குங் சங்கூதுதல்
இயல்பாதலை, "புள்ளுஞ்சிலம்பினகாண் புள்ளரையன் கோயில்,
வெள்ளைவிளிசங்கின் பேரரவங் கேட்டிலையோ, பிள்ளாயெழுந்திராய்" என்ற
திருப்பாவையாலும் அறிக                                         (45)

பதினோராம் போர்ச்சருக்கம் முற்றிற்று.

பன்னிரண்டாம் போரச்சருக்கம்.

1.- கடவுள்வாழ்த்து.

பொய்யாத தவமுனிபின் போயருளித் தாடகைதன்
மெய்யாவ நிகரென்ன வெஞ்சரத்தா லழுத்தியபின்
மையாழி முகில்வண்ணன் வாங்கியன பூங்கமலக்
கையாலு மொருசாபங் காலாலு மொருசாபம்.

     (இ-ள்.) மை ஆழி முகில் வண்ணன் - மையும்கடலும் மேகமும்போன்ற
கருநிறத்தையுடைய இராமபிரான், பொய்யாத - பொய்யாகாத, தவம் -
தவவொழுக்கத்தையுடைய, முனி பின் -விசுவாமித்திரமுனிவனது பின்னே, போய் -
சென்ற, அருளி - கருணை கொண்டு, தாடகைதன் மெய் - தாடகையின் உடம்பு,
ஆவம் நிகர் என்ன - அம்பறாத்தூணிக்கு ஒப்பென்னும்படி, வெம் சரத்தால் -
கொடிய அம்புகளால், அழுத்திய பின் - பதித்தபின்பு,- (அப்பிரானது), பூ கமலம்
கையால்- அழகிய தாமரைமலர்போன்ற திருக்கையினால், ஒரு சாபம்உம் - ஒரு
சபிப்பும், வாங்கியன - வாங்கப்பட்டன [முறையே, வளைக்கவும் நீக்கவும் பட்டன];
 (எ -று.)

     'மெய்ஆவம் நிகரென்ன' என்றதற்கு - அம்புகள் மிகுதியாக உடம்பினுள்
பொருந்த என்று கருத்து. வாங்குதல் என்பது - சிலேடையால், வளைதலும்
நீங்கலுமாகிய இருபொருளை உணர்த்தின. சாபம் - வடசொல்திரிபு: இது
இவ்விருபொருளு முடையதாதலை "சாபமே சபித்தல் வில்லாம்" என்னும்
நிகண்டினாலு மறிக. சாபம் என்ற ஒருசொல்தானே ஓரடியில் வெவ்வேறு பொருளில்
வந்தது, மடக்கு  என்னுஞ் சொல்லணி.

     வசிஷ்டமகாமுனிவனது தவவலிமையை ஒருகால் கண்டு அவ்வாற்றலே
மெய்ம்மையானதென்றும் மற்றைய ஆற்றல்களெல்லாம் பொய்ம்மையானதென்றுந்
துணிந்து அரசாட்சியைவிட்டுநாற்றிசையுஞ் சென்று பற்பல இடையூறுகளைக்கடந்து
நெடுங்காலந்தவம்