தேர்மொட்டும் துண்டுபட,-தனுஉம்- (அவனது) வில்லும், முரிந்தது; (எ - று.) (547) 151.-வீமன் விகர்ணனைத் தலைதுணித்தல். மின்னையொத்தவிறற்படைமாருதி பின்னைவிட்டபிறைமுகவார்கணை யன்னைசித்தமலமரப்பின்னவன் றன்னைவெற்றிமகுடந்தடிந்ததே. |
(இ-ள்.) மின்னை ஒத்த - மின்னலைப்போன்றுவிளங்குகிற, விறல்படை,- வலியஆயுதங்களையுடைய, மாருதி-வீமன், பின்னை விட்ட-பின்பு தொடுத்த, வார் பிறைமுகம் கணை-நீண்ட அர்த்த சந்திரபாணமானது,-பின்னவன் தன்னை- தம்பியானவிகர்ணனை,-அன்னை சித்தம் அலமர-(அவனைப்பெற்ற) தாயின் (காந்தாரியின்)மனம் சோகிக்கும்படி, வெற்றி மகுடம் தடிந்தது - சிறந்த கிரீடத்தைத்தரித்ததலையைத் துணித்தது; (எ - று.) மக்களிடம் தாய்க்குஉள்ள அன்பின்ன மிகுதிபற்றி, 'அன்னை சித்தமலமர' என்றது. 'வெற்றிமகுடம்' என்பது - அன்மொழித்தொகை; அடையடுத்த வாகுபெயருமாம். (548) 152.-வீமன் கர்ணன்முதலியோரை வென்று மேற்செல்லுதல். கோவிகன்னன்கொலைபடப்பற்பல ராவிகன்னமறைகணையாலறப் பாவிகன்னன்பதைக்கவென்றேகினான் மேவிகன்னகம்போற்புயவீமனே. |
(இ-ள்.) (இவ்வாறு), கோ விகன்னன் - விகர்ணராசன், கொலை பட- கொல்லப்படவும், பற்பலர் ஆவி - மற்றும்பல வீரர்களது உயிர், கன்னம் அறை கணையால்-காதளவும் நாணியையிழுத்து விடப்படுகிற அம்புகளினால், அற- (உடம்பினின்று)ஒழியவும், பாவி கன்னன் பதைக்க-தீவினையுடையவனான கர்ணன் துடிக்கவும், வென்று-வெற்றிகொண்டு, மேவு இகல் நகம் போல் புயம் வீமன்- நிலைபெற்ற வலிய மலைபோன்ற தோள்களையுடைய வீமன், ஏகினான்-(அப்பாற்) சென்றான்; (எ - று.) துரியோதனன் செய்யுங்கொடுமைகட்கெல்லாந் துணைநின்று தூண்டுகோலாகுதலால், 'பாவி கன்னன்' என்றது. மகாபாபிகளுடன் சேர்தலும் பாதகமாதல் காண்க; அன்றியும், அடுத்தடுத்துப்பலமுறை தோற்றல் பாபபலமேயாதலும் உணரத்தக்கது. கன்னம்-கனம்என்பதன் விரித்தலாகக்கொண்டு, கன்னம் அறை-மிகவும் மோதுகின்ற என்று பொருள் கூறுவாருமுளர். கன்னம் மறை என்று பிரித்து-காதுமறையுமாறு நாணி யிழுத்து விடப்படுகிற எனினுமாம். இச்செய்யுளில், திரிபு என்னுஞ் சொல்லணி காண்க; அது நோக்கியே, 'இகன்னகம்' எதைத் தனிக்குறில் செறியாத லகரம் வரும் நத்திரிந்தபின் மாயாதுதிரிந்துநின்றது, (549) |