பக்கம் எண் :

பதினான்காம் போர்ச்சருக்கம்331

153.- வீமன் முன்சென்ற சாத்தகியோடு சேர்தல்.

அன்றுசாதத்தலகைகளாடவே
சென்றுசாத்தகிதன்னுடன்சேர்ந்தனன்
துன்றுசாத்திரத்தின்படிசூழ்முனை
வென்றுசாத்தியவாகைகொள்வேலினான்.

     (இ-ள்.) துன்று சாத்திரத்தின் படி-பொருந்திய நூல்முறைமைப்படி, சூழ்
முனைவென்று-(பகைவர்) சூழ்ந்துசெய்த போரை(ப்பொருது) வென்று, சாத்திய-
சூட்டிய,வாகை-(வெற்றிக்குஅறிகுறியான) வாகைப்பூமாலையை, கொள் - கொண்ட,
வேலினான் - வேலாயுதத்தையுடையவனான வீமன்,-அன்று-அப்பொழுது, சாதத்து
அலகைகள் ஆட-கூட்டமான பேய்கள் கூத்தாட, சென்று-மேற்சென்று,
சாத்தகிதன்னுடன் சேர்ந்தனன்-சாத்தகியோடு சேர்ந்தான்;(எ - று.)-ஜாதம்-
வடசொல்;இதற்குப்பூதமென்று பொருள்கொள்வாருமுளர்.             (550)

154.- சாத்தகியும் வீமனும் அருச்சுனனை யடுத்தல்.

அங்கி தன்னொ டனிலமுஞ் சேர்ந்தெனச்
சங்க ணிபாதன் றம்பியும் வீமனும்
செங்க லங்கலஞ் சேற்றிடை மூழ்கிய
வெங்க ளத்து விசயனைக் கூடினார்.

     (இ-ள்.) அங்கிதன்னொடு அணிலம்உம் சேர்ந்து என-நெருப்பும் காற்றும்
சேர்ந்தாற் போல, சங்கபாணிதன் தம்பிஉம் வீமன்உம்-சங்கத்தைத்
திருக்கையிலுடையவனான கண்ணபிரானது தம்பியாகிய சாத்தகியும் வீமனும், செம்
கலங்கல் சேற்றிடை மூழ்கிய வெம் களத்து-சிவந்ததும்கலங்கலாக
வுள்ளதுமான(இரத்தச்) சேற்றில் முழுகிய கொடிய போர்க்களத்தினிடையில்
நின்ற, விசயனை - அருச்சுனனை, கூடினார்-; (எ-று.) அம்-அசை.        (551)

வேறு.

155.-பகைவர்பலரும் மீண்டு மூவரையும் எதிர்த்தல்.

தேவரும் பரவு பாகன் செலுத்துதேர் விடலை யோடு
மூவருஞ் சுடர்கண் மூன்று மூண்டெனத் திரண்ட காலை
மேவருஞ் சமரின் முன்னம் வென்கொடுத் துடைந்த வேந்தர்
யாவருந் திருகி வந்தாங் கெதிரெதி ராகிச் சூழ்ந்தார்.

     (இ-ள்.) (சாத்தகியும் வீமனும்), தேவர்உம் பரவு பாகன் செலுத்துதேர்
விடலையோடு-தேவர்களுந் துதிக்கப்பெற்ற (கண்ணனாகிய) சாரதி செலுத்துகின்ற
தேரையுடைய சிறந்தவீரனான அருச்சுனனோடு (சேர்ந்து), மூவர்உம் -
இந்தமூன்றுபேரும், சுடர்கள் மூன்றுஉம் மூண்டு என-(சூரியன் சந்திரன் அக்கினி
என்னும்) முச்சுடர்களும் கூடியெழுந்தாற்போல, திரண்ட காலை - ஒருங்கு
கூடியபொழுது,-மேவு அருஞ் சமரில் முன்னம் வென் கொடுத்து உடைந்த வேந்தர்
யாவர்உம்-கிட்டுதற்கருமையான போரில் முன்