பக்கம் எண் :

பதினான்காம் போர்ச்சருக்கம்339

167.-அருச்சுனன் சயத்திரதனைக் கொல்லுதல்.

வரத்தினின்முன்பெறுசாபம்வாங்கியருச்சுனன்சிந்துமகீபன்மௌலிச்,
சிரத்தினிலெய்தலுந்துணிந்ததொருசரத்தாற்றுணிதலுமச்சிரம்வீழாமற்,
சரத்தினைமேன்மேலேவித்தடத்திருந்துதருப்பித்ததாதைதன்பொற்.
கரத்திடையேவீழ்வித்தானவனதனைநிலத்திட்டக்கணத்தின்
                                        மாய்ந்தான்.

     (இ-ள்.) (உடனே), அருச்சுனன்-, வரத்தினில் முன்பெறுசாபம் வாங்கி -
வரமாக முந்தினநாளிற் (சிவபிரானிடம்) பெற்ற வில்லை யெடுத்து வளைத்து, சிந்து
மகீபன் மௌலி சிரத்தினில் - சிந்துநாட்டரசனது கிரீடமணிந்த தலையின்மேல்,
எய்தலும்-(ஓரம்பை) எய்தமாத்திரத்திலே, ஒரு சரத்தால் - அந்த அம் பொன்றினால்,
துணிந்தது-(அந்தத்தலை) அறுபட்டது; துணிதலும் - (அங்ஙனம்) அறுபட்டவுடனே,
அ சிரம் வீழாமல்-அத்தலை கீழ் விழுந்திடாதபடி, சரத்தினை மேல் மேல்ஏவி-
அம்புகளை இடைவிடாமல் மேன்மேல்தொடுத்து, தடத்து இருந்து தருப்பித்த
தாதைதன் பொன் கரத்திடையே வீழ்வித்தான்-ஸ்யமந்தபஞ்சக தடாகத்திலே
பொருந்தி அருக்கிய ஜலமெடுத்து விடுகிற இவன் தந்தையான விருத்தக்ஷத்திரனது
அழகிய கையிலே (அத்தலை) விழும்படி செய்தான்; (செய்யவே), அவன் அதனை
நிலத்து இட்டு அ கணத்தில் மாய்ந்தான் - அத்தந்தை அத்தலையைக்கீழே
போகட்டு(அதனால்) அந்தக்ஷணத்திலே இறந்தான்; (எ - று.)

     சயத்திரனது தலையை நேரில் நிலத்திலே தள்ளியவன் அருச்சுனனாகாமல்
அவன் தந்தையே யானதனால், அவன் தலைவெடித்து இறந்தன னென்க. முன் -
பதிமூன்றாம்போர்நா ளிரவில் என்றபடி.                             (564)

168.-சயத்திரதன் இறந்ததற்குத் துரியோதனன் மிக இரங்குதல்.

முன்பட்டானருக்கனெனவெளிப்பட்டான்வெளிப்பட்டுமுடிவிற்சிந்து,
மன்பட்டான்மாமாயன்மாயமிதென் றறியாமன்மகன்போய்ப்பட்ட,
பின்பட்டானவன்றத்தையினிப்பட்டா ரெவருமெனப்பிழைப்
                                       பட்டான்போ,
லென்பட்டானரவுயர்த்தோனெரிப்பட்டான்விசயனெனவெண்ணி
                                          நின்றான்.

     (இ-ள்.) முன் அருக்கன் பட்டான் என-எதிரிற் சூரியன் அஸ்தமித்தானென்ற
காரணத்தால், சிந்து மன் - சிந்துதேசத்தரசனான சயத்திரதன், வெளிப்பட்டான் -
(நிலவறையினின்று) வெளிவந்தான்; வெளிப்பட்டு-(அங்ஙனம்) வெளிவந்து,
முடிவில் -இறுதியிலே, பட்டான் - (அருச்சுனனால்) இறந்திட்டான்; மா மாயன்
மாயம் இதுஎன்று அறியாமல்-மிக்கமாயையை யுடையவனான கண்ணபிரானது
தந்திரமிதுவென்று உணராமல்,- மகன் போய் பட்ட பின் அவன் தந்தை
பட்டான்-(தன்)மகனான சயத்திரதன் இறந்துபோனபின்பு அவனது தந்தையான
விருத்தக்ஷத்திரனும்இறந்தான்; இனி - இவர்கள் இறந்தபின், எவர்உம் பட்டார் -
(நம்பக்கத்தவர்)யாவரும் இறந்தவரேயாவர், என -