தான் - சேனையுடனே போய் (ப் பாண்டவரை)ச் சூழ்ந்துகொண்டான்; கொற்றவனது உரை கேட்டு - துரியோதனராசனது அந்த வார்த்தையைக் கேட்டு, கொடி நெடுந்தேர் நரபாலர் - கொடிகட்டிய உயர்ந்த தேரையுடைய அவன் சேனையரசர்களும், சபதம் கூறி - (தாம் தாம்) சபதவார்த்தை சொல்லிக் கொண்டு, ஒருகணத்தில்-ஒரு கணப்பொழுதிலே, வம்மின் என-'(போர்க்கு) வாருங்கள்' என்றுசொல்லி அறைகூவிக் கொண்டு, மற்றவரோடு - எதிர்ப்பக்கத்தாருடனே, தனி தனி போய் மலைதல் உற்றார்-தனித்தனியே சென்று போர்செய்யத் தொடங்கினார்; (எ - று.) திகிரி இனன் என்று பிரித்து, இனன் - சூரியன் எனினும் அமையும்; இநன்-வடசொல். பி-ம்::உடன்று. (570) 174.-இருதிறத்தவரும் போர்செய்தல். துருபதனுஞ்சாத்தகியுந்துரௌபதிமைந் தருமுடுகித்தொட்டசாபக் குருவுடனேபோர்செய்தார்தம்பியருஞ் சுயோதனனுங்கொற்ற வேந்த ரொருபதினாயிரவரும்போய்வீமனுனுடற்றியவனூர்ந்ததேரும் வரிசிலையுமழித்தனர்பினவனும்வறுங்கரதலத்தால்வன்போர் செய்தான். |
(இ-ள்.) துருபதன்உம் - துருபதாராசனும், சாத்தகியும்-, துரௌபதி மைந்தர்உம் - திரௌபதியின்குமாரர் ஐந்துபேரும், முடுகி - விரைந்து (அல்லது கோபம்மூண்டு), தொட்ட சாபம் குருவுடன் - பிடித்த வில்லையுடைய துரோணாசாரியனுடன், போர் செய்தார்-; சுயோதனன்உம் - துரியோதனனும் தம்பியர்உம் அவன் தம்பிமார் பலரும், கொற்றம் வேந்தர் ஒரு பதினாயிரவர்உம்- வெற்றியையுடைய துணையரசர் பதினாயிரம்பேரும், போய்-, வீமனுடன்-, உடற்றி- போர்செய்து, அவன் ஊர்ந்த தேர்உம் வரிசிலைஉம் அழித்தனர்- அவன் ஏறிய தேரையும் (அவனது) கட்டமைந்தவில்லையும் அழித்தார்கள்; பின் - பின்பு, அவன்உம் - அவ்வீமனும், வறுங் கரதலத்தால் வல் போர் செய்தான் - ஆயுதமில்லாத வெறுங்கைகளினாற் கொடும்போரைச் செய்யலானான்; துரௌபதிமைந்தர்-திரௌபதியினிடம் பஞ்சபாண்டவர்க்கு முறையே பிறந்த விந்தன், சோமன், வீரகீர்த்தி, புண்டலன், சயசேனன் என்பவர்; இவர்பெயர் வேறுவகையாகவும் வழங்கும்: இவர்கள் உபபாண்டவரென்றும், பஞ்சத்ரௌபதேயரென்றுங் கூறப்படுவர், (571) 175.- வீமன் வெறுங்கையாற் போர்செய்தல். பரியெடுத்துப்பரியெற்றிப்பரித்தேராற்றேரெற்றிப்பனைக்கைவேகக் கரியெடுத்துக்கரியெற்றிக்காலனிகர்காலளாற்காலாளெற்றிக் கிரியெடுத்துவிரியாழிகடைந்ததடந்தோளிருடிகேசனென்ன வரியெடுத்தகொடிவிடலைதோள்வலியாலுழக்கியரிநாதஞ்செய்தான். |
|