பக்கம் எண் :

344பாரதம்துரோண பருவம்

     (இ-ள்.) அரி எடுத்த கொடி விடலை -  சிங்கவடிவத்தைத் தரித்த
கொடியையுடைய வீரனான வீமன்,-பரி எடுத்து பரிஎற்றி-குதிரைகளை யெடுத்து
(அவற்றாற்) குதிரைகளை மோதியும், பரி தேரால் தேர் ஏற்றி-குதிரைகள் பூண்ட
தேர்களை யெடுத்து (அவற்றால்) தேர்களைத் தாக்கியும், பனைகை வேகம் கரி
எடுத்து கரி எற்றி-பனைமரம்போலுந் துதிக்கையையும் உக்கிரத்தன்மையையுடைய
யானைகளை யெடுத்து (அவற்றால்) யானைகளைப் புடைத்தும், காலன் நிகர்
காலாளால் காலாள் எற்றி -  யமன்போன்ற காலாளாவீரரையெடுத்து (அவர்களாற்)
காலாள்வீரரை யடித்தும்-,கிரி எடுத்து விரி ஆழி கடைந்த தட தோள் இருடிகேசன்
என்ன - மந்தரமலையைக்கொண்டு பரவிய திருப்பாற்கடலைக் கடைந்த பெரிய
தோள்களையுடைய திருமால்போல,-தோள் வலியால் உழக்கி-(தனது)
தோள்களின்வலிமையாற் (கௌரவசேனைக்கடலைக்) கலக்கி,-அரிநாதம் செய்தான்-
(வெற்றி தோன்றச்)சிங்கநாதஞ்செய்தான்; (எ - று.)

     திருப்பாற்கடலைக்கடைந்த திருமால் பகைவர்சேனைக்கடலைக் கலக்குகிற
வீமனுக்கு உவமை. இதில், மந்தரமலை வீமன்தோளுக்கு உவமையாதல்
பெறப்படும்.பி-ம்: கால்பனிப்பக்காலாளால்.

176.-துரியோதனன்தம்பியரிருவரை வீமன் கொல்லுதல்.

நிருபர்தொழுங்கனைகழற்கானிலவேந்தன்றம்பியரினெடும்போதாக
விருவர்புறங்கொடாமலதிர்ந்தெதிர்ந்திருதோள்வலிகாட்டவிருவரோடு
மொருவரொருவரையறியாவண்ணமிவனொருவனுமேயுடன்றுசீறிப்
பொருதுபிருகனையும்விறற்சூசிதனையும்வானிற்போக்கினானே.

     (இ-ள்.) நிருபர் - அரசர்கள், தொழும்-வணங்குகிற, கனைகழல் கால்-
ஒலிக்கின்ற வீரக்கழலை யணிந்த பாதத்தையுடைய, நிலம் வேந்தன்-பூமி
முழுவதுக்கும் அரசனான துரியோதனனது, தம்பியரில்-தம்பிமார்களுள், இருவர்-
இரண்டுபேர், நெடும் போது ஆக-வெகுநேரமாக, புறம்கொடாமல்-முதுகுகொடாமல்,
அதிர்ந்து எதிர்ந்து - ஆரவாரஞ்செய்துகொண்டு எதிரிட்டு, இரு தோள்வலி காட்ட-
(தங்கள்) இரண்டுதோள்களின் வலிமையை வெளிக்காட்ட,-இருவரோடுஉம்-அந்த
இரண்டுபேருடனும், இவன் ஒருவன்உம்ஏ-இந்த வீமனொருத்தன்தானே, உடன்று
சீறிபொருது-மிகக்கோபித்து போர்செய்து, பிருகனைஉம் விறல் சூசிதனைஉம்-
பிருகனென்பவனையும் பராக்கிரமத்தையுடைய சூசியென்பவனையும், ஒருவர்
ஒருவரை அறியா வண்ணம் வானில் போக்கினான் - ஒருத்தர் மற்றொருத்தரை
அறியாதபடி வீரசுவர்க்கத்திற் செலுத்தினான்; (எ - று.)

     உறவுமுறைமை உடம்பைப்பற்றினதேயன்றி உயிரைப்பற்றினதன்றாதலின்
உடம்பைவிட்டு உயிர் நீங்கினவளவிலே அத்தன்மை ஒழிகின்ற இயல்பு விளங்க,
'ஒருவர் ஒருவரை அறியாவண்ணம் வானிற்போக்கினான்' என்றார்;அன்றி,
முன்பின்னாகாமற்