உரிய கோ முனிவன் மா மைந்தன் - முருகக்கடவுளின் பெருமை நிலைக்கு உரியவனும் சிறந்த அந்தணனான துரோணனது சிறந்த குமாரனுமான அசுவத்தாமன், - வீமன் கையில் பகன் பட்ட பாடு எல்லாம் படுத்தி-வீமசேனனதுகையிற் பகாசுரன் பட்ட பாடெல்லாம் (அக்கடோற்கசன்) படும்படி செய்து, ஒரு கதாயுதத்தால் படியில் வீழ்த்தான் - ஒருகதையினால் (அடித்து அவனை) நிலத்திலே தள்ளினான்; (எ-று.) குகன்பட்டந்தனக்குரிய மைந்தன் எனஇயையும்; முருகக் கடவுள்போல அசுவத்தாமனும் சிவகுமாரனாகிய சிறப்புடையானென்பதாம். "உலாவருந்தனது தாதையொத்த வலியுடைய காளைகழ லுதையினால், விலாவொடிந்து தடமார்பொடிந்துமிடல் வெரிநொடிந்து படுவெம்பிணப், புலாலளைந்த விருகவு ளொடிந்து பொருபுய மொடிந்து கடையொத்தவாய், நிலாவெழுங்கொடிய வெயி றொடிந்து செயலின்றி வாணிருதனிற்கவே" என்ற செய்யுளினால், வீமன் கையிற் பகன் பட்ட பாடெல்லாம் அறிக. (575) 179.-கடோற்கசனைக் கொல்லும்படி துரியோதனன் வேண்டியதற்குக் கர்ணன் உடன்படாமை. மோகித்துவிழுமரக்கன்மீண்டெழுந்து மோகரிக்கமுடிமகீபன் வேகித்துக்கன்னனைப்பார்த்திவனுயிரை வீட்டுகெனவேகத்தண்டாற் சோகித்துத்தளர்ந்தான்மேற்றொடேன்விசய னுயிருணவென்றொடை யோசாலத் தாகித்ததிப்பொழுதேகொன்றுனக்குக் கடன்ஞாலந்தருவேனென்றான். |
(இ-ள்.) மோகித்து விழும் - (இங்ஙனம்) மூர்ச்சித்துக் கீழ் விழுந்த, அரக்கன் - கடோற்கசன், மீண்டு எழுந்து மோகரிக்க. பின்பு மயக்கந் தெளிந்து ஆரவாரஞ்செய்ய, - (அதுகண்டு), முடி மகீபன் - கிரீடாதிப தியான துரியோதனன், வேகித்து - விரைவு கொண்டு, கன்னனை பார்த்து-, 'இவன்உயிரை வீட்டுக - இக்கடோற்கசனுயிரை (இப்பொழுது) ஒழிப்பாயாக,' என - என்று சொல்ல, - (அதற்குக் கர்ணன்),-'வேகம் தண்டால் சோகித்து தளர்ந்தான் மேல் - விசையுள்ள (அசுவத்தாமன்) கதையினால் வருந்தித் தளர்ச்சியுற்ற இவன்மேல், தொடேன் - (இப்பொழுது நான்) அம்புதொடுக்கமாட்டேன்: என தொடைஓ - எனது அம்போ, விசயன் உயிர் உண-அருச்சுனனது உயிரைக் கொள்ளுதற்கு, சால தாகித்தது - மிக வேட்கைகொண்டுள்ளது; (ஆதலால்), இப்பொழுதுஏ கொன்று உனக்கு கடல் ஞாலம் தருவேன் - இப்பொழுதே(அருச்சுனனைக்) கொன்றுஉனக்குக் கடல்சூழ்ந்த நிலவுலகம் முழுவதையும் (இடையூறின்றித் தனியேபுரிய தாம்படி) கொடுப்பேன்,' என்றான் - என்று சொன்னான்; (எ-று.)-பி-ம்: தொடைபோய்ச். (576) 180.-கிருபாசாரியன் கர்ணனைப் பரிகசித்தல். நிருபனுடனிரவிமகன்புகன்றவுரை கேட்டருகேநின்றவிற்கைக் பகிருன்மிகநகைத்தெதிதேகிட்டினான் முதுகிடுவைகிரீடிதன்னைப் | |