பக்கம் எண் :

பதினான்காம் போர்ச்சருக்கம்349

புகழைக்காட்டிலும் மிகவும் நல்லதென்று கருதித் தனது கொடிய இயல்பினால்
மிகுதியாக(த்தான்) வளரச்செய்கிற பழியைக்காட்டிலுங் கருமையான இருட்டுப்
பரவியபொழுது,-வயங்கு தீபம் நெடு வாளினால் நிசையின்உம் பொருதும் என்று -
விளங்குகிற  விளக்குக்களின் மிக்கஒளியினது உதவியால் இராத்திரியிலும்
போர்செய்வோமென்று நிச்சயித்து, தெவ்வர்முனை நேர் நடந்தனன்-பகைவர்
முன்னிலையிலே எதிர்த்துச்சென்றான்; (எ - று.)

     கீர்த்தியை வெண்ணிறமுடைய தென்றும், அபகீர்த்தியைக்
கருநிறமுடையதென்றுங் கூறுதல், கவிமரபு, புகழின்பெருமையைச் சிறிதும்
பாராட்டாது துரியோதனன் தான் மேன்மேல் ஈட்டுகிற பழியினுங்கருமையான
இருளென்று, இருளின் கருநிறமிகுதியை எடுத்துக்கூறினார்.

     இதுமுதற் பன்னிரண்டு கவிகள் - பெரும்பாலும் ஒன்று மூன்று
ஐந்தாஞ்சீர்கள்மாச்சீர்களும், இரண்டு நான்கு ஆறாஞ்சீர்கள் கூவிளங்
காய்ச்சீர்களும், இருளென்று,ஏழாவது விளச்சீரு மாகிய எழுச்சீராசிரிய
விருத்தங்கள்   
                                        (580)

184.-துரியோதனன் தன்சேனைமுழுவதும் நிறைய விளக்கெடுப்பித்தல்.

பகலிராவரவழைத்தனன்பகைவர்பாகனென்றுபடுபகலையவ்
வகலிராவினிலழைத்தனன்கொலெனவண்டகூடமுறவிருளறுத்
திகலிராகவொளியுமிழ்விளக்கினமெடுக்கவென்றுகடிதேவினான்
தகலிராததொர்மனத்தினான்வலியதனதனேர்தருதனத்தினான்.

     (இ-ள்.) 'பகைவர் பாகன் - (தனக்குப்) பகைவர்களான பாண்டவர்கட்கு
உரியதேர்ப்பாகனான கண்ணன், பகல் இரா வர அழைத்தனன் - (சூரியனைச்
சக்கரத்தால்மறைத்துப்) பகலிலே இரவை வரும்படி செய்தான், என்று-என்று
எண்ணி,(அதற்குமாறாக), படு பகலை - நடுப்பகற்பொழுதை, அ அகல் இராவினில்-
அன்றைத்தினத்துநீண்ட இராத்திரியிலே, அழைத்தனன் கொல் - (இவன்)
வரவழைத்தானோ?' என - என்று (காண்பவர்) கூறும்படி,-தகல் இராதது ஒர்
மனத்தினான் - தக்கஉயர்குணமில்லாததொரு மனத்தையுடையவனும், வலிய தனதன்
நேர்தரு தனத்தினான் -  வலிமையுடைய குபேரன்போன்ற செல்வமுடையவனுமான
துரியோதனன் அண்டகூடம் உற இருள் அறுத்து இகல்-அண்ட கோளத்தினிடம்
முழுவதிலும் இருளை யொழித்து எதிர்க்கவல்ல, இராகம் ஒளி உமிழ் விளக்கு
இனம்-சிவந்த ஒளியை வீசுகிற விளக்குக்களின் கூட்டத்தை, கடிது எடுக்க -
விரைவில் ஏற்று வீராக,  என்று-, ஏவினான்-(ஏவலாளர்க்குக்) கட்டளையிட்டான்;

     சயத்திரதனைக்கொல்லுதற்பொருட்டுக் கண்ணன் பகலில் இரவை
வருவித்தபடியால் அதற்குமாறாகத் துரியோதனன் இரவிற் பகலைவரச்
செய்தானென்றுபார்த்தவர் வியந்துரைக்கும்படி இருளென்பது சிறிதுமில்லாதவாறு
சுடர்விளக்கெடுக்கவென்று கட்டளையிட்டா னென்க. தற்குறிப்பேற்றவணி. (581)