அருச்சுனன் நாகாஸ்திரத்துக்குத் தப்பியுய்வானாயின் அப்பொழுது, அவன் மேல்இந்தவேலை எறிவானானால் அவன் தவறாமல் இறந்திடுவனாதலால், அங்ஙனஞ்செய்யாமல் இப்பொழுதே போக்கியமைபற்றி, உமக்குக் கர்ணனே போரில்வெற்றியும் அரசும் இன்று கொடுத்தவனாவ னென்று கண்ணன் அருளிச்செய்தான்.அவனிவழங்குதற்குக் கர்ணன் பரம்பரைக் காரணமென்றவாறு. இந்த உண்மையைவெளியிட்டது, பாண்டவரது புத்திரசோகத்தைத் தீர்க்கும்பொருட் டென்க. கண்ணன்திரு வாய்ப்பாடியில் ஆய்ச்சியரோடு கலந்து குரவைக்கூத்து குடக்கூத்து முதலியநடனங்களைத் திருவிளையாட்டாக நிகழ்த்தி அவர்கள் மனத்தை மகிழ்வித்துத்தானும் திருவுள்ளமுவந்தமைபற்றி, 'கோவியர் கூத்தன்' என்றார். கண்ணனை'அரவின் முடியின்மேல் நடித்த கூத்துடைக்கோவியர்கூத்தன்' எனக் குறித்ததனால்,கர்ணன் வேலை யெறிந்து கடோற்கசனைக்கொன்றவளவிலே அருச்சுனன்பிழைத்ததற்காக மிகமகிழ்ந்து கூத்தாடினனென்று வியாசபாரதத்திற் கூறியசெய்திகுறிப்பித்தவாறு. பி - ம்: போரரக்கர், 'நலப்படை வடிவேல் விசயனைச்செகுக்கு நால்வருமழிவதுதிண்ண, மலப்படாதரவக்கொடியவனுரை யாலந்தவேலோச்சினனிவன்மேல்' என்று சிலபிரதிகளில்முன்னிரண்டடிகள்.(610) 214.-அதுகேட்டும்பாண்டவர் தேறி மகிழ்தல். தருமனுமருத்துமடன்மருத்துவருந்தவர்மருத்துவான்மகனைப் பெருமையும்வலியுநல்வினைப்பயத்தாற்பெற்றனமெனவுறத்தழுவி யருமையினளித்தமகவுடைச்சோகமாற்றியங்குவகையரானார் கருமமுமுலகத்தியற்கையுமுணர்ந்தோர்கலங்குதலுறுவரோகலங்கார். |
(இ-ள்.) தருமன்உம்-யமதருமராசனும், மருத்துஉம்-வாயுதேவனும், அடல் மருத்துவர்உம்-வல்லமையுள்ள தேவவைத்தியரான அசுவிநீ தேவர்களும். தந்தவர்-பெற்றகுமாரராகிய தருமனும் வீமனும் நகுலசகதேவரும், அங்கு - (கண்ணன்வார்த்தையைக்கேட்ட) அப்பொழுது, பெருமைஉம் வலிஉம் நல்வினை பயத்தால் பெற்றனம் என - கௌரவத்தையும் வலிமையையும் புண்ணியபயனாகபெற்றோ மென்று எண்ணி, மருத்துவான்மகனை உற தழுவி- இந்திரகுமாரனான அருச்சுனனை நன்றாகத்தழுவிக்கொண்டு, அருமையின் அளித்தமகவுடை சோகம் ஆற்றி - அருமையாகத்தாம் பெற்ற புத்திரனான கடோற்கசனதுசம்பந்தமான விசனத்தை யொழித்து, உவகையர் ஆனார் - மகிழ்ச்சியுடையவரானார்கள்; கருமம்உம் உலகத்து இயற்கைஉம்உணர்ந்தோர் - வினைப்பயனையும் உலகநடத்தையின் தன்மையையும் அறிந்தவர்கள், கலங்குதல் உறுவர்ஓ - கலக்கமடைவார்களோ? கலங்கார்-: (எ- று.) ஈற்றடியிற்கூறிய பொதுப் பொருளைக்கொண்டு மற்றையடிகளிற் கூறிய சிறப்புப்பொருளை விளங்கவைத்ததனால், வேற்றுப் |