சூதுபோரிற் பாண்டவரை வென்றமை, திரௌபதியைத் துகிலுரியத் தொடங்கியமை,வநவாச அஜ்ஞாதவாசங்களைக் கடந்த பின்பும் பாண்டவர்க்கு அரசுஇல்லையென்றமை முதலிய பல அக்கிரமங்களையுடைமைபற்றி, 'காவலர்நீதியைக்கடந்தோன்' என்றார், சேத்து-செந்நிறம், அரியெதிர்கரி- இல்பொருளுவமை. பி-ம்:படுத்துக். எதிர்க்கரியென. (615) 219.-கௌரவர் தோற்றுச்செல்லுதல். அனைவருமொருவர்போலுடைந்தவனியாளுடையரசனோடமரிற் றுவனைவருதடந்தேர்துரகதங்களிறுமுதலியயாவையுந்தோற்று நினைவருவிறலோர்தனித்தனிநெருக்கிநின்றுழிநின்றுழித்துரக்க வனைவருங்கழற்காலகொப்புளமரும்பவாசறைப்பாசறையடைந்தார். |
(இ-ள்.) நினைவு அரு விறலோர் அனைவர்உம்-மனத்தினால் நினைத்தற்கும் அருமையான பராக்கிரமத்தையுடைய பாண்டவர் பக்கத்தவரெல்லாரும், தனி தனி நெருக்கி-தனியே தனியே (ஒவ்வொருவரும்) எதிர்த்து வந்து தாக்கி, நின்றஉழி நின்றஉழி துரக்க-நின்றநின்ற இடங்கள்தோறுந் துரத்துதலால்,-அமரில்-போரிலே, அவனி ஆள் உடை அரசனோடு அனைவர்உம் ஒருவர்போல் உடைந்து-பூமியை யாளுதலுடைய துரியோதனராசனுடன் கௌரவர்பக்கத்தவ ரெல்லாரும் ஒருத்தர்போலவே தோற்று, துனைவரு தட தேர்-விரைந்துவருகிற பெரிய தேர்களும்,துரகதம்-குதிரைகளும், களிறு - யானைகளும், முதலிய - முதலாகவுள்ள, யாவைஉம்-எல்லாச் சிறப்புக்களையும், தோற்று-இழந்து,-கழல் கால் கொப்புளம் அரும்ப-வீரக்கழலையணிந்த பாதங்களிலே, கொப்புளமுண்டாக, ஆசறை - முடிவிலே பாசறை அடைந்தார்-(தமது) படைவீட்டைச் சேர்ந்தார்கள்; (எ - று.) ஆசறை-'ஐ' விகுதிபெற்ற தொழிற்பெயர்; ஆசறுதி-முடிவு-வனைவரும் கழல் கால் என்று எடுத்து - அணிந்த வீரக்கழலையுடைய கால் என்று உரைப்பினுமாம்; இவ்வுரைக்கு, வாசறை பாசறை என்று எடுத்து, வாசஞ்செய்யுமிடமான படைவீடு என்க; வாசறை-வாசவறை யென்பதன்விகாரம். பி-ம்: ஆசறுபாசறை. (616) 220.-மறுநாட் சூரியனுதித்தல். முற்பொழு தொருபொற் றிகிரியான்மறைந்த தாழ்வற மூளெரி முகத்தி லற்பொழு தடைந்த வாயிரஞ் சுடரு மநேகநூ றாயிரஞ் சுடராய் நாற்பொழு திதுவென் றியாவரும் வியப்ப நாகரா லயம்வலம் புரிந்து பிற்பொழு தவற்றைக் கவர்ந்துசென் றுதயப் பிறங்கலிற் பிறங்கினன்பெரியோன். |
(இ-ள்.) பெரியோன்-தேவர்களில் முதல்வனான சூரியன்,-ஒரு பொன் திகிரியால் முன்பொழுது மறைந்த தாழ்வு அற-ஒப்பற்ற பொன்னிறமான (அல்லது அழகிய) திருவாழியால் முந்தின நாளில் (தான்) மறைபட்டதனலாகிய குறைவு நீங்க, மூள் எரி முகத்தில் அல் பொழுது அடைந்த ஆயிரம் சுடர்உம் அநேகம் |