நூறு ஆயிரம் சுடர் ஆய்-பற்றியெழுந்தன்மையுள்ளஅக்கினியினிடத்திலே இராக்காலத்திற் சேர்ந்த (தனது) ஆயிரங்கிரணங்களும் பல நூறாயிரக்கணக்கான விளக்கொளிகளாய்(மிக்கவிளங்கிநின்று),-நாகர் ஆலயம் வலம் புரிந்து - தேவர்கட்குத்தங்குமிடமான மகாமேருகிரியைப் பிரதட்சிணஞ் செய்துகொண்டு,- பின்பொழுது-பின்பு, அவற்றை கவர்ந்து சென்று - அவ்வொளிகளையெல்லாம் மீளவுங் கவர்ந்துகொண்டு வந்து,-நல்பொழுது இது என்று யாவர்உம் வியப்ப-இது நல்லகாலமென்று எல்லாரும் கொண்டாடும்படி, உதயம் பிறங்கலில்பிறங்கினன்- உதயபருவதத்திலே விளங்கினான்; (எ - று.) பி-ம்: அனேகமாயிரஞ்சுடராய. சூரியன் அஸ்தமிக்கிற பொழுதில் தனதுகிரணங்களை அக்கினியினிடம் வைத்துவிட்டுச் சென்று பின்பு உதிக்கையில் அக்கிரணங்களை அக்கினியினின்றும் மீட்டுக்கொள்கின்றன னென்பது, நூாற்கொள்கை, அங்ஙனம் அக்கினியினிடத்தில் வைக்கப்பட்ட சூரியகிரணங்கள் அன்றைநாளிரவில் மிகப் பலவிளக்கொளிகளாய் விளங்கினமையை, சூரியன் சக்கரத்தால் தான் மறைபட்ட குறைதீரத் தனது ஆயிரங்கிரணங்களையும் அவ்விரவிற் பல நூறாயிரங் கிரணங்களாக வளரச்செய்து நின்றதாகக் கற்பித்துக் கூறினார்; தற்குறிப்பேற்றவணி. அந்நாளிரவிற் போர்நிகழ்கையில் தேர்தோறும் ஐவைந்தும், யானைதோறும் மும்மூன்றும், குதிரை தோறும் ஒவ்வொன்றுமாகச் சேனைகளிற் பெரிய தீபங்கள் ஏற்றி யமைக்கப்பட்டன வென்று முதனூலிற்கூறியுள்ளதனால், 'அநேகநுறாயிரஞ் சுடர்' எனப்பட்டது.(617) பதினான்காம்போர்ச்சருக்கம் முற்றிற்று ---------- பதினைந்தாம்போர்ச்சருக்கம். 1.-தெய்வ வணக்கம். சித்த சித்தொ டீச னென்று செப்பு கின்ற மூவகைத் தத்து வத்தின் முடிவு கண்ட சதுர்ம றைப்பு ரோகிதன் கொத்த வீழ்த்த சோலை மன்னு குருகை யாதி நெஞ்சிலே வைத்த முத்தி நாத னன்றி வான நாடர் முதல்வர்யார். |
(இ-ள்.) சித்து - சித்தும், அசித்தொடு-அசித்தும், ஈசன் - ஈசுவரனும், என்றுசெப்புகின்ற-என்றுசொல்லப்படுகிற, மூவகை தத்துவத்தின் - மூன்றுவகைப்பட்டதத்துவப் பொருள்களின், முடிவு-தேர்ந்தநிலையை, கண்ட- அறிந்த,சதுர் மறைபுரோகிதன்- நான்குவேதங்களும்வல்ல ஆசிரியரும், கொத்து அவிழ்த்தசோலை மன்னு குருகை ஆதி - பூங்கொத்துக்கள் மலரப்பெற்ற சோலைகள் பொருந்திய திருக்குருகூரி லவதரித்த தலைவருமான நம்மாழ்வரால், நெஞ்சிலே வைத்த - மனத்திலே வைத்துத்தியானிக்கப் பெற்ற, முத்தி நாதன் அன்றி-பரமபதத்துக்குத் தலைவனான |