பக்கம் எண் :

பதினைந்தாம் போர்ச்சருக்கம்379

தினும்மேலாகத் துரோணன்சேனைகளைச்செலுத்துகிறவனாதலுங்காண்க. பி-ம்:
புனைந்துதாம். உவமைசாலத்.

     இதுமுதல் பதினெட்டுக் கவிகள்-கீழ்ச்சருக்கத்தின் 155-ஆங்கவிபோன்ற
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தங்கள்.                 (629)

13.-அம்முனிவர்கள் துரோணனை நோக்கிப் பேசத்தொடங்கல்.

மகத்தியன்மரீசியாதியெழுவருமலயச்சார
லகத்தியன்முதலாவுள்ளவனைவரும்வருதல்கண்டு
செகத்தினினிறைந்தகேள்விச்சிலைமுனியெதிர்சென்றேத்தி
முகத்தினாலிறைஞ்சிநிற்பமொழிந்தனர்மொழிகள்வல்லார்.

     (இ-ள்.) மகத் இயல் - பெருமையாகிய தன்மையையுடைய, மரீசி ஆதி -
மரீசிமுதலிய, எழுவர்உம் - ஏழுபேரும் (ஸப்தருக்ஷிகளும்,) மலயம் சாரல்
அகத்தியன்முதல் ஆ உள்ள - பொதிய மலையின்சாரலிலே வாழ்கின்ற
அகத்தியன்முதலாகவுள்ள, அனைவர்உம் - எல்லாவிருடிகளும், வருதல் -
(தன்னிடம்)வருதலை, கண்டு - பார்த்து,-செகத்தினில் நிறைந்த கேள்வி சினை
முனி -உலகத்தில் நிரம்பிய நூற்கேள்விகளையுடைய வில்வித்தைவல்ல
அந்தணனானதுரோணாசாரியன், எதிர் சென்று ஏத்தி - (அவர்களை)
எதிர்கொண்டு சென்றுதுதித்து, முகத்தினால் இறைஞ்சி நிற்ப - தலைவணங்கி
நமஸ்கரித்து நிற்க,-மொழிகள்வல்லார் - பேச்சுக்களில் வல்லவர்களான
அம்முனிவர்கள், மொழிந்தனர் -(துரோணனைநோக்கிச் சில) சொன்னார்கள்;
(எ - று.)- அவற்றை, அடுத்தஇரண்டுகவிகளிற் காண்க.

     மஹத் - மகிமை வடசொல்; மரீசியாதி யெழுவர் - மரீசி, வசிஷ்டர், அத்திரி,
விசுவாமித்திரர், கௌதமர், ஜமதக்நி, பரத்துவாசர் என்பவர்; இதனை முதனூலால்
அறிக. இது, ஒருவகைச் சப்தருஷிக்கிரமம், அகஸ்தியமுனிவர் வடதிசைநீங்கித்
தென்திசை வந்து பொதியமலையில் வாழ்ந்தன ரென்பது பிரசித்தம். மகத்து
இயல்எனப்பிரித்து - யாகவுரிமையை யுடைய என்றுமாம்.               (630)

14.-இதுவும், அடுத்தகவியும்-ஒருதொடர்:முனிவர்கள் துரோணனுக்குச்
செய்யும் உபதேசம்.

மறைகெழுநூலுந்தேசுமாசிலாத்தவமுஞான
முறைவருமுணர்வுமல்லான்முனிவரர்க்குறுதியுண்டோ
துறைகெழுகலைகள்வல்லாய்துன்னலர்ச்செகுக்கும்போரு
நிறைதருவலியும்வாழ்வுநிருபர்தம்மியற்கையன்றோ.

     (இ-ள்.)  துறை கெழு கலைகள் வல்லாய் - (பற்பல) பொருட்டுறைகள்
விளங்கப்பெற்ற சாஸ்திரங்களில் வல்லவனே! மறைகெழு நூல்உம் - வேதங்களும்
(அவற்றின்பொருள்) விளங்கப்பெற்ற சாஸ்திரங்களும், தேசுஉம்-பிரமதேஜகம், மாசு
இலா தவம்உம்-குற்றமில்லாத தபசும், ஞானம் முறைவரும் உணர்வும்உம் -
ஞானநூல்களின்படியே உண்டாகின்ற மெய்யறிவும், அல்லால் -