லாமல் தேரின்மேல் விருப்பமில்லாதவனாய், தூ நலம் திகழும் சோதி சோமியம் - பரிசுத்தமான நற்குணங்கள் விளங்கப்பெற்ற பரஞ்சோதியாகிய கடவுளை யடைதற்குரியசாந் தகுணவமைதியை, அடைந்து நின்றன்-; (எ - று.) அரசர்க்குரிய தேரின்மேல் ஏறிநிற்றலை ஒரு சிறப்பாகக்கொள்ளலாம், புண்ணியப்பயனால் விமானம் வந்துதோனற அதன்மேலேறி வானுலகஞ் சேர்தலிலேயே கருத்தைச் செலுத்தினனென்க. சோதி-சோதிவடிவமாகிய கடவுள், சோமியம்=ஸௌம்யம்: சாந்தகுணம். (633) 17.-துரோணனைக்கொல்ல இதுவே சமய மென்று கண்ணன் கருதுதல். கோடையால்வற்றிமீண்டுங்கொண்டலானிறைந்ததெண்ணீ ரோடையாமென்னநின்றோன்முன்னரேயுரைத்தவார்த்தை மாடையாலிந்த்ரநீலமணிவரைவளைத்தாலன்ன வாடையானறிந்துசொற்றவவதியீதென்றுகொண்டான். |
(இ-ள்.) கோடையால் - கோடைக்காலத்து முதிர்ந்த வெயிலினால், வற்றி- நீர்வறண்டு, மீண்டுஉம்-மறுபடியும்,கொண்டலால்நிறைந்த-மேகம் மழை பெய்ததனால்நிரம்பிய, தெள் நீர் - தெளிவான் நீரையுடைய, ஓடை ஆம் என்ன- நீரோடைபோல,நின்றோன்-(அகம்நிரம்பித் தணிந்து) நின்றவனான துரோணன், முன்னர்ஏ -முன்னமே (முதல்நாட்போர்த் தொடக்கத்திலேயே), உரைத்த - சொன்ன, வார்த்தை-பேச்சை, இந்த்ரநீலமணி வரை மாடையால் வளைத்தால் அன்ன ஆடையான் -இந்திர நீலரத்தினமயமானதொரு மலை பொன்னினாற் சூழப்பட்டாற்போன்றபொற்பட்டாடையுடையவனான கண்ணபிரான்,-அறிந்து - ஞாபகத்திற் கொண்டு,சொற்ற அவதி ஈது என்று கொண்டான் - (அவன்) சொன்ன சமயம் இதுவேயென்று திருவுள்ளம்பற்றினான்; (எ - று.) மனம் ஒழுக்கநிலையில் நிற்றற்குஉரிய தத்துவஞானத்தை இதுவரையிலுங்கொள்ளா திருந்த நிலைக்கு ஓடை கோடையால் வற்றிய தன்மையையும், இப்பொழுது முனிவர்களின் இதோபதேசத்தால் அந்தமெய்யுணர்வு நிரம்பப்பெற்ற நிலைக்கு அவ்வோடை கொண்டலால் தெண்ணீர்நிறைந்த தன்மையையும் உவமைகூறினார். கோடைக்காலம் - முதுவேனிற்பருவம்; க்ரீஷ்மருது:ஆனி ஆடிமாதங்கள். முன்னரே யுரைத்த வார்த்தை- முதற்போர்ச்சருக்கச்செய்யுட்கள் 14, 15 காண்க. பி-ம்: கோறற்கவதி. (634) 18.-கண்ணன் திட்டத்துய்மனைத் துரோணன்மேலேவித் தருமனோடு பேசல். கடல்வடிவம்பலம்நின்றகைதவன்றன்னோடோதிச் சுடுககனலளித்ததிட்டத்துய்மனையவன்மேலேவி வடுவுரைமறந்துஞ்சொல்லாமன்னறன்மைந்தனோடும் அடியவரிடுக்கண்டீர்ப்பானாமுறையருளிச்செய்வான். |
(இ- ள்.) அடியவர் இடுக்கண் தீர்ப்பான்-(தனது) அடியார்களுடைய துன்பங்களைப்போக்கியருள்பவனான கண்ணபிரான்,- |