பக்கம் எண் :

382பாரதம்துரோண பருவம்

கடல் வடிம்பு அலம்ப நின்ற-கடலானது (தன்) கால்விளிம்பை அலம்பும்படி
(ஓங்கி)நின்ற, கைதவன் தன்னோடு-பாண்டியனுடனே, ஓதி-சொல்லி, கூடு கனல்
அளித்த திட்டத்துய்மனை - சுடுகின்ற நெருப்பினாற் பெறப்பட்ட த்ருஷ்டத்யும்
நனை,அவன்மேல் ஏவி - துரோணன்மேற் (போர்க்குச்) செலுத்தி,-வடு
உரைமறந்துஉம்சொல்லா மன் அறன் மைந்தனோடுஉம்-குற்றமாகிய வார்த்தைகளை
மறந்துங்கூறாதபெருமையையுடைய தருமபுத்திரனுடனே, ஆம் முறை-தக்கபடி,
அருளிச்செய்வான்-(சிலவார்த்தைகளைக்) கூறியருள்வான்;  (எ - று.)-அவற்றை,
அடுத்தஇரண்டுகவிகளிற் காண்க.

     திட்டத்துய்மன் அப்பொழுது அருகிலில்லாமல் தூரத்திலிருந்ததனால்,
கண்ணன் பாண்டியனுடன் சொல்லி, அவன்  மூலமாக, துரோணனைப் பொருது
கொல்லுதற்கேற்ற சமய மிதுவேயென்ற செய்தியைத் திட்டத்துய்மனுக்குத்
தெரிவிக்கவைத்து, தருமபுத்திரனுடனே சிலகூறலாயின னென்பதாம். அடியவரிடுக்
கண்டீர்ப்பான் - கருத்துடையடைகொளியணி.

     முன்னனொருகாலத்தில் மதுரையையழித்தற்குவந்த கடலை
உக்கிரகுமாரபாண்டியன் ஸ்ரீசோமசுந்தரக்கடவுள் அருளிய வேலையெறிந்து
வற்றச்செய்து அக்கடல் தன்னுடையகாலின் விளிம்பை அலம்பும்படி
உயர்ந்துநின்றமையால், அவனுக்குக்கடல்வடிம்பலம்பநின்ற
பாண்டியனென்றுபெயராயிற்று. இந்தச் சரித்திரம், திருவிளையாடற்புராணங்களிற்
கூறப்பட்டுள்ளது, "அடியிற்றன்னளவரசர்க்குணர்த்தி, வடிவேலெறிந்த
வான்பகைபொறாது, பஃறுளியாற்றுடன் பன்மலையடுக்கத்துக்,
குமரிக்கோடுங்கொடுங்கடல் கொள்ள," "ஆழிவடிவம்பலம்பநின்றானும்"
என்பனவும்காண்க. (அவன் பெயர் மதுரைக்காஞ்சியிலும், புறநானூற்றிலும்
'நெடியோன்'என்றசொல்லாற்குறிக்கப்பட்டுள்ளது.) அப்பாண்டியனது தன்மையை
இங்கேஅருச்சுனனுக்குப்பெண்கொடுத்த சித்திர வாகனன்மேலேற்றி,
'கடல்வடிம்பலம்பநின்றகைதவன்' என்றார்.  இங்ஙனம் ஒருகுலத்தரசருள்
ஒருவர்க்குஉரிய தன்மையை மற்றொருவர்மேலேற்றி உபசாரவழக்காகக் கூறுவது
ஒருவகைக்கவிமரபு.

     'சுடுகனலளித்த திட்டத்துய்மன்' என்றதன் விவரம்:-
அங்கிவேசமுனிவனிடத்தில் துரோணாசாரியனுடன் வில்வித்தையைக்கற்றுவந்த
பொழுது' 'எனக்கு இராச்சியங்கிடைத்தபின்னர்ப் பாதி உனக்குப்
பங்கிட்டுக்கொடுப்பேன்' என்று அவனுக்கு வாக்குதத்தஞ்செய்திருந்த
பாஞ்சாலராசனான துருபதன், பின்பு ஒருகாலத்தில் அத்துரோணன் தன்
குழந்தைக்குப்பாலுக்காகப் பசுவேண்டுமென்று சென்று கேட்டபொழுது,
முகமறியாதவன்போல'நீயார்? என்று வினவிச் சிலபரிகாசவார்த்தைகளைச்
சொல்லிச் சபையிற் பங்கப்படுத்த, அப்பொழுது அவன்' 'என்மாணாக்கனைக்
கொண்டுஉன்னை வென்றுகட்டிக்கொணரச்செய்து உன் அரசையுங்
கைக்கொள்வேன்' என்றுசபதஞ்செய்துவந்து, பின்பு அங்ஙனமே  அருச்சுன