னைக்கொண்டு பங்கப்படுத்தி அந்தப்பிரதிஜ்ஞையை நிறைவேற்றிவிட, அவ்யாகசேனன் துரோணன்மீது மிகக் கறுக் கொண்டு அவனைக் கொல்லும்பொருட்டு ஒருபுத்திரனும் அருச்சுனனது பல பராக்கிரமங்களைக்கண்டு மகிழ்ந்து அவனுக்குமணஞ்செய்து கொடுக்கும்பொருட்டு ஒருபுத்திரியும் உதித்தல்வேண்டு மென்று புத்திரகாமயாகஞ் செய்விக்க, அவ்வோமத் தீயினின்று திட்டத் துய்மனும் திரௌபதியும் தோன்றின ரென்பதாம். (635) 19.-இதுவும், அடுத்த கவியும்-ஒருதொடர்: துரோணனைக் கொல்லும் வகையைக் கண்ணன் தருமனுக்குக் கூறல். மந்தரமனையபொற்றோண்மாருதிமாளவக்கோ னிந்திரவன்மாமேற்சென்றெரிகணைதொடுத்தபோரி லந்தரமடைந்ததையவச்சுவத்தாமாவென்னுஞ் சிந்துரமதனைவேறோர்திசைக்களிறொப்பதன்றே. |
(இ-ள்.) ஐய-ஐயனே! மந்தரம் அனைய - மந்தரமலையை யொத்த, பொன் தோள் - அழகிய தோள்களையுடைய, மாருதி - வீமசேனன், மாளவம் கோன் இந்திரவன்மா மேல் சென்று - மாளவதேசத்தரசனாகிய இந்திரவர்மாவென்பவன் மேல் எதிர்த்துப்போய், எரி கணை தொடுத்த - ஜ்வலிக்கின்ற அம்புகளைச் செலுத்திச் செய்த, போரில்-, அச்சுவத்தாமா என்னும் சிந்துரம்-அகவத்தாமா வென்னும் பெயருள்ள (அவ்விந்திரவர்மாவின் பட்டத்து) யானையானது, அந்தரம் அடைந்தது - (இறந்து) மேலுலகடைந்தது; வேறு ஓர் திசை களிறு அதனை ஒப்பது அன்று - (அவ்யானைக்கு அதுவே உவமையாவதன்றி) வேறாகிய திக்குயானையொன்றும் அதற்குஒப்பாகமாட்டாது; (எ - று.) பி-ம்: அதனை வெற்றித்,வலத்தாலந்தத். (636) 20. | மதலைபேரெடுத்துப்போரின்மடிந்தவாறுரைத்தபோதே விதலையனாகிப்பின்னைவில்லெடான்வீதறிண்ண முதலமர்தன்னிலந்தமுனிவரன்மொழிந்தமாற்ற நூதலுதிநீயேசென்றுநுவலுதிவிரைவினென்றான் |
(இ-ள்.) மதலை பேர் எடுத்து-துரோணன் மகனான அசுவத்தாமாவென்ற பேரையெடுத்து, போரில் மடிந்த ஆறு உரைத்த போதுஏ-போரில் இறந்ததாகக் கூறியபொழுதே, (துரோணன்), விதலையன் ஆகி - மனச்சஞ்சலமுடையவனாய், பின்னை - பின்பு, வில் எடான் - வில்லையெடுத்துப் போர்செய்யாமல் வீதல் - இறத்தல், திண்ணம் - நிச்சயம்; முதல் அமர்தன்னில்-முதல்நாட்போரில். அந்த முனிவரன் - சிறந்த முனிவனான அந்தத்துரோணன், மொழிந்த - சொன்ன, மாற்றம்- வார்த்தையை, நுதலுதி-கருதுவாயாக: நீஏ சென்று விரைவின் நுவலுதி - நீயே(துரோணன்முன்) சென்று விரைவில் (அங்ஙனம்) கூறுவாய், என்றான் - என்று(கண்ணன் தருமனை நோக்கிச்) சொன்னான்; (எ - று.) இந்திரவர்மாவின் அசுவத்தாமாவென்னும்யானை இறந்த உண்மையைத் துரோணபுத்திரனான அசுவத்தாமா இறந்ததாகத் |