பக்கம் எண் :

பதினைந்தாம் போர்ச்சருக்கம்385

கன்றுகொண்டெறிந்துவெள்ளிற்கனிநனியுதிர்த்துவஞ்சம்
வென்றுகொண்டவனுமீளவிளம்புவனென்பமாதோ.

     (இ-ள்.) என்று கொண்டு - இவ்வாறு, இனம் கொள் -
கூட்டமாகத்திரளுதலைக்கொண்ட, கோவின் - பசுக்களின், இடர்-துன்பம், கெட-
நீங்கும்படி, எழிலி ஏழ்உம் - ஏழுமேகங்களையும், குன்று கொண்டு அடர்த்த-
(கோவர்த்தன) மலையைக்கொண்டு வலியஎதிர்த்துத்தடுத்துவிட்ட, மாயன் -
அற்புதசக்தியையுடையவனான கண்ணாபிரான் தானே, கூறஉம் - சொல்லவும்,
மறுத்து கூற,- (தருமன் அதனைத்) தடுத்துச் சொல்லலே,-கன்றுகொண்டு எறிந்து -
கன்றினால்வீசி, வெள்ளில் கனி நனி உதிர்த்து - விளாமரத்தின் பழத்தை
மிகுதியாய்உதிரச்செய்து, வஞ்சம் வென்று கொண்டவன்உம் - (அவற்றின்)
வஞ்சனையைச்சயித்துக் கொண்டவனாகிய  கண்ணணும், மீள விளம்புவன் -
மறுபடி கூறுவான்; (எ- று.)-அதனை, அடுத்த இரண்டுகவிகளிற்காண்க. என்ப,
மாதுஓ-ஈற்றசைகள், 'என்றுகொண்டு' என்பதில், கொண்டு-அசை; இனி, என்று
எண்ணிக்கொண்டு என்றலுமாம்.                                (640)

24.-இரண்டுகவிகிள்-ஒருதொடர்:தருமனுக்குக்கூறுஞ்
சமாதானத்தைத் தெரிவிக்கும்.

உம்மையின்மறுமைதன்னிலுறுபயனிரண்டும்பார்க்கின்
இம்மையில்விளங்கும்யார்க்குமவரவரியற்கையாலே
மெய்ம்மையேயொருவர்க்குற்றவிபத்தினைமீட்குமாகிற்
பொய்ம்மையுமெய்ம்மைபோலப்புண்ணியம்பயக்குமாதோ.

     (இ-ள்.) உம்மையில்-கழிந்த பிறப்பிலும், மறுமைதன்னில்-வரும்பிறப்பிலும்,
உறு-பொருந்திய, பயன் இரண்டுஉம்-வினைப்பயன்கள் இரண்டும்,-பார்க்கின் -
ஆராயுமிடத்து, இம்மையில் அவர் அவர் இயற்கையாலே -
இப்பிறப்பிற்காணப்படுகிற அவரவரது தன்மைகளினாலே, யார்க்குஉம் -
எல்லார்க்கும், விளங்கும்-; ஒருவர்க்கு உற்ற விபத்தினை -ஒருவர்க்கு மிக்க
ஆபத்தை, பொய்ம்மைஉம் - அசத்தியமும், மெயம்மைஏ மீட்கும் ஆகில் -
உண்மையாகவே போக்குமானால், மெய்ம்மைபோல - சத்தியம்போலவே,
புண்ணியம்பயக்கும். நல்வினைப்பயனைத் தரும்; (எ-று.)-மாதோ-ஈற்றசை.

     இப்பிறப்பில் ஒருவர் அநுபவிக்கிற இன்பதுன்பங்களினால் முற்பிறப்பில்
அவர்செய்த நல்வினை தீவினைகளை ஊகித்தறியலாமென்பதும், இப்பிறப்பில்
ஒருவர்செய்யும்நல்வினை தீவினைகளைகொண்டு வருபிறப்பில் அவர்அடையும்
இன்பதுன்பங்பளை ஊகித்தறியலா மென்பதும் முன்னிரண்டடிகளின் கருத்து,
பின்னிரண்டடியினால், பெரிய ஆபத்துக்காலத்தில்  அதனை நீக்கும் பொருட்டுப்
பொய்கூறலா மென்று வற்புறுத்தியபடி, "பொய்ம்மையும் வாய்மையிடத்த புரைதீர்ந்த,
நன்மை பயக்கு மெனின்" என்றதுங் காண்க. இதனால் அசுவத்தாமா
இறந்தானென்பது ஒருவகையாற்