பக்கம் எண் :

386பாரதம்துரோண பருவம்

பொய்யாயினும் நன்மைபயத்தலால் மெய்போன்றதே யென்று கூறியவாறு.  (641)

25.வல்லவரனந்தகோடிமறைகளின்படியேயாய்ந்து
சொல்லியவறங்கள்யாவுநின்னிடைத்தொக்கவாற்றாற்
புல்லியபொய்யொன்றென்னும்பொருபெருநெருப்புக்கீர
மில்லைநீயொன்றுமெண்ணாதியம்புதியிதனையென்றான்.

     (இ-ள்.) வல்லவர்-அறிந்த பெரியோர்கள், அனந்த கோடிமறைகளின்படிஏ -
அளவிறந்த கோடிக்கணக்கான வேத வாக்கியங்களிற் கூறியபடியே, ஆய்ந்து -
ஆராய்ந்து, சொல்லிய-சொன்ன,அறங்கள் யாஉம் - தருமங்களெல்லாம், நின்னிடை
தொக்க ஆற்றால்-உன்னிடத்துக் கூடியுள்ளபடியால், புல்லிய பொய்ஒன்று-
(இப்பொழுது நேர்கிற) இந்த ஒருபொய்யானது, என் ஆம்-(உனக்கு) யாதுதீங்கு
தருவதாம்? பொரு பெரு நெருப்புக்கு ஈரம் இல்லை - மூண்டெழுந்த மிக்க
நெருப்புக்கு ஈரத்தாலாகும் அபாயம் இல்லை; (ஆகவே), நீ ஒன்றுஉம் எண்ணாது
-நீயாதொன்றையுஞ் சிந்தியாமல், இதனை இயம்புதி - இப் பொய் யொன்றைக்
கூறக்கடவாய், என்றான்-என்று (கண்ணன் தருமனுக்குப்) கூறினான்; (எ - று.)
பி-ம்:
தொக்கவானாற்.

     'நான்கூறுவது நம்முடையபக்கத்தார்க்கு நன்மைதருவதானாலும்
எதிர்ப்பக்கத்தார்க்குத் தீமையை விளைத்தலால் இது பொய்யேயன்றோ!"என்று
தருமனுக்குத் தோன்றுஞ் சங்கையை,  இதனாற்பரிகரிக்கின்றான்
ஸ்ரீக்ருஷணனென்க.அசுவத்தாம இறந்தமைகூறுதல், நிகழாததுகூறலன்றி
நிகழ்ந்ததனையே மாறுபாடாக்கூறுத லாதலால், 'புல்லியபொய்' எனப்பட்டது
பொரு நெருப்பு-எல்லாவற்றையும் எரித்துவிடத்தக்க நெருப்பு எனினுமாம்.
'பெருநெருப்புக்குஈரமில்லை' என்பது, பழமொழி. பெரியோர் கூறிய அறங்கள்
யாவும் நின்னிடத்துஒருங்கேஅமைந்துள்ளதனால், இச்சிறு பொய்யினாற் சிறிதும்
தவறுண்டாகாது;பெருநெருப்புக்குச் சிறியஈரத்தினாற் சிறிதுங் கெடுதியில்லாத
வாறுபோல என்றான்;எடுத்துக்காட்டுவமையணி.                (642)

26.- தருமன் துரோணனருகிற் பிழையறக் கூறத்தொடங்குதல்.

போரறமலைந்துவென்றுபோதத்தாற்பவங்களேழும்
வேரறவெல்லநிற்பானவீடுறநின்றவெல்லை
வாரறவயமாவோட்டிவயங்குதேர்கடவிச்சென்று
பேரறன்மைந்தனாவிற்பிழையறப்பேசுவானே.

     (இ-ள்.)  போர் அற மலைந்து-போரை மிகுதியாகச் செய்து, வென்று-
வெற்றிகொண்டு,(பின்பு), போதத்தால் - தத்துவஞானத்தினால், பவங்கள் ஏழ்உம்
வேர் அற வெல்ல -எழுவகைப் பிறப்புக்களையும் வேரோடறும்படி சயித்திட,
நிற்பான் - சித்தனாய்நிற்பவனான துரோணன், வீடு உற நின்ற எல்லை-
முத்தியடையும்படி நின்றஇடத்திலே,-போ அறன் மைந்தன் - பெருமையை