களையும் கீழேபோகட்டு,-'புதல்வன்-(தனது) மகனான அசுவத்தாமன், போது இலான்இறந்தான் போலும் - ஆயுட்பொழுதில்லாதவனாய் இறந்துவிட்டான் போலும்,' என்று- என்றுஎண்ணி, இனைதல் இன்றி-வருந்துதலில்லாமல், யார்கண்உம் பந்தம்இல்லான்-எவரிடத்தும் ஆசைப்பாசபந்தம் இல்லாமல் நின்ற அந்தத் துரோணன்,ஏதிலான் போல நின்றான்-அயலான் போல நின்றான்; பிறப்புக்குஏதுவான அவா முனிவருபதேசத்தால் அற்றமை பற்றி, 'இனைதலின்றியேதிலான்போலநின்றான் யார்கணும் பந்தமில்லான்' என்றார், (645) 29.-அச்சமயத்தில் திட்டத்துய்மன் துரோணன்தலையைத் துணித்தல். முள்ளிய னாளக் கோயின் முனிநடுத் தலையை முன்னங் கிள்ளிய பினாக பாணி கிரீசனொ டொத்த வீரன் றுள்ளிய பரித்தேர்த் திட்டத் துய்மன தம்பு சென்று தள்ளிய தப்போ தந்தத் தவமுனி தலையை யந்தோ. |
(இ-ள்.) முள் இயல் நாளம் கோயில்-முட்கள் பொருந்திய தண்டையுடைய தாமரையைத்தங்குமிடமாகவுடைய, முனி - அந்தணனான பிரமனது, நடு தலையை- (ஐந்துதலைகளுள்) நடுவிலுள்ள தலையை, முன்னம் கிள்ளிய-முன்பு கிள்ளியெடுத்த, பினாகபாணி கிரீசனொடு-பிநாகமென்னும் வில்லைக் கையிலுடையவனான சிவபிரானுடனே, ஒத்த-,வீரன்-வீரனாகிய, துள்ளிய பரி தேர் திட்டத்துய்மனது துள்ளியோடுகிற குதிரைகள் பூண்டதேரையுடைய திட்டத்துய்மனுடைய, அம்பு- ,சென்று-போய், அப்போது-,அந்ததவம் முனி தலையை-தவத்தையுடைய முனிவனானஅந்தத் துரோணனது தலையை, தள்ளியது - துணித்துக் கீழே தள்ளிற்று; அந்தோ-ஐயோ!(எ - று.)-'அந்தோ'-கவி கூறிய இரக்கச்சொல். துரோணன் சோர்ந்துநின்ற நிலையில் திட்டத்துய்மன் அவன் தலையைத் துணித்தது அக்கிரம மென்னுங் கருத்துப்பட, பிரமனைச் சிவன் நிஷ்காரணமாகத் தலைகிள்ளியதனை உவமைகூறினரென்பர். முன்னியனாளம் - தாமரைக்கு, அன்மொழித்தொகை. (646) வேறு. 30.-துரோணன் இறந்ததனை அசுவத்தாமன் காணுதல். பட்டனன் வாச பதிநிகர் சேனா பதியென்னக் கெட்டது நாக கேதனன் வீரங் கிளர்சேனை தொட்டவில் லாண்மைத் துரகத தாமா வெதிரோடிக் கட்டழல் வேள்வித் தாதையி றந்த களங்கண்டான். |
(இ-ள்.) வாசபதி நிகர்-பிருகஸ்பதியை யொத்த, சேனாபதி-(கௌரவ) சேனைத்தலைவனான துரோணன், பட்டனன்-இறந்தான், என்ன-என்று அறிந்தவளவிலே,-நாககேதனன் வீரம் கிளர் |