32.- இதுமுதல் மூன்றுகவிகள்-ஒருதொடர்;அசுவத்தாமன் புலம்பலைத் தெரிவிக்கும். வன்பின்மிக்கவீடுமனுன்னைமன்னாகென் றன்பினிப்பாராளவுமன்றேயருள்செய்தான் முன்பினெண்ணவுவமையிலாதாய்முடிவாயோ வுன்பின்வந்தேனுன்னையொழிந்துமுய்வேனோ. | (இ-ள்.) வன்பில் மிக்க வீடுமன்-வலிமையின் மிக்க பீஷ்மன், உன்னை-, ஆகு என்று-'அரசனாவாய்' என்றுசொல்லி, அன்பின் இ பார் ஆளஉம் - அன்போடு இந்தவுலகத்தை யாளும் படியாகவும், அன்றே - அக்காலத்திலே, அருள்செய்தான்- கருணையோடு கூறியுள்ளான்; முன்பின் எண்ண உவமை இலாதாய் - முன்னும் பின்னும் (உன்னோடு ஒரு நிகராகவைத்து) எண்ணுதற்கு ஓரொப்புமையில்லாதவனானநீ, முடிவாய்ஓ - இறந்திடுவாயோ? உன் பின் வந்தேன் - உனக்குப்பின்பிறந்தவனான நான், உன்னை ஒழிந்துஉம் உய்வேன்ஓ - உன்னையொழியப்பெற்றும் உயிர் வாழ்வேனோ? (எ - று.) துரோணன் வீடுமனிடம் வந்து சேர்ந்தபொழுது அவன் இவனைக் கௌரவபாண்டவர்க்குப் பிரதானவில்லாசிரியனாக்கி அவனுக்கு இராசபட்டத்தையும் அரசர்க்கு உரிய குடை கொடி தேர் முதலிய அங்கங்களையும் தந்தன னென்பதை "முனி நீயையா இதற்கு முன்ன மின்று முதலா, இனி யிவ்வுலகுக் கரசாயெம்மி லொருவனாகிக் குனிவில் வலியா லமருங் கோடியென்று கொடுத்தான், பனிவெண்குடையு நிருபர்க்குரிய வரிசை பலவும்" என்பதனாலும் அறிக. (649) 33. | வில்லாய் நீவெம் போர்முனை வெல்லும் விறலாய்நீ சொல்லாய் நீதொல் வேதிய ருட்குத் தொழிலாய்நீ வல்லார் வல்ல கலைகள னைத்தும் வல்லானே யெல்லா மின்றே பொன்றின வுன்னோ டெந்தாயே. |
(இ-ள்.) வில்லாய் நீ - வில்வல்லமையுடையாய் நீ; வெம் போர்முனை வெல்லும்விறலாய் நீ - கொடிய போர்க்களத்திற் பகை வெல்லுந் திறமையுடையாய் நீ;சொல்லாய் நீ - பழமையான அந்தணர்களும் அஞ்சும்படியான வைதீகத் தொழிலுடையாய் நீ; வல்லார் வல்ல கலைகள் அனைத்துஉம் வல்லானே - (ஒவ்வொரு சாஸ்திரத்தில்)வல்லமையுடையார் பலர் தேர்ந்துள்ள சாஸ்திரங்களெல்லாவற்றையும் (ஒருங்கே தனியே) தேர்ந்தவனே! எந்தாயே.-எனது தந்தையே! எல்லாம் - (கீழ்க்கூறிய விற்றிறம் முதலில்) யாவும், இன்றே- இன்றைக்கே,உன்னோடு-உன்னுடனே, பொன்றின - அழித்தனவாம்; (எ - று.)- எந்தாயே -எமதுதாய்போன்றவனே! எனினுமாம். வைதிக லௌகிக தருமங்க ளெல்லாவற்றுக்கும் துரோணன் ஒரு நிதிபோன்றவனென்பது, இதில் விளங்கும். சொல்லாய்- |