பக்கம் எண் :

பதினைந்தாம் போர்ச்சருக்கம்393

மேல்ஏறினவனாய், விரைவில் தங்கள் சேனை வேந்தை எலாம் சென்று எய்தி -
சீக்கிரத்தில் தங்கள் சேனையிலுள்ள அரசர்களையெல்லாம் போய்ச்சேர்ந்து, வில்
வாள் வேல்உம் வாகன ஆதிஉம் அகற்றி நின்மின் என்ன - 'வில்முதலிய
ஆயுதங்களையும் வாகனம் முதலியவற்றையும் நீக்கிவிட்டு நில்லுங்கள்' என்று
சொல்ல,-மாருதி மைந்தனை ஒழிந்தோர் அனைத்துளோரஉம் - வாயுபுத்திரனான
வீமசேனனாகிய வீரனொருத்தனை யொழிந்த மற்றுள்ளாரெல்லாரும், யோகம்
ஞானியர் ஆகி - யோகப்பயிற்சியாற் பெறுதற்கு உரிய தத்துவஞானத்தைக்
கொண்டவர்களைப்போன்று, ஒருவரை போல் நிராயுதர் ஆய் -
ஒருத்தரைப்போலவே படைக்கல மில்லாவர்களாய், மண்ணின்மீது ஒடுங்கி
நின்றார் -(வாகனங்களினின்று இறங்கி) வெறுந்தரையில் (போர்ச்செயலற்று)
ஒடுங்கிநின்றார்கள்;(எ - று.)

     மாருதியென்பது - வாயுபுத்திரனென்னும் பொருளதாதலால்,
மைந்தனென்பதற்கு - வீர னெனப்பட்டது, யோகஞானங்களையுடையவர்
திரிகரணமுமொடுங்கிநிற்றல் இயல்பு ஆதலால், அவர்கள்போன்று இவர்கள்
ஒடுங்கிநின்றாரென்றார்.                                    (653)

37.-அசுவத்தாமனதுநாரயணாஸ்திரத்தை யாவரும் வணங்குதல்.

மற்றைரியமறையொடுநாரணன்றன்வாளிதொடுத்தலுமந்தவாளியூழிக்,
காற்றெரியொடெழுந்ததெனக்கார்கோண்மொண்டுகாரேழுமதிர்ந்த
                               தெனக்கனன்றுபொங்கி,
யேற்றரிபோற்குழாங்கொண்டவயர்தம்மை யெய்தியபோதனை
                              வருந்தம்மிதயமொன்றிச்,
சாற்றரியவுணர்வினராயேத்தியேத்தித் தாடோய்செங்
                           கரமுகுளந்தலைவைத்தாரே.

     (இ-ள்.) மாற்று அரிய மறையொடு-விலக்குதற்கு அருமையான
மந்திரப்பிரயோகத்துடனே, நாரயணன்தன் வாளி தொடுத்தலும்.(அசுவத்தாமன்)
நாராயணாஸ்திரத்தை ஏவிய வளவிலே- அந்த வாளி - அந்த அஸ்திரமானது,-
ஊழிகாற்று எரியொடு எழுந்தது என-கற்பாந்த காலத்துப் பெருங்காற்று
நெருப்புடனேகிளர்ந்து வீசியது போலவும், கார்கோள் மொண்டு கார் ஏழ்உம்
அதிர்ந்தது என-சமுத்திரசலத்தை நிரம்ப எடுத்துப் பருகி மேகங்களேழும்
இடிமுழங்கியது போலவும், கனன்று பொங்கி-உக்கிரங்கொண்டு எழுந்து, ஏறு 
அரிபோல் குழாம் கொண்ட வயவர் தம்மை எய்திய போது -
ஆண்சிங்கங்கள்போலத்திரண்டுள்ள (பாண்டவசேனை) வீரர்களைச் சேர்ந்த
பொழுது,- அனைவர்உம் -அவ்வீரரெல்லாரும், தம் இதயம் ஒன்றி-தங்கள்
மனத்தில் ஒற்றுமைப்பட்டு, சாற்றுஅரிய உணர்வினர் ஆய் - சொல்லுதற்கும்
அரிய தத்துவஞானத்தையுடைவர்களாய்,ஏத்தி ஏத்தி - மிகுதியாகத் துதித்து,
தாள் தோய் செம் கரம் முகுளம்தலைவைத்தார்-முழங்காலையளாவிய சிவந்த
(தங்களுடைய) கைகளைக் குவித்துத்தலைமேல் வைத்துக்கொண்டு
வணங்கினார்கள்;(எ - று.)

     நாராயணாஸ்திரம் மந்திரபலத்துடனே எதிர்ப்பக்கத்தவரனைவரையு
மழித்ததற்கு வர, யாவரும் கைகள் அரும்புகள்போலக்குவி