பக்கம் எண் :

396பாரதம்துரோண பருவம்

போல - ஊழ்வினைபோல,-தட தோள் வீமன் தோள் வலியால் விலக்கஉம் -
பெரிதோள்களையுடைய வீமன் (தனது) புஜபலத்தால் தடுக்கவும்,(தடைப்படாமல்),அ
தொடைபோய்-அந்த அம்பு சென்று, வாசம் தொடைமிடை மார்பு அகம் அணு க-
பரிமளத்தையுடைய போர்மாலை நிறைந்த (அவனது) மார்பினிடத்தைச் சேர,- சுர
அரி தோள்கள் வாள் வலியால் அரிந்த பிரான் - தேவர்க்குப் பகைவனான
வாணாசுரனது தோள்களை ஆயுதத்தின் வலிமையால் அறுத்திட்ட கண்ணபிரான்,
கையில் வில்உம் வாளிஉம் வாகனம் உம் உடன் மாற்றுவித்தான் - (வீமனது)
கையிலுள்ள வில்லையும் அம்பையும் (அவனது) வாகனத்தையும் உடனே
நீக்குவித்தான்;(அதனால்), நாரணன் சாயகம் மிகஉம் நாணிற்று - (அந்த)
நாராணாஸ்திரம் (அவனைக்கொல்லுதற்கு) மிகவும் வெள்கிப்போயிற்று; நாள்
வலியார்தமை சிலரால் கொல்லல் ஆம்ஓ - ஆயுள் வலிமையுடையாரை
எவராலேனுங் கொல்லமுடியுமோ? (எ - று.)

     வீமனை நாராயணஸ்திரம் கண்ணன்செய்வித்த தந்திரத்தாற்
கொல்லாமலொழிந்த தென்ற சிறப்புப்பொருளை 'நாள்வலியார்தமைச்
சிலராற்கொல்லலாமோ' என்ற பொதுப்பொருள்கொண்டு விளக்கினார்;
வேற்றுப்பொருள்வைப்பணி. அன்றே-ஈற்றசை: தேற்றமுமாம்..       (658)

வேறு

42.-அசுவத்தாமன் பாசுபதமெடுக்கத் தொடங்கியபொழுது
வியாசன் வருதல்.

விட்ட வெம்பகழி நாணி மீளுதலும் வில்லின் வேதமுணர்
                                     முனிமகன்
வட்ட வெஞ்சிலையின் மீது பாசுபத வாளி வைப்பதும
                                     னஞ்செயா
முட்ட வன்பினொடு நின்ற காலையில் வியாத
                     னென்றுரைகொண் முனிவரன்
றொட்ட தண்டுமிதி யடியு மாகியுயர் சுருதி வாய்மையொடு
                                  தோன்றினான்.

     (இ-ள்.) விட்ட வெம் பகழி-(அசுவத்தாமன்) பிரயோகித்த கொடிய
நாரயணாஸ்திரம், நாணி - வெட்கப்பட்டு, மீளுதலும் - திரும்பியவுடனே,-வில்லின்
வேதம் உணர் முனி மகன் - தநுர் வேதத்தையறிந்த துரோணாசாரியனது
புத்திரனான அசுவத்தாமன், வட்டம் வெம் சிலையின்மீது-வட்டமாக வளைக்கப்பட்ட
கொடிய வில்லின்மேல், பாசுபதம் வாளி வைப்பது - பாசுபதாஸ்திரத்தை வைத்துத்
தொடுப்பதாக, மனம் செயா - எண்ணி, முட்டவன்பினொடு நின்ற காலையில்-மிகக்
கொடுமையோடு நின்ற பொழுதில்,-வியாதன் என்று உரை கொள் முனிவரன் -
வியாசனென்று புகழ்பெற்ற சிறந்த இருடி, தொட்ட தண்டுஉம் மிதியடிஉம் ஆகி-
கையிலேந்திய பிரமதண்டமும் (பாதத்தில் தரித்த) பாதுகையு  முடையவனாய், உயர்
சுருதி வாய்மையொடு - சிறந்த வேதவாக்கியங்களுடனே [வேதவாக்கியங்களை
உச்சரித்துக் கொண்டு], தோன்றினான் - (அங்கு) எழுந்தருளினான்; (எ - று.)

     பாசுபதம் - பசுபதியை[சிவபிரானை]த்தெய்வமாகவுடையது. மிதியடி-
அடியினால்(கால்களினால்)மிதிக்கப்படுவதுஎனப் பொருள்படுங் காரணக்குறி.