தினால் அவனை வெல்ல வல்லவர்-தமது அம்பினால் அத்துரோணனைச் சயிக்க வல்லமையுடையவர், ஒரு வயவர்-ஒருவீரரும், தாரதலத்தின்மிசை இல்லை- இந்நிலவுலகத்தில் இல்லை; இனி-, உள் உற-மனப்பூர்வமாக, சிரத்தினால்-(உனது) தலையினால், அரனை அடி வணங்கி-சிவபிரானைத் திருவடிதொழுது, இடர் தீரும் ஆறு-பிறவித்தன்பம் நீங்கும்படி, நனி சிந்தியாய் - மிகவும் தியானிப்பாயாக; (எ - று.) இனி, வரத்தினால் - துரோணன்தான் அளித்த வரத்தினால்; போர்த்தொடக்கத்திலே பாண்டவரை முன்னிட்டுக்கொண்டுவந்து தன்னைப்புகழ்ந்து தன்னைக்கொல்லும் வகையைக் கூறுமாறு தன்னையேவேண்டிய கண்ணனுக்குத் துரோணன் தானே சொல்லிக்கொடுத்த உபாயத்தின்படி யெனினுமாம். (661) 45.- வியாசன் உபதேசித்து மீள, சூரியன் அஸ்தரித்தல். ஒன்றவைம்புலனைவென்றுநீடுதவமுரிமையிற்புரிதியுற்பவம் பொன்றவென்றுறுதிகூறியன்பொடுபுகுந்ததெய்வமுனிபோதலு மன்றவென்றுமிவர்செற்றதிற்சதமடங்குசெற்றனர்களின்றெனா நின்றவென்றும்வெளிநிற்றலஞ்சிநெடுநீலவேலையின்மறைந்ததே. |
(இ-ள்.) 'உற்பவம் பொன்ற-பிறப்பு ஒழியும்படி, ஐம் புலனை -ஐந்து பொறிகளின் ஆசையையும், ஒன்ற-ஒருசேர, வென்று-சயித்து(அடங்கி), நீடு தவம்- மிக்க தவத்தை, உரிமையின்-உரிய ஒழுக்கத்துடனே, புரிதி-செய்வாயாக', என்று- ,உறுதி கூறி - உறுதிமொழிசொல்லி (உபதேசித்து), அன்போடு புகுந்த தெய்வம் முனி- அன்பொடுவந்த தெய்வத்தன்மையுள்ள வியாசமுனிவன், போதலும்- சென்றவளவிலே,-என்றுஉம் இவர் செற்றதின்-எந்நாளிலும் இவர்கள் அழித்தவளவினும், இன்று-இன்றைக்கு, சதமடங்கு-நூறுமடங்கு அதிகமாய், மன்ற- நிச்சயமாக, செற்றனர்கள்-அழித்தார்கள், எனா-என்று எண்ணி, வெளி நிற்றல் அஞ்சி-வெளியிலேநிற்பதற்குப் பயந்து, நின்ற என்றுஉம் நெடு நீலம்வேலையில் மறைந்தது-(வானத்தில்) நின்ற சூரியமண்டலமும் பெரிய நீலநிறமுள்ள (மேல்) கடலில்மறைந்திட்டது;(எ -று.)-ஏதுத்தற்குறிப்பேற்றவணி. (662) 46.-இருநிறத்தவரும் படைவீட்டை யடைதல். இருள்பரந்ததினியமையுமிற்றையமரென்றுதுன்றுகழலிட்டதா ளருள்பரந்தவிழியறனின்மைந்தனொடுசேனைபாசறையடைந்தபின் உருள்பரந்தரததுரகஞ்சரபதாதியோடுகடிதோடினான். மருள்பரந்தததனிநெஞ்சனாகியடன்மன்னர்மன்னனெனுமன்னனே. |
(இ-ள்.) இருள் பரந்தது-இருட்டுப் பரவிவிட்டது; இற்றை அமர் இனி அமையும்-இன்றைத்தினத்துப்போர் இவ்வளவோடு போதும், என்று-என்று நிச்சயித்து,துன்று கழல் இட்ட தாள் அருள் பரந்த விழி அறனின் மைந்தனொடு- பொருந்தியவீரக்கழலையணிந்த பாதத்தையும் கருணை பெருகுகின்ற கண்களையுமுடைய |