ஆன திறல் அங்கர் பூபன் - (தனது) மகனான வலிய அங்கநாட்டார்க்கு அரசனாகிய கர்ணன், பொரு படைக்கு மா முதல்வன் ஆம்-போர்செய்கின்ற (கௌரவ) சேனைக்குச் சிறந்த தலைவனாவன்', என-என்றுஎண்ணி, மகிழ்ந்து- மகிழ்ச்சிகொண்டு,-வாள் இரவி-ஒளியையுடைய சூரியன்,-'அதலம் ஆதி உலகு ஏழ்உம் ஆள் உடைய - அதலம் முதலிய கீழேழுலகங்களையும்-ஆளுதலுடைய, அரவின்-சர்ப்பராசனான ஆதிசேஷனது, மாமணி அனைத்துஉம்- சிறந்த மாணிக்கமெல்லாம், மால் உதயம் வரையின் உச்சி-பெரிய உதயகிரியின் சிகரத்திலே,வந்து உற்றது கொல் - வந்துசேர்ந்ததோ? என்ன - என்று, மேதினி -நிலவுலகத்தவர், உரைக்க- சொல்லும்படி,-முந்து தேர் கடவி உந்தினான்-சிறந்ததேரை(த் தனதுபாகனான அருணன்மூலமாக) நடத்திக்கொண்டு தோன்றினான்; (எ -று.) பயன்தற்குறிப்பேற்றவணி பின்னிரண்டடி, சூரியனது ஒளிக்கு ஆதிசேஷனதுமாணிக்கங்களின் ஒளியை உவமை கூறியவாறு. (667) பதினைந்தாம் போர்ச்சருக்கம் முற்றிற்று. ---------- துரோணபருவம் முற்றுப்பெற்றது. ---------- |