சத்தியகேது - உண்மைக்குக் கொடிகட்டியுள்ளவ னெனப் பொருள்படும் : இவனைக் காசிராஜ வமிசத்தவனான விபுவின் தந்தை யென்று கூறுகின்றனர். ஒன்றை இரண்டாக்குதல் வல்லார்செயலாதலால் அங்ஙனம் செய்தானென ஒருசமத்காரந் தோன்ற ' இரண்டாக்கி' என்றார். அளவிறந்த அழிவற்ற செல்வவொளிகளுக்குச் சிகண்டமென்றுபெயர்; அதனையுடையவன், சிகண்டீ; இது, திருமாலின் ஆயிரநாமங்களுள் ஒன்று; அதுவே இவனுக்குப் பெயராக இடப்பட்டதுபோலும். பி-ம்: சிகண்டியையுந் தேரழித்திட்டு. உத்தமபானுவை. (59) 15. | தாண்டியவெம் பரிநகுல சாதேவர் வென்னிட்டார் பாண்டியனு முதுகிட்டான் பாஞ்சாலர் புறமிட்டார் ஈண்டியவெங் களத்தவிந்தா ரெத்தனையா யிரம்வேந்தர் தூண்டியவெம் பரிநெடுந்தேர்த் துரோணன்கைத்தொடையாலே. |
(இ-ள்.) (அப்பொழுது), தூண்டிய - செலுத்திய, வெம் பரி - வேகமான குதிரைகளைப்பூட்டிய, நெடு தேர் - பெரிய தேரையுடைய துரோணன் - துரோணனது, கை - கையினால் (விடப்பட்ட), தொடையால்- அம்புகளால், தாண்டிய வெம் பரி நகுல சாதேவர் - தாவிச்செல்லுகிற வேகமுள்ள குதிரைத்தொழிலில் வல்ல நகுலனும் சகதேவனும், வென் இட்டார் - முதுகுகொடுத்தார்கள்; பாண்டியன் உம் - பாண்டியநாட்டரசனும், முதுகு இட்டான் - முதுகுகொடுத்தான் ; பாஞ்சாலர் -பாஞ்சாலராசர்கள், புறம் இட்டார் - முதுகு கொடுத்தார்கள்; (இவைஇன்றி), ஈண்டிய- நெருங்கிய, வெம்- கொடிய, களத்து - போர்க்களத்தில், அவிந்தார் - இறந்தவர்,எத்தனை ஆயிரம் வேந்தர் - மிகப்பலவாயிரம் அரசர்களாவர்; (எ -று.) நகுலன் குதிரைத்தொழிலில்வல்லவ னாதலால், 'தாண்டியவெம் பரி நகுலன்' எனப்பட்டான். தோற்றுப்பின்னிடைதலென்ற ஒரு பொருளை, வென்னிட்டார், முதுகிட்டான், புறமிட்டார் என வெவ்வேறு சொற்களாற் குறித்தது - பொருட்பின்வருநிலையணி. இங்கே பாண்டியனென்றது, அருச்சுனன்மனைவியான சித்திராங்கதையின் தந்தையாகிய சித்ரவாகனனை. (60) வேறு. 16.-துரோணனும் தருமனும் நெருங்குதல். வடுத்தரு வெஞ்சி லீமுகமும் வணக்குகொ டுஞ்ச ராசனமும் எடுத்தும னங்க தாவுசின மெழுப்பவே ழுந்தொ ரோர்நொடியில் நடுத்தகை வின்றி வானவரு நடுக்குறு கின்ற போர்முனையில் அடுத்தனர் வன்ற போதனனு மடற்றரு மன்கு மாரனுமே. |
(இ-ள்.) (பின்பு), வானவர்உம் - தேவர்களும், நடுக்கு உறுகின்ற - (கண்டுஅஞ்சி) நடுக்கமடையும்படியான, போர் முனையில் - போர்க்களத்தில், வல்தபோனன்உம் - வலிமையையுடைய துரோணாசாரியனும், அடல் தருமன் குமாரன்உம் - வலிமையையுடைய தருமபுத்திரனும், மனம் - (தம்தம்) மனத்தில், கதாவு - மிகுதியாகப் பொருந்திய, சினம் - கோபம், எழுப்ப - (தம்மைத்) தூண்ட, வடு தரு - விரணத் |