கண்ணன் துரியோதனனிடந் தூதுசென்றபொழுது விசுவரூபத்தின் பின் அசுவத்தாமனைத் தனியேயழைத்து அவனுடன் சில பேசிக் கொண்டிருக்கையில், தன்கைம்மோதிரத்தைக் கீழேநழுவவிட, அதனை அசுவத்தாமன் இயல்பாக எடுத்துக்கொடுக்கையில், கண்ணபிரான் வாங்கிக்கொள்ளாமல் 'சூரியனைப் பரிவேஷம் சூழ்ந்துள்ளது பார்' என்னவே, அவன் ஆகாயத்தை நோக்கினான்; இதனைத் தூரத்தினின்று பார்த்திருந்த துரியோதனாதியர்க்கு 'அசுவத்தாமன் கண்ணன்கைம் மோதிரத்தைத் தன்கையில்வாங்கிப் பூமியைத்தொட்டு ஆகாயத்தை நோக்கிச் சூரியன்சாட்சியாக ஏதோ சபதஞ் செய்துதந்தான்' என்று அசுவத்தாமனிடம் அவநம்பிக்கை யுண்டாக, அதனால் அவர்கள் அவனை இரகசியமான ஆலோசனைகளுக்கு உடன்கொள்ளாராயினர் : ஆகவே, இவனுக்கும் அவர்களிடம் அபிமானம் குறைந்தது; ஆனதுபற்றியே, 'துரோணனமைந்தன் நீடமர் முனைந்து செய்யான்' என்றான். இங்ஙனம் கண்ணன் தந்திரமாக மித்திரபேதஞ்செய்ததே, மேல் துரோணனிறப்ப தன்பின்பு இவனைச் சேனாபதியாக்காததற்கும் முக்கியகாரணமாம். துரோணன் மனைவியான கிருபியின் அழகைக் கேட்டும் ஒருகால் கண்டும் மிகக்காதல்கொண்ட சிவபிரானருளினாற் குதிரையினிடம் பிறந்தவன் அசுவத்தாமன். வெல்வம் என்னாது வென்றனம் என இறந்தகாலத்தாற் கூறினது, விரைவுந் தெளிவும் பற்றிய காலவழுவமைதி ; [நன். பொது. 33.] தெய்வாமிசமான கண்ணன் கூறியவை யாவும் அங்ஙனமே தவறாமல்நடத்தலால், 'மெய்ம்முகில்வண்ணன் சொல்ல' என்றார். 4.-துரியோதனன் படைவீரருடனும் துரோணனுடனும் போர்க்களஞ் சேர்தல். மாதனத்தளகையாளுமன்னெனவானிற்பாக சாதனக்கடவுளென்னத்தகும்பெருந்தரணிவேந்தன் சேதனப்படைஞரோடுஞ்சேனையின்காவலான வேதநற்குருவினோடும்வெங்களம்வந்துசேர்ந்தான். |
(இ - ள்.) மா தனத்து - மிக்க செல்வத்தையுடைய, அளகை ஆளும் மன் என - அளகாபுரியை ஆளுகிற அரசனான குபேரனென்றும், வானில் - சுவர்க்கத்தில் (அரசனாய்வாழ்கிற), பாகசாதனன் கடவுள் என்ன - இந்திர தேவ னென்றும், தகும் - (உவமை) சொல்லத்தக்க, பெரு - சிறப்புள்ள, தரணி வேந்தன் - நிலவுலகத்து அரசனாகிய துரியோதனன், சேதனம் படைஞரோடுஉம் - (பகைவரை) வெட்டுந்தன்மையுள்ள ஆயுதவீரர்களுடனும், சேனையின் காவல் ஆன - சேனையைப் பாதுகாப்பவனாகிய, வேதம் நல் குருவினோடு உம் - வேதம்வல்ல சிறந்த ஆசிரியனான துரோணனுடனும், வெம் களம் - கொடியபோர்க்களத்தில், வந்துசேர்ந்தான்-; (எ - று.) குபேரனும் தேவேந்திரனும் துரியோதனனுக்குச் செல்வச் சிறப்பில் உவமை. குபேரன், பிரமனிடம் பெருவரம்பெற்று அதனால் நவநிதிநாயகனும் தநாதிபதியும் திக்குப்பாலகருள் ஒருவனுமாகி, பின்பு தந்தையின் கட்டளையால் கைலாசத்திற் சென்று |