னிடத்து, சென்ற - போய்ச்சேர்ந்த, சேனை மன்னர்தாம் உம் - சேனைகளோடுகூடிய (இப்பக்கத்து) அரசர்களில் இன்னாரின்னாரும், எங்கண்உம்- எல்லாவிடத்தும், செரு செய்தார்- போர்செய்தார்கள், என்று கூறி - என்று பகுப்பிட்டு, எதிர் உரைத்தல் - நேராகச்சொல்லுதல், யாவர்க்குஉம் - எவருக்கும், முடிவு உறாது - முடியாது; (அப்போரில்), ஓர் ஒர் உடலம் - (போர்வீரர் பலரது ) ஒவ்வொரு உடம்பும், ஒன்று நூறு சின்னம் ஆ - ஒவ்வொன்று நூறுதுண்டுகளாக, உடைந்தது - சிதைந்தது; (எ-று.) கீழ்க்கவியிற்கூறிய முறைமைக்கு ஏற்ப, இக்கவியில், 'நின்ற சேனை மன்னர்' எனத் துரியோதனன் பக்கத்தாரையும், 'சென்ற சேனைமன்னர்' எனத் தருமன்பக்கத்தாரையும், முறையே குறித்தது - முறைநிரனிறைப்பொருள்கோள். குருக்ஷேத்திரம் அப்பொழுது துரியோதனனாளுகைக்கு உட்பட்டிருந்ததனால், அதில்'நின்றமன்னர்' அவரும், 'சென்றமன்னர்' இவருமாவர். பி-ம்: என்றுகூறியிகலுரைக்கில். (75) 31.- துரியோதனன்பக்கத்து நால்வகை வீரரிலும் பலர் இறந்தமை. வேல்விதத்தும்வாள்விதத்தும்வில்விதத்துவிடுநெடுங் கோல்விதத்துமுடிதுணிந்தகொற்றமன்னர்சற்றலார் நூல்விதத்துமிக்ககேள்விநோன்சிலைக்கைம்முனிபடைக் கால்விதத்துரததுரங்ககயவிதத்துவயவரே. |
(இ-ள்.) நூல் விதத்து - சாஸ்திரங்களின் வகைகளிலே, மிக்க - மிகுந்த, கேள்வி - பொருட்கேள்விகளையுடைய, நோன் சிலை கை முனி - வலிய வில்லையேந்திய கையையுடைய துரோணனது, படை- சேனையிலுள்ள, கால்விதத்து - காலாள்வகைகளையும், ரதம் துரங்கம் கயம் விதத்து- தேர் குதிரை யானை இவற்றின் வகைகளையும் (ஆகச் சதுரங்கங்களையும்) உடைய, வயவர்- வீரர்களுள் (பகைவர்களது), வேல் விதத்துஉம் - வேல்களின் வகைகளாலும் வாள்விதத்துஉம்- வாள்களின் வகைகளாலும், வில் விதத்து விடு - விற்களின் வகைகளால் எய்யப்பட்ட, நெடு கோல் விதத்துஉம்- நீண்ட அம்புகளின் வகைகளாலும், முடி துணிந்த - தலையறுபட்ட, கொற்றம் மன்னர் -(முன்பு) வெற்றியையுடைய அரசர்கள், சற்று அலார்- கொஞ்சமல்லர் [மிகப்பலர் என்றபடி]; ( எ-று.) வேல்விதம்- குத்துவேல், எறிவேல், கைவேல் முதலியன வாள்விதம் - பெருவாளும், உடைவாளும் முதலியன. கோல்விதம் - நெட்டம்பு, மொட்டம்பு, பிறைமுகவம்பு முதலியன: அஸ்திரங்களும் இதில் அடங்கும். அஞ்சிப் பின்னிடாது பொருது அழிந்தமையின்,'கொற்றமன்னர்' எனப்பட்டார். உயர்திணைப் பொருளாதலின்,காலாள்களை முன்னர்க் கூறினார்; 'துறக்கம் புகு வேட்கையுடைமையின் காலாளைமுற்கூறி' என்பர், நச்சினார்க்கினியர். காலாள்வகைகள்- வில்வீரர், வாள்வீரர்,வேல்வீரர். கொல்வது கோல் எனக் காரணக்குறி. (76) 32.- இரண்டுகவிகள்- தருமன்பக்கத்துச் சேனாவீரரின் செயல் கூறும். குத்துவார்படைக்கலங்கள்கொண்டுமற்குறிப்பினான் மொத்துவாரிரண்டுதேருமுட்டவிட்டுமொய்ம்பினால் |
|