(உடம்பு) இரண்டுதுண்டுபட்டு, இறந்துபோன-, மன்னர் அன்றி அரசர்க ளல்லாமல், நின்ற - (இறவாமல் மிச்சமாய்) நின்ற, மன்னர் எவர்உம்- ( துரியோதனசேனை) அரசர்களெல்லோரும்,- பிறந்து- (ஒருத்திமகனாய் ஓரிடத்துப்) பிறந்து, போய்- (உடனே அவ்விடத்தைவிட்டு) நீங்கி, வளந்த பின் - (பின்பு ஒருத்திமகனாய் ஓரிடத்தில்) வளர்ந்த பிறகு, பிறப்பு உணர்ந்த- (தன்) பிறப்பு வரலாற்றை யறிந்துகொண்ட, பெருமன்உம் - சிறந்த அரசனான கர்ணனும்,- பறந்து போய்- வேகமாகச்சென்று, நெடு பணி பதாகையானொடு - நீண்டபாம்மை யெழுதிய கொடியையுடைய துரியோதனனுடன், எய்தினார்- சேர்ந்தார்கள்; ( எ -று.) நெடுமை - பணிக்கும், பதாகைக்கும் அடைமொழியாம், பிறப்பு உணர்ந்தது, பாண்டவர்க்காகத் தூதுவந்தபொழுது கண்ணன் இரகசியமாகச்சொன்னதனாலும் , அதன்பின் அவன்கட்டளைப்படி குந்திவந்த கூறியதனாலும் என்க. பெருமன்- பெருமானென்பதன் விகாரமுமாம். கண்ணன் பாண்டவர்க்குத் தூதாய்வந்தமைபற்றி அவனையும், அவனுக்குத் தன்வீட்டில் இடங்கொடுத்து விருந்து செய்து உபசரித்தமைபற்றி விதுரனையும், துரியோதனன் பலவாறு இராசசபையில் தூஷிக்க, விதுரன் கடுங்கோபங்கொண்டு 'பாதகனாகிய உன்பொருட்டுப் போர்செய்யேன்: இத்தனைநாளாய் உன் சோற்றயுண்டமைபற்றி உனக்கு எதிராகப் பாண்டவரோடு சேர்ந்தும் பொரேன்' என்றுசொல்லித் தனது வில்லை இரண்டு துண்டாக முறித்துப்போகட்டுவிட்டுத் தீர்த்தயாத்திரைக்குப் பல ராமனுடன் சென்றிட்டானென்பது, கீழ்உத்தியோகபருவத்துவந்த வரலாறு. விதுரன் - வில்முதலியபடைத்தொழில்களில் மற்றை யாவரினும் மிகவல்லவன்; இவனை, யமதருமராசனதுஅமிசமென்றும், பரமபாகவதர்களில் ஒருவ னென்றும் நூல்கள் கூறும். (83) 39.-இரண்டுகவிகள்- புறங்கொடுத்துவந்ததுணர்ந்த துரியோதனன், சேனைகளை நெருங்கச்செல்ல ஏவித் தானும் பொரச்செல்லுதல் கூறும். வதிட்டனுந்துதிக்கும்வாய்மைவரிசிலைக்கைம்முனிவனோ டுதிட்டிரன்புரிந்தபோருரைக்கவேயுணர்ந்துளான் பதிட்டிதம்பிறந்ததின்றுபாண்டவர்க்குஞாலமென் றதிட்டமொன்றுமுணர்கலானுமனிலவேகமாயினான். |
(இ -ள்.) (துரியோதனனைச்சேர்ந்தஅரசர்கள்யாவரும்), வதிட்டன்உம் துதிக்கும்- வசிஷ்டமகாமுனிவனுந் தோத்திரஞ் செய்யும் படியான, வாய்மை- சத்தியவார்த்தையையும், வரி சிலை கை - கட்டமைந்தவில்லையேந்திய கையையுமுடைய, முனிவனோடு- துரோணனுடனே, உதிட்டிரன் புரிந்த - தருமபுத்திரன்செய்த, போர்- யுத்தத்தின்தன்மையை [துரோணனைத் தருமன் வென்றதை], உரைக்கவே- சொல்லவே, உணர்ந்துளான்- (அதனை) அறிந்தவனாய், அதிட்டம் ஒன்றுஒம் உணர்கலான்உம் - வினைப்பயனைச் சிறிதும் ஆலோசித்தறியாதவனான துரியோதனனும், 'இன்று-இப்பொழுது, பாண்டவர்க்கு - பாண்டு புத்திரர்க்கு, ஞாலம் - பூலோகம், பதிட்டிதம் பிறந்தது - நிலைநின்றதாய்விட்டது,' என்று- என்றுஎண்ணி, அனிலம் வேகம் ஆயினான் - வாயுவேகமுடையவனாய் வந்தான்; |