பக்கம் எண் :

பன்னிரண்டாம் போர்ச்சருக்கம்61

ஆன பொழுதில் - (அந்தப்பகதத்தன்) வந்த சமயத்தில்,- ( எ-று.)-" திருகின,***
முடுகினர்" என மேற்கவியில் முடியும்.

     'எழிலாவது - வளர்ந்தமைந்தபருவத்தும் இதுவளர்ந்துமாறிய தன்றி இன்னும்
வளருமென்பது போன்று காட்டுதல்' என்றார், நச்சினார்க்கினியர். மொழி -
யானையை அதட்டுதற்குக் கூறுஞ் சொற்களும், வீரவாதமும். புயகிரி -
முன்பின்னாகத் தொக்க உவமைத்தொகை. மிக்ககோபாவேசத்தால் தோள்கள்
புடைபருத்தலும், உடம்புவேர்த்தலும், கண்கொடிதாதலும் இயல்பு.         (92)

48.-அப்போது புறங்கொடுத்த துரியோதனன் பக்கத்தார் பொரமீள, 
தருமனும் அபிமனும் எதிர்கொள இருதிறத்தார்க்கும் போர்நிகழ்தல்.

பொருதுபுறகிட்டசேனையிவன்வருபொலிவொடுபுறக்கிடாதுதிருகின,
வரவினையுயர்ந்தகோவுமிளைஞருமவனிபருமொத்துமீளமுடுகினர்,
முரசெழுதுபொற்பதாகைநிருபனுமுதலமர்செகுத்தவாகையபிமனு.
மிருகைமலர்கொட்டியாடியெதிர்கொளவிருபடையு
                                 முற்றபூசல்விளையவே.

     (இ-ள்.) பொருது புறகு இட்ட சேனை - (கீழ்ப்) போர்செய்து பின்னிட்ட
(துரியோதனன்) சேனைகள், இவன் வரு பொலிவொடு- இப்பகதத்தன் (துணை)
வருகிற உற்சாகத்தால், புறக்கிடாது திருகின- பிற்படாமல் (போருக்குத்) திரும்பின;
அரவினை உயர்த்தகோஉம் - பாம்புக்கொடியை உயர நாட்டிய துரியோதனனும்,
இளைஞர்உம்- அவன்தம்பிமார்பலரும், அவனிபர்உம்- (மற்றை) அரசர்களும்,
ஒத்து-கூடி, மிள முடுகினர் - மறுபடி வேகமாகவந்தார்கள்; (அங்ஙனம்
வந்தவர்களை), முரசு எழுத பொன் பதாகை நிருபன் உம்-
முரசத்தின்வடிவத்தையெழுதினஅழகிய கொடியையுடைய தருமனும், முதல் அமர்
செகுத்த வாகை அபிமன்உம்-முந்தின போரில்(பகையை) அழித்த வெற்றியையுடைய
அபிமந்யுவும், இரு கை மலர்கொட்டி ஆடி - (உற்சாகத்தோடு) தாமரைமலர்போன்ற
(தம்தம்) கைகளிரண்டையும்தட்டிக் கூத்தாடிக்கொண்டு, எதிர்கொள- எதிர்கொள்ள,-
இருபடைஉம்-இருதிறத்துச்சேனைகளிலும், உற்ற பூசல் விளைய - மிக்கபோர்
உண்டாக,- (எ - று.)"வாயு குமாரன் குத்தி" என வருங்கவியோடு தொடரும்.

     பிறகு என்பதுபோல, புறகு என்பதும்- பின் என்னும்பொருள் தருவதோர்
இடைச்சொல்லாம். புறகு + இடாது - புறக்கிடாது; உயிர்த்தொடரில் சிறுபான்மை
ககரவொற்று இரட்டிற்று. பொற்பதாகை- பொற்காம்பு அமைந்த துவசமுமாம்;
பொன்-அதனாலாகிய தண்டத்துக்குக் கருவியாகுபெயர். 'முதல் அமர்' என்றது-
பதினொன்றாநாட்போரையும், இப்பன்னிரண்டாநாட்போரில் இதற்கு
முந்திநடத்ததையும்.                                            (93)

49.- மூன்றுகவிகள்- பகதத்தனுக்கும் வீமனுக்கும் நிகழ்ந்த
கைகலந்த போரைக் குறிக்கும்.

நிசிசரனெடுத்தவாதிகயிலையுநிகரலவிதற்கெனாமுன்வருகரி,
விசையுடனடத்திவீமனெவணவன்விறன்முடிதுணித்துமீள்
                                    வனினியென,
வசைபலபிதற்றிவேகமுடன்வரும்வலியாபகதத்தன்வாகு