நல்லுபாயமேற்பட ஆலோசித்து,- வேறு ஒர் திசையினில்- வேறொருதிக்கிலே, இமிழ்முரசு அரற்று பூசல் புரிதரும் - ஒலியையுடைய பேரிகைகள் ஆரவாரிக்கிற பெரும்போரைச் ( சஞ்சத்தகரோடு) செய்கிற, இளையவன் - (தன்) தம்பியான அருச்சுனன், நடத்து -ஏறிச்செல்கிற, தேரின்- இரதத்தின், வலவனை- சாரதியும், நிமலனை-குற்மற்றவனும், அனைத்துஉம் ஆனஒருவனை - எல்லாச் சராசரங்களின் வடிவமான ஒருத்தனுமாகிய கண்ணபிரானை, மனத்தினோடு பரவி- கருத்தினோடு துதித்து, நினையினன் - நினைத்தான் [தியானித்தான்]; ( எ-று.) நிமலன்- தான் கருமசம்பந்தமில்லாதவனாதல் மாத்திரமே யன்றி, தனக்குச் சரீரமாகவுள்ள சராசரங்களின் வினைகளுந் தொடரப்பெறாதவன் "ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத்" என்றபடி சகல சேதநாசேதநங்களின் உள்ளும் புறம்பும் எம்பெருமான் வாசியறக் கலந்துநிற்றலின்,' அனைத்துமான ஒருவன்' என்றார். 'அனைத்து' என்பது- சொல்லால் ஒருமையாயினும், பொருளால் பன்மைகுறிக்கும். 'தேரின் வலவனை, நிமலனை, அனைத்துமான வொருவனை' என்றவற்றால், எம்பெருமானது சௌலப்பியமும், பரத்துவமும், ஜகச்சரீரகத்வமும் விளங்கும், 'இமிர்முரசமெற்றுபூசல்' என்ற பாடம், சந்தத்துக்குப் பொருந்தாது; 'இமிர்சமுரமெற்று'என்றிருப்பின் பொருந்தும். விறலொடுணர்வுற்று என்ற பாடத்துக்கு- உறுதியாகஆலோசித்து என்க. (99) வேறு. 55.- சஞ்சத்தகரைவென்ற அருச்சுனனோடு தருமன்செய்தியை ஸ்ரீக்ருஷ்ணன்கூறுதல். நினைவுற்ற பொழுதெழுது முரசுற்ற கொடிநிருப னியமித்த படித ரியலார், முனைமட்க வமர்பொருது செயமுற்றி யுவகைபெறு முகிலொத்த வடிவினெடுமால், புனைவிற்கை யடுபகழி திசைசுற்று மறையநனி பொழிகொற்ற விசயனுடனே, வினைமுற்றி யுயர்தருமனுடனிற்றை யரியவமர் விளைவுற்ற தெனவுரைசெய்தான். |
(இ-ள்.) நினைவு உற்ற பொழுது - (அங்ஙனம் தருமபுத்திரன்) தியானித்தவளவிலே,- எழுது முரசு உற்ற- எழுதப்பட்ட பேரிகைவடிவம் பொருந்தின,கொடி - துவசத்தையுடைய, நிருபன் - தருமபுத்திரன், நியமித்தபடி- கட்டளையிட்டபடி, தரியலார் முனை மட்க - பகைவர்கள் போரில் அழியும்படி, அமர் பொருது - போர் செய்து, செயம் முற்றி - வெற்றி மிக்கு, உவகை பெறு- மகிழ்ச்சி பெற்ற, முகில் ஒத்த வடிவின் நெடு மால் - மேகத்தை யொத்த திருமேனியையுடைய பெருமைக்குணமுள்ள கண்ணபிரான்,- கை- (தன் ) கையில், புனை - தரித்த, வில்- வில்லினின்று, அடு பகழி - கொல்லும் அம்புகளை, திசை சுற்றுஉம் மறைய- திக்குக்கள் முழுதும் மறையும்படி, நனிபொழி - மிகுதியாகச் சொரிகிற, கொற்றம் விசயனுடனே - வெற்றியையுடைய அருச்சுனனோடு,-' இற்றை - இப்பொழுது, வினை முற்றி உயர் தருமனுடன் - போர்தொழிலில் மிகப்பயின்று [தேறிச்] சிறந்த யுதிட்டிரனோடு, (பகைவர்க்கு) |