தோடு, எறிய- வீச,-(எ -று.)-"அயிலதனை*** தறிவித்து" என வருங் கவியோடு தொடரும். உவமித்தல் - ஒத்தல் அவநீபதி- வடமொழித்தொடர்; பூமிக்குத் தலைவன். விலக=விலக்க. சந்தவின்பம் நோக்கிவந்தது, பி-ம்: அவனிபதிதன். அவன்மா.(105) 61. | எறிகுற்ற வயிலசுரருயிர் செற்றவயிலதனையெதிர்முட்ட விடுபகழியாற், றறிவித்துமகபதிதன்மகன் முக்கணிறைவனொடுசரி யொத்துமுறுவல்புரியா, வெறிமத்தகரடமுகபடமொத்தபுகர்கொண்முகவிகடக்கைம் மலையணியெலா, முறியத்தன்வரிவிலுமிழ்முனைபட்டபகழிமழைமுகில் வற்கமெனமுடுகினான். |
(இ-ள்.) மகபதிதன் மகன் -இந்திரனுக்குக் குமாரனான அருச்சுனன்,- எறிகுற்றஅயில்- (பகதத்தன் கண்ணன்மேல்) எறிந்த ஆயுதமும், அசுரர் உயிர் செற்ற அயில்-(முன்பு) அசுரர்களது உயிரை அழித்த வேலும் ஆகிய, அதனை- , எதிர் முட்டவிடு பகழியால்- எதிரிலே தாக்கும்படி பிரயோகித்த அம்புகளால், தறிவித்து -துண்டுபடச்செய்து,- முக்கண் இறைவனோடு சரி ஒத்து- மூன்று திருக்கண்களையுடைய தலைவனான சிவபிரானுடன் மிகவும் ஒத்து, முறுவல் புரியா -கோபநகை செய்து, வெறி- கோபாவேசத்தையும், மத்த கரடம்- மதநீர்கொண்டகபோலங்களையும், முகபடம் ஒத்த புகர்கொள் முகம்- முகபடாத்தைபோன்றசெம்புள்ளிகளைக் கொண்ட முகத்தையும், விகடம் - மதமயக்கத்தையும், கை-துதிக்கையையுமுடைய, மலை- மலைபோன்ற (பகதத்தன்) யானைகளின், அணிஎலாம்- வரிசைகள் யாவும், முறிய - அழியும்படி, தன் வரி வில் உமிழ்- தனது கட்டமைந்தவில்லினால் வெளிவிடப்பட்ட, முனைபட்ட பகழி மழை- கூர்மை மிக்கஅம்புமழையை, முகில் வற்கம் என- மேகக்கூட்டம்போல, முடுகினான்- விரைவிற்செலுத்தினான்; (எ- று.) சிவபிரான் சிரித்துப் புரந் துடைத்ததனால்,' இறைவனோடு சரி யொத்து முறுவல் புரியா' என்றார். சரியொத்து- முழுவதும் ஒத்து எனக் கருத்துக் கொள்ளலாம். முகபடம் - யானைக்கு அலங்காரமாக முகத்தின்மேல் இடும் போர்வை.முகத்தின் மேல் உத்தம விலக்கணமாகிய செம்புள்ளிகள் நிறைந்திருத்தல், செந்நிறப்பட்டாடைபோர்த்தது போன்ற உள்ளதனால், 'முகபடமொத்த புகர் கொள் முகம்' எனப்பட்டது. அசுரர் - தேவர்க்கு எதிரானவர்; இச்சொல் பகைவருயிரைக் கவர்பவ ரென்றுங்காரணப் பொருள்படும்: அஸு - உயிர். முனைபட்ட - பகழி - போரில் மிகப்பயின்ற அம்பு எனினுமாம். எறி குற்றம் அயில் என்று பிரித்து - நீங்கிய குற்றத்தையுடைய [குற்றம் நீங்கிய] வேல் என்றும் பொருள் கூறலாம். பி -ம்: பகழியிற். முகபட சித்ரபுகர்கொள். (106) 62. | அணிகெட்டுமதகரிகள்கரமற்றுவிழமுதியசிரமற்றுவிழ வருகுதாழ், மணியற்றவிழநெடியகுடரற்றுவிழமுறைகொள்வயிறற்று விழவுடலெலாந், துணிபட்டு விழவிசிறு செவியற்று விழவலியதொடையற்று விழமகரிகைப், பணிபெற்றபணைகளொடுபதமற்றுவிழவுழுதுபடுவித்தபல பகழியே. |
|