பக்கம் எண் :

72பாரதம்துரோண பருவம்

     (இ-ள்.) மத கரிகள் - மதயானைகள், அணி கெட்டு- ஒழுங்கு கெட்டு, கரம்
அற்று விழ- துதிக்கையறுந்துவிழவும், முதிய சிரம் அற்று விழ- பழமையான[முற்றின
வலிய] தலை யறுந்துவிழவும், அருகு தாழ் மணி அற்று விழ -
பக்கங்களில்தொங்குகிற மணிகள் அறுந்துவிழவும், நெடிய குடர் அற்று விழ -
மலைக் குகையை யொத்த [உள்விசாலமான] வயிறு அறுந்துவிழவும், உடல் எலாம்
துணி பட்டு விழ - உடம்புமுழுவதும் துண்டாகி விழவும், விசிறு செவி அற்று விழ-
(எப்பொழுதும்) வேகமாக வீசுகிற காதுகள் அறந்த விழவும், வலிய தொடை அற்று
விழ - வலிமையுடைய தொடை யென்னும் உறுப்புக்கள் அறுந்து விழவும், மகரிகை
பணிபெற்ற பணைகளொடு- பூணாகிய ஆபரணத்தைத் தரித்த தந்தங்களுடன், பதம்
- கால்களும், அற்ற- அறுபட்டு, விழவும், பல பகழி - (அருச்சுனனது) அநேக
அம்புகள், உழுது- நன்றாகப்பாய்ந்து, படுவித்த - அழித்தன; (எ -று.) பி -ம்:
உடல்களும்.                                                    (107)

63. அப்போது பகதத்தன் திருமால் தந்திருந்த வேலை எறிய,
ஸ்ரீக்ருஷ்ணன் அதனை மார்பிலேற்றல்.

பெயர்பெற்றகரிவயவர் பிணமிக்கவமரினிடைபிறகிட்டு
                               முறியுமளவே,
சயசக்ரதரனையிவன் வழிபட்டபொழுதுதருதழலுக்ரமுடைய
                                தொருவேல்,
வயமுற்ற சிலை விசயனுடலத்தினெறிவது தன்
                        வடிவத்திலுறவுதவினா,
னயர்வுற்றவுணர் வினலமென முத்தி முதல்
                   வனெனவருகுற்றரதவலவனே.

     (இ-ள்.) (இங்ஙனம் எய்யப்பட்ட அருச்சுனனம்புகளால்), பெயர் பெற்ற கரி
வயவர் - பிரசித்திபெற்ற யானை வீரர்கள், பிணம் மிக்க அமரினிடை-
பிணங்கள்மிகுந்த அப்போர்க்களத்திலே, பிறகு இட்டு முறியம் அளவே -
பின்னிட்டுஅழியும் அத்தருணத்தில்,- இவன்- பகதத்தன், சய சக்ரதரனை-
வெற்றியையுடைய சக்ராயுதத்தை யேந்திய திருமாலை, வழிபட்ட பொழுது -
(தான் முன்பு)பூசித்தகாலத்தில், தரு - (அப்பெருமானால் தனக்குக்)
கொடுக்கப்பட்ட, தழல் உக்ரம்உடையது ஒரு வேல்- நெருப்புப்போலுங்
கொடுமையுடையதொரு வேலாயுதத்தை,வயம் உற்ற சிலை விசயன் உடலத்தில்
எறிவது- வெற்றிபொருந்தின வில்லையுடையஅருச்சுனனது உடம்பின்மேல்
வீசியெறிய அவ்வேல், தன் வடிவத்திற் உற-(அவ்வருச்சுனனனுடம்பிற்படாமல்)
தன் உடம்பிற்படும்படி[தன்மார்பிற்பொருந்துமாறுஏற்று],- முத்தி முதல்வன் என
அருகு உற்ற - மோக்ஷத்துக்குத்தலைவனென்றுசொல்ல (அவ்வருச்சுனனது)
சமீபத்திற் பொருந்திய, ரதம் வலவன்- தேர்ப்பாகனானஸ்ரீ கிருஷ்ணபகவான்,
அயர்வு உற்ற உணர்வின் நலம் என - மனக்கவற்சியிலுதவிய
அறிவின் நற்பய னென்று சொல்லும்படி, உதவினான்- துணைசெய்தருளினான்;
(எ-று.)

     பகதத்தன் தனக்கு முன்பு திருமால் கொடுத்திருந்ததொரு வேற்படையை
அப்பொழுது அருச்சுனனைக் கொல்லும்படி அவன் மார்பின்மேலெறிய, அதனைத்
திருமாலின் அவதாரமாகிய கண்ண