திரிதத்த விழுவ தெனவே, கரிதத்த மறியலகை கடைதத்தி யுவகையொடு களமுற்று நடந விலவே. |
(இ -ள்.) பரி - குதிரைகள், தத்த - தாவிச்செல்ல, வரும் - வருகிற, இரதம்மிசை - (அருச்சனனது) தேரின்மேல், தத்த - பாயும்படி, எதிர் முடுகு - எதிரிலே (யானையோடு) விரைந்துவருகிற, பகதத்தன்- பகதத்தனது, உடல் முழுவதும்எம்- உடம்புமுழுவதிலும், நீடு எரி தத்தி உகுவது என - மிக்க நெருப்புப்பற்றிச் சிந்துவதுபோல, உகுவித்த - சொரிவித்த, குருதி நதி - இரத்தவாறு,இடைதத்த - அவ்விடத்திலே பெருகவும், வலி கெழுவு தோள் கிரி - பலம் மிக்கமலைகள் போன்ற தோள்கள், தத்த - ஒடியவும், மகுடமொடு தலை தத்த -கீரீடத்தோடு தலை சிதறவும், ஒரு ரசத கிரி தத்தி விழுவது என - வெள்ளிமலையொன்று முறிந்துவிழுவதுபோல, கரிதத்த - (வெள்ளை) யானை இறந்துவிழுவும், மறிஅலகை- (எதிர்ப்பட்டாரை) அகப்படுத்துந்தன்மையுள்ள பேய்கள், கடை தத்தி-அவ்விடத்தில் நெருங்கி, உவகையொடு - மகிழ்ச்சியுடனே, களம் முற்றுஉம்-போர்க்களம் முழுவதிலும், நடம் நவில - கூத்தாடவும், - (எ - று.)-" பகதத்தனும்பட்டு அவனூர்ந்த பகடும் பட்டு" என அடுத்த கவியோடு தொடரும். 'தத்த' என ஒருசொல்லே பலவிடத்தும் வந்தது, சொற்பின் வருநிலையணி. 'வினைப்பகுதிகள் வேண்டியபொருளை விளைக்கும்' என வடநூலார் கூறிய நியாயத்தால், இக்கவியில் 'தத்த' என்னுஞ்சொல்லுக்கு - சந்தர்ப்பத்திற்குஏற்பப் பல பொருள் உரைக்கப்பட்டது. ரஜதம், நடம் - வடசொற்கள். பி -ம்: கெழுபுயக். (111) வேறு. 67. | பகதத் தனும்பட் டவனூர்ந்த பகடும் பட்டுப்புடைசூழச் சிகரக் கிரிபோ லணிநின்ற சேனைக் களிறும் பட்டமைகண் டிகலிற்பொழிகார்வெஞ்சிலைக்கையிமையோர்தலைவன் குமரனையும் புகழ்தற் கரிய பாகனையும் புகழா ரில்லைப் பூபாலர். |
(இ-ள்.) (அருச்சுனன்னெய்த கண்ணனம்பினால்), பகதத்தனும்--, பட்டு - இறந்து, அவன் ஊர்ந்த பகடுஉம் - அவன் ஏறிச்செலுத்திய சுப்பிரதீக யானையும், பட்டு - இறந்து, புடை சூழ - (அவனது) பக்கங்களிற் சுற்றிலும், சிகரம் கிரி போல் -உச்சியையுடைய மலைகள்போல, அணி நின்ற - ஒழுங்கு படநின்ற, சேனைகளிறுஉம் - சேனையாகவுள்ள யானைகளும், பட்டமை - இறந்ததை, கண்டு -பார்த்து, - பூபாலர் - அரசர்கள்,- இகலின் பொழி - வலிமையோடு மழைபொழிகிற,கார் - காளமேகம்போன்ற, வெம் சிலை கை இமையோர் தலைவன் குமரனைஉம் -கொடிய வில்லை ஏந்திய கையையுடைய தேவராசகுமாரனான அருச்சுனனையும்,புகழ்தற்கு அரிய பாகனை உம் - துதிக்க முடியாத [அளவிறந்த மகிமையுடைய]பார்த்தசாரதியான கண்ணனையும், புகழார் இல்லை - கொண்டாடிப் பேசாதாரில்லை;(எ - று.) |